விவேக் மறைவு: துணை ஜனாதிபதி, பிரதமர், முதல்வர், ஸ்டாலின், திரையுலகினர் இரங்கல்

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (27) | |
Advertisement
சென்னை: சென்னையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் உடலுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.நடிகர் விவேக்கின் மறைவு குறித்து அவருடன் பணியாற்றிய திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய மறைவு குறித்து அவர்கள்

சென்னை: சென்னையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால் காலமான நடிகர் விவேக்கின் உடலுக்கு, பிரதமர் மோடி, முதல்வர் பழனிசாமி, திமுக தலைவர் ஸ்டாலின், திரையுலகினர் மற்றும் பிரபலங்கள் பலர் இரங்கல் தெரிவித்துள்ளனர்.latest tamil newsநடிகர் விவேக்கின் மறைவு குறித்து அவருடன் பணியாற்றிய திரைப்பட நடிகர்கள் மற்றும் இயக்குனர்கள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். அவருடைய மறைவு குறித்து அவர்கள் தங்களுடைய ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து வருகின்றனர்.


துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு டுவிட்டரில் வெளியிட்ட பதிவு:
தமிழ் நடிகர் விவேக் மறைவு செய்தி கேட்டு வருத்தமடைந்தேன். அவரது குடும்பத்தினர், நண்பர்கள் மற்றும் ரசிகர்களுக்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன். ஓம் சாந்தி.
பிரதமர் மோடி அவரது டுவிட்டரில்;


நடிகர் விவேக் அகால மரணம் கவலையை தருகிறது. அவரது நகைச்சுவையும் அறிவுப்பூர்வமான வசனங்களும் மக்களை மகிழ்வித்தன. சுற்றுச்சூழல் மற்றும் சமூகத்தின் மீது இருந்த அக்கறை திரைப்படங்களில் பிரதிபலித்தன.

மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா

முதல்வர் பழனிசாமி இரங்கல்


முதல்வர் பழனிசாமி வெளியிட்டுள்ள இரங்கல் செய்தியில்: மறைந்த விவேக் இடத்தை யாராலும் நிரப்ப முடியாது. அவர் சமூக பாதுகாப்பில் அக்கறை கொண்டவராக இருந்தார். இவர் பழக மிக இனிமையானவர். இளைஞர்களுக்கு முன்மாதிரியாக திகழ்ந்தவர். கலாமின் கனவை நிறைவேற்ற நல்ல பணிகள் செய்தவர். கலை மற்றும் சமூக சேவையால் தமிழகத்திற்கு பெருமை சேர்த்தவர். இவ்வாறு முதல்வர் கூறியுள்ளார்.


latest tamil news
துணை முதல்வர் பன்னீர்செல்வம்


திரைப்படங்கள் மூலம் சமூக சீர்திருத்த கருத்துக்களை பரப்பியவர். இவரது மறைவு மீளா துயரத்தை தருகிறது.


திமுக தலைவர் ஸ்டாலின்


திமுக தலைவர் ஸ்டாலின் வெளியிட்டுள்ள செய்தியில்; பல்கலை வித்தகராக திகழ்ந்தவர் விவேக். தனித்துவமான நடிப்பாற்றலால் விழிப்புணர்வை ஏற்படுத்தியவர். இன்னும் பல சாதனைகள் படைக்க வேண்டியவரை இவ்வளவு விரைவாக இயற்கை பறித்து கொண்டது. சின்னகலைவாணர் என பெயர் பெற்ற நகைச்சுவை நடிகர் மறைவு பேரதிர்ச்சியை தருகிறது. இவரை பிரிந்து வாடும் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கல்.

திமுக எம்.பி., கனிமொழி: திரைப்படங்களில் சமூக பிரச்னைகளை பேசியவர் விவேக்


நடிகர் ரஜினி


சின்னக் கலைவாணர், சமூக சேவகர், என்னுடைய நெருங்கிய நண்பர் விவேக் மறைவு மிகுந்த வேதனை அளிக்கிறது. 'சிவாஜி' படப்பிடிப்பில் அவருடன் நடித்த ஒவ்வொரு நாட்களும், என் வாழ்க்கையில் மறக்க முடியாத நாட்கள் .நடிகர் செந்தில்


திரைத்துறையில் திறமையான நடிகர் விவேக். சுற்றுச் சூழலுக்காக போராடியவர் என்று தனது இரங்கல் செய்தியில் நடிகர் செந்தில் குறிப்பிட்டுள்ளார்.
நடிகர் மயில்சாமி
நல்ல தர்ம சிந்தனை உள்ளவர். அவருடைய இழப்பு எனக்கு மிகுந்த வேதனையாக உள்ளது.
நடிகர் சூரி:
அவர் மறைந்தாலும் என்றும் வாழ்ந்து கொண்டிருப்பார். அவர் மறைவை நினைத்து மரங்கள் கூட கண்ணீர் சிந்தும்.
டி.டி.வி.தினகரன்
நல்ல சமூக சிந்தனை உடையவர், செயற்பாட்டாளர் நடிகர் விவேக்.
நடிகை ராதிகா
நடிகர் விவேக் மரண செய்தி எனக்கு அதிர்ச்சியாக உள்ளது.


கவிஞர் வைரமுத்து


‛‛அய்யோ! சிரிப்பு செத்துவிட்டதே! எல்லாரையும் சிரிக்கவைத்த கலைஞன் அழவைத்துவிட்டுப் போய் விட்டானே!திரையில் இனி பகுத்தறிவுக்குப்பஞ்சம் வந்துவிடுமே!மனிதர்கள் மட்டுமல்ல விவேக்!நீ நட்ட மரங்களும் உனக்காக துக்கம் அனுசரிக்கின்றன.கலைச் சரித்திரம் சொல்லும்: நீ‛காமெடி'க் கதாநாயகன்''

தமிழக அரசு சார்பில் அமைச்சர் ஜெயக்குமார், பா.ஜ., மூத்த தலைவர் எச். ராஜா, நடிகர்கள் சூர்யா, கார்த்தி, ஜோதிகா, சூரி, யோகிபாபு, இயக்குநர் ஷங்கர், உள்ளிட்ட பலர் நேரில் சென்று அஞ்சலி செலுத்தினர்.

Advertisement
வாசகர் கருத்து (27)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
INDIAN Kumar - chennai,இந்தியா
17-ஏப்-202117:24:28 IST Report Abuse
INDIAN Kumar அவர் உடல் தான் மறைந்து விட்டது உயிர் என்றும் வாழும்.
Rate this:
Cancel
Prem Kumar -  ( Posted via: Dinamalar Android App )
17-ஏப்-202115:31:15 IST Report Abuse
Prem Kumar Vivek, who passed away this morning, not only a good and very decent actor, but apart from that he was a good human being, a real and true social worker , an iconic figure for youth. Gone too soon. Heartfelt condolences to all his family members.
Rate this:
Cancel
R. BALAJI - CHENNAI - 600 116,இந்தியா
17-ஏப்-202114:44:50 IST Report Abuse
R. BALAJI சின்ன கலைவாணர் என்று போற்றப்பட்டவர் திரு விவேக் () காலத்தால் அழியாத பல காமெடிகளையும் சிந்தனைகளையும் மக்களுக்கு தந்தவர். அவர் மட்டுமேதான் போனார். அவர் நட்ட மரங்கள் இன்னும் பல காலத்திற்கு ஓங்கி நிற்கும்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X