பொது செய்தி

இந்தியா

மரபணு மாறிய கொரோனா: 1,189 பேருக்கு பாதிப்பு

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (1)
Share
Advertisement
புதுடில்லி :'நம் நாட்டில், மரபணு மாறிய கொரோனா வைரசால், இதுவரை, 1,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலகின் பல நாடுகளில், மரபணு மாற்றங்களுடன், கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வகைகள், வேகமாக பரவும் திறன் கொண்டவை.பிரிட்டனில் உருவான புதிய வகை கொரோனா வைரஸ்,
மரபணு , கொரோனா 1,189 பேர், பாதிப்பு

புதுடில்லி :'நம் நாட்டில், மரபணு மாறிய கொரோனா வைரசால், இதுவரை, 1,189 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்' என, மத்திய சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.

மத்திய சுகாதாரத் துறை, நேற்று வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:உலகின் பல நாடுகளில், மரபணு மாற்றங்களுடன், கொரோனா வைரஸ் பரவி வருகிறது. இந்த வைரஸ் வகைகள், வேகமாக பரவும் திறன் கொண்டவை.பிரிட்டனில் உருவான புதிய வகை கொரோனா வைரஸ், ஐரோப்பிய மற்றும் ஆசிய நாடுகளிலும் பரவி உள்ளது. இதேபோல், இரட்டை மரபணு மாற்றங்களுடன் உருவாகி உள்ள வைரஸ் ஆஸ்திரேலியா, பெல்ஜியம், ஜெர்மனி, பிரிட்டன், அமெரிக்கா உள்ளிட்ட பல நாடுகளில் பரவி உள்ளது.

நம் நாட்டில், இந்த வைரஸ் வகைகளால் பாதிக்கப்படுவோரின் மாதிரிகளை பரிசோதிப்பதற்காகவே, 10 பிரத்யேக பரிசோதனை மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இந்த மையங்களில், இதுவரை, 13 ஆயிரத்து, 614 பேரின் மாதிரிகள் பரிசோதிக்கப்பட்டுள்ளன.

இதில், 1,189 பேர், மரபணு மாற்றத்துடன் கூடிய கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளது உறுதிபடுத்தப்பட்டுள்ளது. இவர்களில், 1,109 பேர், பிரிட்டன் வைரஸ் வகையால் பாதிக்கப்பட்டுள்ளனர். 79 பேர், தென் ஆப்ரிக்க வகையாலும்; ஒருவர், பிரேசில் வகையாலும் பாதிக்கப்பட்டுள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (1)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Visu Iyer - chennai,இந்தியா
17-ஏப்-202113:51:51 IST Report Abuse
Visu Iyer ஆக..... இரண்டு வருஷமா ஒரு வேலையும் செய்யலை...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X