அமலாக்க துறை வழக்கு: கேரள போலீசுக்கு 'குட்டு'

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (17)
Share
Advertisement
கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகம் வாயிலாக, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.அவர்கள் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது. 'ஆடியோ'
அமலாக்க துறை,  கேரள போலீஸ்,'குட்டு'

கேரளாவில், முதல்வர் பினராயி விஜயன் தலைமையில், இடது ஜனநாயக முன்னணி ஆட்சி நடக்கிறது. இங்குள்ள, ஐக்கிய அரபு எமிரேட்ஸ் துாதரகம் வாயிலாக, 30 கிலோ தங்கம் கடத்தப்பட்ட குற்றச்சாட்டில் ஸ்வப்னா சுரேஷ், சந்தீப் நாயர் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
அவர்கள் மீது, சட்ட விரோத பணப் பரிமாற்ற சட்டத்தின் கீழ், அமலாக்கத் துறை வழக்குப் பதிவு செய்துள்ளது.


'ஆடியோ'



latest tamil news




இந்நிலையில், தங்கம் கடத்தலில், முதல்வர் பினராயி விஜயனுக்கு தொடர்பு உள்ளதாக பொய்யான வாக்குமூலம் அளிக்கும்படி, அமலாக்கத் துறை அதிகாரிகள் தன்னை கட்டாயப்படுத்தியதாக, ஸ்வப்னா பேசிய, 'ஆடியோ' சமூக ஊடகங்களில் வெளியானது. இதே போல, பினராயிக்கு எதிராக பொய் சாட்சி கூறும்படி, அமலாக்கத் துறை அதிகாரிகள் தனக்கு நெருக்கடி கொடுத்ததாக, சந்தீப் நாயர் எழுதியதாக கூறப்படும் கடிதமும், சமூக ஊடகங்களில் கசிந்து,
பரபரப்பை ஏற்படுத்தியது.இதைத் தொடர்ந்து, கேரள குற்றப் பிரிவு போலீசார், பொய் சாட்சியங்களை உருவாக்க முயன்றதாக, அமலாக்கத் துறை அதிகாரிகள் மீது, இரண்டு முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்தனர். இதை எதிர்த்து, அமாலாக்கத் துறை கொச்சி மண்டலத்தின் துணை இயக்குர், பி.ராதாகிருஷ்ணன், கேரள உயர் நீதிமன்றத்தில் இரு மனுக்களை தாக்கல் செய்தார். அவற்றில், இந்த வழக்கில் பெரும் புள்ளிகள் சம்பந்தப்பட்டிருப்பதால், வழக்கை திசை திருப்ப, உள்நோக்கத்துடன், குற்றப் பிரிவு போலீசார், முதல் தகவல் அறிக்கைகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


தள்ளுபடி



அத்துடன், வழக்கை, சி.பி.ஐ.,க்கு மாற்றும்படியும் கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது. இந்த மனுக்கள், நேற்று கேரள உயர் நீதிமன்ற நீதிபதி, வி.ஜி.அருண் முன்னிலையில், விசாரணைக்கு வந்தன. அப்போது, குற்றப் பிரிவு போலீசார் பதிவு செய்த இரு முதல் தகவல் அறிக்கைகளை, நீதிபதி தள்ளுபடி செய்தார். அத்துடன், தங்க கடத்தல் வழக்கை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், போலீசார் மனு தாக்கல் செய்யலாம் என, உத்தரவிட்டார். இது, கேரள அரசுக்கு மிகப் பெரிய பின்னடைவாக கருதப்படுகிறது.- சிறப்பு நிருபர் -

Advertisement




வாசகர் கருத்து (17)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankar - Nellai,இந்தியா
17-ஏப்-202115:03:41 IST Report Abuse
sankar migaperiya dagalti kamunists
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஏப்-202114:48:59 IST Report Abuse
r.sundaram அமலாக்கத்துறை மேல் இந்த மாதிரி வழக்கு போட்டவர்களுக்கு துறை ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படுமா? நேர்வழியில் செல்லும் வழக்கை திசை திருப்பும் நோக்கத்தில்தான் இது நடந்திருக்க வேண்டும். யாரை காப்பாத்த இவர்கள் இந்த மாதிரி முயற்ச்சிக்கிறார்கள்? இதுவும் வெளியில் வர வேண்டாமா?
Rate this:
Cancel
konanki - Chennai,இந்தியா
17-ஏப்-202114:07:33 IST Report Abuse
konanki அருணன் கனகராஜ் எங்கிருந்தாலும் வரவும்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X