பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம்: அறுவை சிகிச்சை செய்யணும்!

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :அ.சுந்தர சுப்பிரமணியம், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்து, பணியை சிறப்பாக செய்யாத, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய, சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக
ithu ungal, idam, இது, உங்கள், இடம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :



அ.சுந்தர சுப்பிரமணியம், பணி நிறைவு பெற்ற தலைமையாசிரியர், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்:

ஆசிரியர் தேர்வு வாரிய தலைவராக இருந்து, பணியை சிறப்பாக செய்யாத, ஒன்பது ஐ.ஏ.எஸ்., அதிகாரிகளை, கட்டாய ஓய்வில் அனுப்புவதற்குரிய, சட்டப்படியான நடவடிக்கையை மேற்கொள்ள வேண்டும் என, தமிழக அரசின் தலைமை செயலருக்கு, மாநில தகவல் ஆணையர் பரிந்துரை செய்து உள்ளார்.

ஆசிரியர் தகுதித் தேர்வில், ஒருமுறை தவறு நடந்தால், அடுத்த முறை நடக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டியது, அதன் தலைமை பதவிகளில் இருப்போரின் கடமை. ஆனால், ஒவ்வொரு தேர்வுகளிலும், அதே தவறு மீண்டும் மீண்டும் நடந்து வருகிறது. அதற்கு காரணம், ஆசிரியர் தேர்வு வாரியத்தில் இருக்கும் உயர் அதிகாரிகளே என்பதில் சந்தேகமே இல்லை.

இவர்கள், ஆளுங்கட்சியினருடன் கூட்டணி அமைத்து, ஆசிரியர் நியமனத்தில் புகுந்து விளையாடினர். ஆசிரியர் படிப்பு முடித்து, வேலை தேடி அலைந்த இளைஞர்களின் வயிற்றில் அடித்தனர். சில ஆண்டுகளாக, ஆசிரியர் தேர்வு வாரியத்தில் நடக்கும் குளறுபடி குறித்து, பொதுவெளியில் விமர்சனம் எழுந்து வந்தாலும், ஆளுங்கட்சியின் ஆதரவால் அவர்கள், 'செழிப்பாகவே' இருக்கின்றனர்.


latest tamil news



புண்ணில் சீழ் முற்றிப்போய் வெளிவந்து விட்டது. ஆசிரியர் தேர்வு வாரியத்தில், அறுவை சிகிச்சை உடனடியாக மேற்கொள்ள வேண்டும். அரசு காலந்தாழ்த்தாது, தற்போது இருக்கும் தேர்வாணையத்தை கலைத்து, சிறந்த கல்வியாளர்களையும், நேர்மையான அலுவலர்களையும் இணைத்து, புதிதாக ஆணையம் அமைத்து, தகுந்த ஆசிரியர்களை நியமனம் செய்ய வழிவகை செய்ய வேண்டும். நம் பிள்ளைகளின் கல்வியில், 'கறுப்பு ஆடுகள்' விளையாடுவதை, ஒருபோதும் அனுமதிக்காதீர்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
kumar - Erode,இந்தியா
18-ஏப்-202102:49:59 IST Report Abuse
kumar கல்லூரிச் சாலை கடவுளே ஆசிரியர் தேர்வு வாரியத்தின் அறிவிப்பு பலகையிலேயே தமிழ் சரியாக இல்லையே . தேர்ந்தெடுக்கும் அதிகாரிகளும் தேர்ந்தெடுக்கப்படும் ஆசிரியர்களும் கற்றுக்கொடுக்கப்படும் மாணவர்களும் எப்படி ஒழுங்காக இருப்பார்கள் நிறைய துறைகளில் களை எடுக்கப்படவேண்டும்
Rate this:
Cancel
Anbuselvan - Bahrain,பஹ்ரைன்
17-ஏப்-202118:08:25 IST Report Abuse
Anbuselvan 9 அதிகாரிகளில் 6 அதிகாரிகள் நாலு அல்லது ஐந்து மாசம் மட்டுமே வேலை செய்து உள்ளனர். அவர்கள் சரி வராதால்தானோ என்னவோ அவர்களை மாற்றி இருக்க வாய்ப்பு உள்ளது. எல்லா அதிகாரிகளையும் கட்டாய ஓய்வு கொடுத்து அனுப்புவது அந்த அதிகாரிகளின் பழைய பொறுப்புள்ள தன்மையை வைத்தே முடிவு செய்ய வேண்டும். தப்பு செய்தவர்கள் நிச்சயமாக தண்டிக்கப் பட வேண்டும். தப்பு செய்தவர்களை டிஸ்மிஸ் செய்து அவர்களது எல்லா பெனிபிட்ஸ் களையும், ஓய்வூதியம் உட்பட, அனைத்தையும் ரத்து செய்யலாமே
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
17-ஏப்-202115:54:45 IST Report Abuse
vbs manian எல்லா துறைகளிலும் சீழ் முற்றிப்போய் உள்ளது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X