மம்தா ஏமாற்றுகிறார்: பிரதமர் மோடி தாக்கு

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (53)
Share
Advertisement
அசன்சோல்: வளர்ச்சி என்ற பெயரில் மம்தா பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.மே.வங்க மாநிலம் அசன்சோலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது: சைக்கிள் முதல் ரயில், பேப்பர் முதல் இரும்பு, அலுமினியம் முதல் கிளாஸ் வரை, அசோன்சோலில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரிய இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும்
WestBengalPolls, Mamata Banerjee,மம்தா,மம்தா பானர்ஜி, பிரதமர் மோடி, மோடி, நரேந்திர மோடி, பாஜ,

அசன்சோல்: வளர்ச்சி என்ற பெயரில் மம்தா பொது மக்களை ஏமாற்றி வருகிறார் என பிரதமர் நரேந்திர மோடி கூறி உள்ளார்.

மே.வங்க மாநிலம் அசன்சோலில் நடந்த பா.ஜ., பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசியதாவது:
சைக்கிள் முதல் ரயில், பேப்பர் முதல் இரும்பு, அலுமினியம் முதல் கிளாஸ் வரை, அசோன்சோலில் உள்ள அனைத்து தொழிற்சாலைகளிலும் பணிபுரிய இந்தியாவின் அனைத்து பகுதிகளில் இருந்தும் வருகின்றனர். அந்த வகையில் அசன்சோல் மினி இந்தியாவாக திகழ்கிறது. நாட்டின் அனைத்து இடங்களிலும் உள்ள மக்களை இங்கு பார்க்க முடிகிறது. ஆனால், மே.வங்க அரசின் மோசமான நிர்வாகம் காரணமாக இந்த பகுதி பாதிக்கப்பட்டு உள்ளது. வேலைவாய்ப்பிற்காக மக்கள் இங்கு வருகின்றனர். ஆனால், தற்போது அகதிகளாக இங்கிருந்து வெளியேறி வருகின்றனர்.


latest tamil news



கடந்த 10 ஆண்டுகளாக வளர்ச்சி என்ற பெயரில் மம்தா உங்களை ஏமாற்றி உளளார். வளர்ச்சிக்கு முன்னர் தடைகல்லாக அவர் நிற்கிறார். ரூ.5 லட்சம் வரை இலவச காப்பீடு திட்டத்தை மத்திய அரசு வழங்கியது. இதற்கு தடையாக மம்தா உள்ளார். அகதிகளுக்கு உதவ மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கும் மம்தா எதிர்ப்பு தெரிவிக்கிறார்.

முஸ்லிம் பெண்களை, முத்தலாக்கில் இருந்து விடுவிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. இதனால் மம்தா கோபம் அடைந்தார். இடைத்தரகர்களிடம் இருந்து விவசாயிகளை விடுவிக்க மத்திய அரசு சட்டம் கொண்டு வந்தது. அதற்கும் எதிர்ப்பு தெரிவித்தார். மே.வங்கத்திற்கு இரட்டை இன்ஜீன் கொண்ட அரசு தான்தேவை. வளர்ச்சிக்கு தடையாக உள்ளவர்கள் தேவையில்லை. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (53)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Venkataramanan Thiru - Sanjose, CA,யூ.எஸ்.ஏ
18-ஏப்-202105:05:25 IST Report Abuse
Venkataramanan Thiru யார் ஏமாற்றுகிறார் என்பதை மக்கள் நன்கு அறிவார். மோடி மஸ்தான் நடிப்பு சாயம் போய்விட்டது.
Rate this:
Cancel
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-ஏப்-202122:08:40 IST Report Abuse
R. Vidya Sagar அசன்சோலில் இன்று புதிதாக கொரோனா வருபவர்களுக்கும் அவர்களால் மற்றவர்களுக்கு கொரோன வருவதற்கும் இந்த மாண்பு மிகு தலைவர் பொறுப்பு ஏற்றுகொள்ள வேண்டும்.
Rate this:
Visu Iyer - chennai,இந்தியா
18-ஏப்-202113:59:25 IST Report Abuse
Visu Iyerஏனுங்க இப்படி.. தேர்தல் ஆணையம் தானே தேர்தல் தேதியை அறிவித்தது.. அதனால் தேர்தல் ஆணையம் தானே பொறுப்பு ஏற்க வேண்டும்.. இவரை ஏன் குறை சொல்றீங்க....
Rate this:
Cancel
m.viswanathan - chennai,இந்தியா
17-ஏப்-202121:35:38 IST Report Abuse
m.viswanathan கடந்த ஏழு ஆண்டுகளாக நீங்கள் ஏமாற்றுவதை விடவா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X