பொது செய்தி

இந்தியா

காஷ்மீர் மக்களுடன் நட்பு; ராணுவம் புதிய முயற்சி

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களுடன் நட்பு பாராட்டும் வகையில், ராணுவ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிவப்பு நிறக் கொடிகள், நீல நிறக்கொடிகளாக மாற்றப்பட்டுஉள்ளன.ஜம்மு - காஷ்மீரின் பிரதான பகுதிகளிலும், எல்லைப் பகுதிகளிலும், நம் ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த ராணுவ வீரர்களுடன் நட்பு பாராட்ட, இங்கு வசிக்கும் மக்கள், சற்று

ஸ்ரீநகர்: காஷ்மீர் மக்களுடன் நட்பு பாராட்டும் வகையில், ராணுவ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிவப்பு நிறக் கொடிகள், நீல நிறக்கொடிகளாக மாற்றப்பட்டுஉள்ளன.



latest tamil news


ஜம்மு - காஷ்மீரின் பிரதான பகுதிகளிலும், எல்லைப் பகுதிகளிலும், நம் ராணுவ வீரர்கள், பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும், இந்த ராணுவ வீரர்களுடன் நட்பு பாராட்ட, இங்கு வசிக்கும் மக்கள், சற்று தயக்கம் காட்டி வருகின்றனர்.இந்நிலையில், மக்களுடன் நட்புறவு ஏற்படுத்தும் வகையில், ஒரு புதிய முயற்சியை ராணுவம் எடுத்துள்ளது.


latest tamil news


அதன்படி, ராணுவ வாகனங்களில் பொருத்தப்பட்டிருக்கும் சிவப்பு நிறக் கொடிகள், நீல நிறக்கொடிகளாக மாற்றப்பட்டுள்ளன.மேலும், வாகனங்களின் வெளிப்புறம், காஷ்மீரில் உள்ள அழகான இடங்களின் படங்களும் அச்சிடப்பட்டு உள்ளன.

இதேபோல், ராணுவ தலைமையக கட்டடங்களின் சுவரில், காஷ்மீரின் இளம் சாதனை யாளர்களின் புகைப்படங்களை ஒட்டுவதற்கும் பரிந்துரைக்கப்பட்டு உள்ளது.இது மட்டுமல்லாமல், வாகனங்களில் செல்லும் ராணுவ வீரர்கள், மக்களிடம் பனிவாக நடந்துகொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளது

Advertisement




வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
17-ஏப்-202116:37:18 IST Report Abuse
J.V. Iyer காஷ்மீர் மக்கள் அமைதியான மாற்றத்தை சீக்கிரம் உணர்ந்து செயல்படுவார்கள் என்று நம்புவோம்.
Rate this:
Cancel
வெகுளி - Maatuthaavani,இந்தியா
17-ஏப்-202116:35:49 IST Report Abuse
வெகுளி காஷ்மீரின் இளம் தலைமுறை பயங்கரவாதிகளை நிராகரித்து மோடியின் தலைமையில் தேசிய நீரோடையில் கலக்க வேண்டும் என்பதே நல்லவர்களின் விருப்பம். அஜித் தோவலும் அமித்ஷாவும் நிச்சயம் காஷ்மீரிகளின் நல்வாழ்வுக்கு உதவுவார்கள்....
Rate this:
Cancel
M.COM.N.K.K. - Vedaranyam ,இந்தியா
17-ஏப்-202110:31:30 IST Report Abuse
M.COM.N.K.K. அன்புக்கு யாரும் அடிபணிந்துதான் ஆகவேண்டும் நல்லதே நடக்கும் இந்திய ராணுவத்துக்கும் காஷ்மீர் மக்களுக்கும் அனைவரின் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறோம்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X