'செக்' மோசடி வழக்கு சட்டம் திருத்தப்படுமா? : உச்ச நீதிமன்றம்

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி: 'செக்' எனப்படும், காசோலை மோசடி வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.உயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில், 35 லட்சத்துக்கும் அதிகமான செக் மோசடி வழக்குகள் தேங்கியுள்ளன. இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்தது.

புதுடில்லி: 'செக்' எனப்படும், காசோலை மோசடி வழக்குகளுக்கு விரைந்து தீர்வு காணும் வகையில், சட்ட திருத்தம் மேற்கொள்ளும்படி, மத்திய அரசுக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.latest tamil newsஉயர் நீதிமன்றங்கள் மற்றும் கீழ் நீதிமன்றங்களில், 35 லட்சத்துக்கும் அதிகமான செக் மோசடி வழக்குகள் தேங்கியுள்ளன. இது தொடர்பான வழக்கை, உச்ச நீதிமன்றம் தானாக முன் வந்து, விசாரணைக்கு எடுத்தது. இந்த வழக்குகளுக்கு தீர்வு காண, எத்தகைய நடவடிக்கைகள் எடுக்கலாம் என்பது குறித்து, மத்திய அரசுக்கு பரிந்துரைக்க, முன்னாள் நீதிபதி, ஆர்.சி.சவான் தலைமையில், குழு அமைக்கப்பட்டது.


latest tamil news


இந்நிலையில், இந்த வழக்கு, தலைமை நீதிபதி, எஸ்.ஏ.பாப்டே தலைமையிலான, ஐந்து நீதிபதிகள் அடங்கிய அமர்வு முன், நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள் உத்தரவிட்டதாவது: ஒருவர் மீது, ஓர் ஆண்டுக்குள் தொடரப்பட்டுள்ள செக் மோசடி வழக்குகளை ஒன்றாக இணைத்து விசாரிக்கும் வகையில், மத்திய அரசு, சட்ட திருத்தம் மேற்கொள்ள வேண்டும். செக் மோசடி வழக்குகளில், சம்பந்தப்பட்டவர்களிடம் இனி, நேரில் விசாரணை நடத்த தேவையில்லை. இது குறித்து, கீழ் நீதிமன்றங்களுக்கு உயர் நீதிமன்றங்கள் தெரிவிக்க வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement
வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
JAYACHANDRAN RAMAKRISHNAN - Coimbatore,இந்தியா
17-ஏப்-202121:46:50 IST Report Abuse
JAYACHANDRAN RAMAKRISHNAN 2013-ல் போடப்பட்ட செக் மோசடி வழக்கு BSNL-ன் Super Franchise ஒருவர் பண மோசடி செய்து திரும்பி தறாதறக்காக போடப்பட்டது இன்னும் "Fast Track " கோவை கோர்ட்டில் நிலுவையில் உள்ளது தீர்க்க படாமல். ( பெயரினை கவனித்தீர்களா Fast Track Court ) ,இதில் ஆச்சரியம் என்னவென்றால் இதுவரை ஒருமுறை கூட குற்றம் செய்தவர் கோர்ட்டில் ஆஜராகவே இல்லை. நமது மாண்புமிகு நீதிபதிகள் ஒருவர் கூட ஒரு பேச்சுக்கு கூட குற்றவாளியின் வக்கீலிடம் குற்றவாளி ஆஜராக வேண்டும் என்று கூறவே இல்லை. எப்படி நமது நீதிபதிகள். இதை என்னால் நிருபிக்க முடியும். கோரோணா வரை வழக்கு தொடுத்தவர் மட்டும் தான் வாய்தா ஆஜரானார் குற்றவாளி போல. இதை என்னால் நிருபிக்க முடியும்.இதே அந்த நீதிபதிகளின் குடும்பத்தில்நடந்திருந்தால் சும்மா விட்டிருப்பார்களா? போலீஸை வைத்து குற்றவாளியை நொங்கு எடுத்திருப்பார்கள் அல்லவா. இதே இலட்சணம் தான் நாடு முழுவதும். நீதிபதி வேலை என்பது ஒரு காலத்தில் கெளரவமாக உணரப்பட்டது. சேவை மனப்பான்மை முன்னே இருந்தது. இன்று அது சம்பளத்திற்காகவும் அலவன்சுகளுக்குகாகவும் பார்க்கும் சாதாரண கம்பெனி உத்யோகம் போல ஆகிவிட்டது. பேசாமல் Info TATA போன்ற Software Company களிடம் சொல்லி ஒரு Software செய்யச்சொல்லலாம். கம்ப்யூட்டராவது வழக்குகளை சீக்கிரமாக விசாரித்து தீர்ப்பு மெயில்க்கு அனுப்பிவிடும்.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
17-ஏப்-202115:28:06 IST Report Abuse
Lion Drsekar மன்னிக்கவும் சட்டம் என்பது இன்றைக்கு நல்லவர்களுக்கு மிகவும் பாதிப்பை ஏற்படுத்தி வருவதுதான் உண்மை, தீயவர்கள் யாருக்கும், எதற்கும் எங்குமே , எப்போதுமே அச்சப்படுவதே இல்லை, மாறாக அவர்கள் ஊடகங்களின் வாயிலாகவே நல்லவர்களை மிரட்டும் அளவுக்கு சுதந்திரம் சென்றுவிட்டது. முக கவசம் அணியாதவர்களிடம் அபராதம் வசூலிப்பது வாகன ஓட்டிகளிடம் மட்டுமே காரணம் அவர்களிடம் மட்டுமே எல்லா ஆவணங்களும் உடனடியாகக் கிடைக்கிறது, தவிர லட்சக்கணக்கில் நடந்து செல்பவர்கள் மற்றும் பலரிடம் வசூலிக்க முடியுமா? ஒரு பானை சாதத்துக்கு ஒரு சோறு பதம், மொத்தத்தில் சட்டம் என்பது தவறானவர்களுக்கு மட்டுமே எல்லா விதத்திலும் சாதகமாக இருக்கிறது, வந்தே மாதரம்
Rate this:
Cancel
r.sundaram - tirunelveli,இந்தியா
17-ஏப்-202114:37:48 IST Report Abuse
r.sundaram செக் பைசா இல்லாமல் திரும்பும் வழக்குகள் எல்லாமே சிறு வழக்குகள். ஏன் இது இத்தனை நாட்களாக தீர்க்கப்படாமல் இருக்கிறது என்று எவரும் கேட்பதில்லை. வாய்தா, வாய்தா தான் முதல் குற்றவாளி. வாய்தாவை குறைத்தாலே போதும் வழக்குகள் சீக்கிரம் முடிவடையும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X