4வது வழக்கிலும் 'ஜாமின்': வீடு திரும்ப லாலு தயார்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
ராஞ்சி: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தன் மீதான நான்காவது ஊழல் வழக்கிலும், நேற்று, 'ஜாமின்' பெற்றார். இதனால் டில்லி, 'எம்ய்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர், வீடு திரும்பும் நிலை உருவாகி உள்ளது.ஜார்க்கண்ட், தலைநகர் ராஞ்சி சிறையில், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத்
லாலு பிரசாத், ஜாமின், ராஞ்சி உயர்நீதிமன்றம், கால்நடை தீவன ஊழல்,

ராஞ்சி: பீஹார் முன்னாள் முதல்வர் லாலு பிரசாத் யாதவ், தன் மீதான நான்காவது ஊழல் வழக்கிலும், நேற்று, 'ஜாமின்' பெற்றார். இதனால் டில்லி, 'எம்ய்ஸ்' மருத்துவமனையில் சிகிச்சை பெறும் அவர், வீடு திரும்பும் நிலை உருவாகி உள்ளது.

ஜார்க்கண்ட், தலைநகர் ராஞ்சி சிறையில், மாட்டுத்தீவன ஊழல் வழக்கில் தண்டனை பெற்ற பீஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான லாலு பிரசாத் யாதவ், 72, தண்டனை கைதியாக இருந்தார். சில மாதங்களுக்கு முன், உடல் நிலை பாதிக்கப்பட்ட அவர், டில்லி, 'எய்ம்ஸ்' மருத்துவ மனையில், தொடர் சிகிச்சை பெற்று வருகிறார்.அவர் மீதான நான்கு ஊழல் வழக்குகளில், ஏற்கனவே மூன்றில் ஜாமின் பெற்றுள்ளார்.


latest tamil news


இந்நிலையில், 3.13 கோடி கருவூல மோசடி வழக்கில், ஜார்க்கண்ட் உயர் நீதிமன்றம், அவருக்கு, சில நிபந்தனைகளுடன் ஜாமின் வழங்கியது. இதனால், தண்டனை அனுபவிக்கும் அனைத்து வழக்குகளிலும் ஜாமின் பெற்றுள்ள அவர், மருத்துவமனையில் இருந்து, நேரடியாக வீடு திரும்பும் நிலை உருவாகி உள்ளது.

இது குறித்து அவரது மகனும், ராஷ்ட்ரீய ஜனதா தள தலைவருமான தேஜஸ்வி யாதவ் கூறியதாவது: தண்டனையின் பாதியை அனுபவித்துள்ள என் தந்தைக்கு, ஜாமின் வழங்கிய உயர் நீதிமன்றத்திற்கு நன்றி. ஜாமின் கிடைத்ததால் மகிழும் நாங்கள், அவரது உடல்நிலை குறித்து கவலை கொள்கிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
thamodaran chinnasamy - chennai,இந்தியா
18-ஏப்-202111:40:38 IST Report Abuse
thamodaran chinnasamy காத்திருங்கள் , கடவுள் இவர்களை வெட்சி வெச்சி செய்வார் , செய்யத்தான் போகிறார் .
Rate this:
Cancel
S.Baliah Seer - Chennai,இந்தியா
18-ஏப்-202111:28:26 IST Report Abuse
S.Baliah Seer லாலுவின் மாட்டுத் தீவன ஊழல் என்றால் என்ன தெரியுமா?தன் பண்ணை நிலத்தில் இருந்த மாடுகளுக்கு அந்த தீவனத்தின் ஒரு பகுதியை உபயோகப் படுத்திக்கொண்டார் என்பதும் அந்த குற்றச்சாட்டில் ஒன்று.
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
18-ஏப்-202110:42:56 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு ஜாமீன் கொடுக்கலைன்னா .......
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X