பொது செய்தி

இந்தியா

பஞ்சாப் அணியை வீழ்த்தியது சென்னை

Updated : ஏப் 16, 2021 | Added : ஏப் 16, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தீபக் சகார், மொயீன் அலி, டுபிளசி கைகொடுக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது. இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு

மும்பை: பஞ்சாப் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் தீபக் சகார், மொயீன் அலி, டுபிளசி கைகொடுக்க சென்னை அணி 6 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்தது.



latest tamil news



இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. மும்பையில் உள்ள வான்கடே மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் சென்னை, பஞ்சாப் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற சென்னை அணி கேப்டன் தோனி, 'பீல்டிங்' தேர்வு செய்தார்.

பஞ்சாப் அணிக்கு மயங்க் அகர்வால் (0),கேப்டன் லோகேஷ் ராகுல் (5) ஜோடி மோசமான துவக்கம் தந்தது. தீபக் சகார் 'வேகத்தில்' கெய்ல் (10), நிக்கோலஸ் பூரன் (0), தீபக் ஹூடா (10) வெளியேறினர். ஜெய் ரிச்சர்ட்சன் (15), முருகன் அஷ்வின் (6) நிலைக்கவில்லை. மொயீன் பந்தை சிக்சருக்கு அனுப்பிய தமிழக வீரர் ஷாருக்கான் (47) ஆறுதல் தர, பஞ்சாப் அணி 20 ஓவரில் 8 விக்கெட்டுக்கு 106 ரன் எடுத்தது. முகமது ஷமி (9) அவுட்டாகாமல் இருந்தார். சென்னை அணி சார்பில் தீபக் சகார் 4 விக்கெட் சாய்த்தார்.

சுலப இலக்கை விரட்டிய சென்னை அணிக்கு ருதுராஜ், டுபிளசி ஜோடி மந்தமான துவக்கம் தந்தது. முதல் 3 ஓவரில் 8 ரன் மட்டுமே எடுத்தது. அர்ஷ்தீப் பந்தில் ருதுராஜ் (5) அவுட்டானார். ரிலே மெரிடித் வீசிய 6வது ஓவரில் 2 பவுண்டரி அடித்த மொயீன் அலி, அர்ஷ்தீப், முருகன் அஷ்வின், ஷமி பந்துகளையும் பவுண்டரிக்கு விரட்டினார். இவருக்கு ஒத்துழைப்பு தந்த டுபிளசி, ரிச்சர்ட்சன் வீசிய 12வது ஓவரில் தொடர்ச்சியாக 2 பவுண்டரி அடித்தார். முருகன் அஷ்வின் 'சுழலில்' மொயீன் (46) சிக்கினார்.


latest tamil news



ஷமி வீசிய 15வது ஓவரில் ரெய்னா (5), அம்பதி ராயுடு (0) அடுத்தடுத்து அவுட்டாகினர். மெரிடித் பந்தை பவுண்டரிக்கு விரட்டிய சாம் கர்ரான் வெற்றியை உறுதி செய்தார். சென்னை அணி 15.4 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 107 ரன் எடுத்து வெற்றி பெற்றது. டுபிளசி (36), சாம் கர்ரான் (5) அவுட்டாகாமல் இருந்தனர். பஞ்சாப் சார்பில் ஷமி 2 விக்கெட் வீழ்த்தினார்.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202113:17:55 IST Report Abuse
Devanand Louis வோடபோன் தொலைதொடர்பு நிறுவனம் கொள்ளை அடிக்கும் கும்பல் & மோசமான தொழில், நிவாக சீர்கேடு , தொலைத்தொடர்பு ஒழுங்குமுறை ஆணையத்தின் சட்டதிட்டங்களுக்கு உட்படாமலிருத்தல்,அதிகாரத்தை துஷ்ப்ரயோகம் -வோடபோன் உள்ள அணைத்து ஊழியர்கள் மற்றும் அலுவலர்கள் எல்லோரும் சரியாக பார்க்காமல் இருப்பதுதான் அவர்களின் தலையாய வேலை , வாய்ஸ் & டாட்டா சேனல்களின் சேவை நன்றாகயில்லை,விட்டு விட்டு வரும் மொபைல் சைனல்கள் ,தரமில்லாத வோடபோன் வாய்ஸ்&டாட்டா , எந்த ஒரு சின்ன வேலை அங்கு நடக்காது , பலவித தில்லுமுல்லு வேலைகளையும் செய்து பணத்தை வாடிக்கையாளரிடம் வாங்குவதுதான் வோடாபோனின் தலையாய வேலைகள் .கொரோனாவால் நாடே பாதிப்படைந்துள்ளது ,மக்கள் கொரானாவால் மனநலம் மற்றும் வருவாய் இல்லாத இந்த நேரத்தில் வோடாபோனின் மனித நேயமில்லாத பணம்தி சுரண்டும் வாங்கும் சர்வாதிகாரம் கொண்ட அதிகாரிகள், பொதுமக்கள் எல்லோரும் இந்த கேடுகெட்ட சேவைகளால் வேலைகளால் மிகவும் கொதிப்படைந்துள்ளார்கள் ஆகையால் விஜிலென்ஸ் ரைடு தேவை வோடபோன் தொலைத்தொடர்பு நிறுவனத்திற்கு
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-ஏப்-202113:03:13 IST Report Abuse
Ramesh Sargam 8 விக்கெட் வித்தியாசத்தில் முதல் வெற்றியை பதிவு செய்யவேண்டிய சென்னை அணி, ரெய்னா மற்றும் ராயுடு வின் மோசமான ஆட்டத்தால், மேலும் இரண்டு விக்கேட்டுகளை பறிகொடுத்து வெற்றி பெற்று இருக்கிறார்கள். முதன்மை பயிட்சியாளர் அவர்களுக்கு அதுபோன்ற அனாவசிய ஷாட்டுகளை தவிர்க்கவேண்டும் என்று அறிவுறுத்தவேண்டும்.
Rate this:
Cancel
sudharman - chennai,இந்தியா
17-ஏப்-202111:00:19 IST Report Abuse
sudharman ரெய்னாவும் ராயுடுவும் ஆடிய ஆட்டத்தை பார்த்தால் பயமாக தான் இருக்கிறது .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X