பொது செய்தி

இந்தியா

மேற்கு வங்கத்தில் தேர்தல் பிரசாரத்திற்கான நேரம் மாற்றம்!

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (10)
Share
Advertisement
கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், 45 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அடுத்த கட்ட தேர்தல்களுக்கான பிரசார நேரத்தில், தேர்தல் ஆணையம் அதிரடியாக சில மாற்றங்களை அறிவித்துள்ளது. ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு, 72 மணி நேரம் முன்னதாக, பிரசாரத்தை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைசி மூன்று கட்ட ஓட்டுப்பதிவை,
மேற்கு வங்கம்,தேர்தல் பிரசாரம்,நேரம்

மாற்றம்!

கோல்கட்டா :மேற்கு வங்கத்தில், 45 சட்டசபை தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக இன்று தேர்தல் நடக்கிறது. கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதால், அடுத்த கட்ட தேர்தல்களுக்கான பிரசார நேரத்தில், தேர்தல் ஆணையம் அதிரடியாக சில மாற்றங்களை அறிவித்துள்ளது.

ஓட்டுப்பதிவு துவங்குவதற்கு, 72 மணி நேரம் முன்னதாக, பிரசாரத்தை நிறுத்தும்படி உத்தரவு பிறப்பித்துள்ளது. கடைசி மூன்று கட்ட ஓட்டுப்பதிவை, ஒரே கட்டமாக நடத்த, முதல்வர் மம்தா பானர்ஜி வைத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது.மேற்கு வங்கத்தில், முதல்வர் மம்தா பானர்ஜி தலைமையிலான, திரிணமுல் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. இம்மாநிலத்தில், எட்டு கட்டங்களாக சட்டசபை தேர்தல் நடக்கிறது. ஏற்கனவே நான்கு கட்ட தேர்தல்கள் நடந்து முடிந்துள்ளன. மீதமுள்ள தொகுதிகளுக்கு, வரும் 29 வரை, மேலும் நான்கு கட்டங்களாக தேர்தல் நடக்கிறது.


பாதுகாப்புஇந்நிலையில், 45 தொகுதிகளுக்கு, ஐந்தாம் கட்டமாக இன்று ஓட்டுப்பதிவு நடக்கிறது. கடந்த, 10ம் தேதி நடந்த நான்காம் கட்ட ஓட்டுப்பதிவின் போது, கூச் பெஹாரில் ஏற்பட்ட கலவரத்தில், ஐந்து பேர் உயிரிழந்தனர். இதையடுத்து, இன்று நடக்கும் ஐந்தாம் கட்ட தேர்தலுக்கான பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டு உள்ளன.தேர்தலை சுதந்திரமாகவும், அச்சமின்றியும் நடத்திட, மத்திய படைகளின், 853 கம்பெனிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன. வன்முறையை தடுக்க, கூடுதல் பார்வையாளர்கள் நியமிக்கப்பட்டு உள்ளனர்.மேற்கு வங்கத்தில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளது. இதையடுத்து, ஓட்டுப்பதிவின் போது, கொரோனா தடுப்பு விதிமுறைகளை கடுமையாக கடைப்பிடிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது. மொத்தமுள்ள, 45 தொகுதிகளில், 342 வேட்பாளர்கள் களம் காண்கின்றனர். ஒரு கோடிக்கும் அதிகமான வாக்காளர்கள் இன்று ஓட்டளிக்கின்றனர்.


வேண்டுகோள்கொரோனா பரவல் தீவிரமடைந்துள்ளதை அடுத்து, மீதமுள்ள தொகுதிகளுக்கான நான்கு கட்ட ஓட்டுப்பதிவை, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கும்படி, தேர்தல் ஆணையத்திடம், முதல்வர் மம்தா பானர்ஜி, நேற்று முன்தினம் கோரிக்கை விடுத்தார்.அதை, தேர்தல் ஆணையம் நிராகரித்தது. இந்நிலையில், கொரோனா பரவலின் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ள நிலையில், மீதமுள்ள மூன்று கட்ட தேர்தலை பாதுகாப்பாக நடத்துவது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்துக்கு, தேர்தல் ஆணையம் நேற்று ஏற்பாடு செய்தது.இதில், திரிணமுல் காங்., சார்பில், அக்கட்சியின் பொதுச் செயலர் பார்த்தா சாட்டர்ஜி பங்கேற்றார். கூட்டத்திற்கு பின், செய்தியாளர்களிடம் அவர் கூறியதாவது:கொரோனா தொற்று பரவல் தீவிரமடைந்துள்ள நிலையில், தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள், அரசியல் கட்சிகள், பொது மக்களுக்கு தொற்றை கட்டுப்படுத்தும் கடமை உள்ளது. எனவே, வரும் 22, 26 மற்றும் 29ல் நடக்கவுள்ள மூன்று கட்ட ஓட்டுப்பதிவை, அனைவரின் பாதுகாப்பு மற்றும் நலன் கருதி, ஒரே கட்டமாக நடத்தி முடிக்கும்படி, தலைமை தேர்தல் அதிகாரியிடம் வலியுறுத்தியுள்ளோம்.இவ்வாறு அவர் கூறினார்.


நிராகரிப்புதிரிணமுல் காங்.,கின் இந்த கோரிக்கைக்கு, பா.ஜ., தரப்பு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இது குறித்து, அனைத்து கட்சி கூட்டத்தில் பங்கேற்ற, பா.ஜ., மூத்த தலைவர் ஸ்வபன் தாஸ்குப்தா கூறியதாவது:ஏற்கனவே அறிவித்தபடி, எட்டு கட்டங்களாக தேர்தல் நடத்தப்பட வேண்டும். வேட்பாளர்கள் மற்றும் வாக்காளர்களின் உரிமைகள் பறிக்கப்படக் கூடாது. களத்தில் அனைவருக்கும் சமமான வாய்ப்பு அளிக்கப்பட வேண்டும். அரசியல் கட்சிகள் என்ன செய்ய வேண்டும் என்பதை, தேர்தல் ஆணையம் தான் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.இதற்கிடையே, அடுத்த கட்ட தேர்தல்களில் பிரசாரம் செய்ய, இரவு, 10:00 மணி வரை ஏற்கனவே அனுமதி அளிக்கப்பட்டு இருந்தது.

கொரோனா பரவல் காரணமாக, இந்த நேரத்தைக் குறைத்து, இரவு, 7:00 மணியுடன் அரசியல் கட்சிகள் பிரசாரத்தை முடித்துக் கொள்ள, தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவு பிறப்பித்துள்ளது. அடுத்த நாள் பிரசாரத்தை, காலை, 10:00 மணிக்கு மேல் துவங்க வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.மேலும், தேர்தல் தினத்துக்கு, 48 மணி நேரம் முன்னதாக பிரசாரத்தை நிறுத்தும் நடைமுறையை, 72 மணி நேரமாக நீட்டித்தும், தேர்தல் ஆணையம் நேற்று உத்தரவிட்டது.

இதையடுத்து, மேற்கு வங்கத்தின் அடுத்த மூன்று கட்ட தேர்தல் பிரசாரத்தை, தேர்தலுக்கு மூன்று நாட்களுக்கு முன், அரசியல் கட்சிகள் நிறுத்திக் கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.கொரோனா பரவலின் தீவிரத்தை கருத்தில் வைத்து, இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக, தேர்தல் ஆணையம் தெரிவித்தது.இதையடுத்து, மூன்று கட்ட தேர்தலை, ஒரே கட்டமாக நடத்தி முடித்திட, முதல்வர் மம்தா வைத்த கோரிக்கையை, தேர்தல் ஆணையம் நிராகரித்ததாக கூறப்படுகிறது.


Advertisement
வாசகர் கருத்து (10)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sampath, k - HOSUR,இந்தியா
17-ஏப்-202120:14:15 IST Report Abuse
sampath, k Election commission may complete the election as early as possible. No need to take huge time
Rate this:
Cancel
Thiagarajan Kodandaraman - Madurai,இந்தியா
17-ஏப்-202111:14:50 IST Report Abuse
Thiagarajan Kodandaraman எதனாலாமா வீல் சேர் நாடகம் மக்களிடம் எடு படல்லயோ
Rate this:
Cancel
Nisha Rathi - madurai தி.மு.க என் முதல் எதிரிதி.மு.கவை அழிப்பது எங்கள் நோக்கம் ,இந்தியா
17-ஏப்-202110:12:33 IST Report Abuse
Nisha Rathi மம்தா கனவிலும் நனவிலும் உணவிலும் ரெஸ்ட்ரூமிலும் மோடி அமித்ஷா நினைவாக இருக்கிறார்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X