பொது செய்தி

இந்தியா

ஹரித்வார் கும்ப மேளா இன்றுடன் முடிவு?

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (21)
Share
Advertisement
ஹரித்வார் :கொரோனா பரவல் காரணமாக, ஹரித்வார் கும்ப மேளா இன்றுடன் முடியும் என, எதிர்பார்க்கப் படுகிறது.உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், கங்கை ஆற்றில், பக்தர்கள் புனித நீராடும் கும்பமேளா நடந்து வருகிறது. வரும், 27 வரை, இந்த கும்ப மேளாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48
 
ஹரித்வார் ,கும்ப மேளா இன்று, முடிவு?

ஹரித்வார் :கொரோனா பரவல் காரணமாக, ஹரித்வார் கும்ப மேளா இன்றுடன் முடியும் என, எதிர்பார்க்கப் படுகிறது.

உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், கங்கை ஆற்றில், பக்தர்கள் புனித நீராடும் கும்பமேளா நடந்து வருகிறது.

வரும், 27 வரை, இந்த கும்ப மேளாவை நடத்த திட்டமிடப்பட்டிருந்தது.
கடந்த மூன்று நாட்களில் மட்டும், 48 லட்சத்துக்கும் மேற்பட்டோர் புனித நீராடினர். கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், எந்தவித கட்டுப்பாடு களும் இல்லாமல், மக்கள், கூட்டம் கூட்டமாக குவிந்துள்ளது, மாநில அரசுக்கு கவலையை ஏற்படுத்தி உள்ளது.


latest tamil news




கும்ப மேளாவுக்கு வந்த, 2.35 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 2,171 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த. 'மஹா நிர்வானி அஹாடா' என்ற துறவியர் அமைப்பின் தலைவர் சுவாமி கபில் தேவ், கொரோனா தொற்றால் உயிரிழந்தார்.

இதையடுத்து, 'நிரஞ்சனி அகாடா' என்ற அமைப்பு, கும்ப மேளாவை இன்றுடன் முடித்துக் கொள்வதாக அறிவித்துள்ளது. இதனால், கும்ப மேளா இன்றுடன் முடித்துக் கொள்ளப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


Advertisement




வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
17-ஏப்-202122:30:21 IST Report Abuse
J.Isaac வந்திய தேவன் அவர்களே, கங்கையில் வருடமுழுவதும் மூலிகை நீர் தானே ஒடுகிறது. அந்த குறிப்பிட்ட தினத்தில் தான் குளிக்க வேண்டுமோ?
Rate this:
Cancel
mridangam - madurai,இந்தியா
17-ஏப்-202118:09:21 IST Report Abuse
mridangam ஒரே வித்யாசம். குளியல்.. flowing water ல ..... சாப்ட்ல எச்சி துப்புவது.. குளிக்காமல் இருப்பது.. பழத்தை எச்சி துப்புவது.. இந்த பகுத்தறிவு இல்லை
Rate this:
Cancel
Engineer - California,யூ.எஸ்.ஏ
17-ஏப்-202118:06:56 IST Report Abuse
Engineer அதான் எல்லாம் முடிச்சினிருச்சே ..........இனி நின்றாள் என்ன நடந்தால் என்ன? இது வரை வந்தவர்களை எப்படி பாதுகாப்பது.......சமயோக புத்தி என்பது துளியும் இல்லை........
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X