தடுப்பூசி போடும் வயதை குறைக்க வேண்டும்: சோனியா

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (26)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கூறி உள்ளார்.டில்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா பேசியதாவது : கொரோனாவை எதிர்த்து போராடுவதை தேசிய சவாலாகவும், அதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை
sonia, soniagandhi, cwc, covid19, congress,  corona, coronavirus, virus, covid19, Modi government, vaccine, சோனியா, சோனியா காந்தி, காங்கிரஸ், தடுப்பூசி, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, காரிய கமிட்டி, செயற்குழு, தடுப்பூசி

புதுடில்லி: கொரோனா தடுப்பூசி செலுத்துவதற்கான வயது வரம்பை 25 ஆக குறைக்க வேண்டும் என காங்கிரஸ் தலைவர் சோனியா கூறி உள்ளார்.

டில்லியில் நடந்த காங்கிரஸ் செயற்குழு கூட்டத்தில் சோனியா பேசியதாவது : கொரோனாவை எதிர்த்து போராடுவதை தேசிய சவாலாகவும், அதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டு உள்ளது. கொரோனாவின் இரண்டாவது அலை இந்தியாவை கடுமையாக தாக்கி உள்ளது. முதல் பாதிப்பில் இருந்து மீள ஒராண்டு முடிவதற்குள் மீண்டும் பாதிப்பில் சிக்கி உள்ளோம்.

காங்கிரஸ் ஆளும் மாநில முதல்வர்களுடன் ஆலோசனை நடத்திய பின்னர், பிரதமருக்கு கடிதம் எழுதினேன். சில மாநிலங்களில் போதிய அளவு தடுப்பூசி, ஆக்சிஜன் மற்றும் வெண்டிலேட்டர் ஆகியவை போதுமான அளவு இல்லை. ஆனால், அரசு தரப்பில் மவுனம் நிலவுகிறது. கொரோனா தடுப்பூசி செலுத்தி கொள்வதற்கான வயதை 25 ஆக குறைக்க வேண்டும். தடுப்பூசியை ஏற்றுமதி செய்வதை நிறுத்திவிட்டு, உள்நாட்டு மக்களை பாதுகாப்பதற்கு முக்கியத்துவம் அளிக்க வேண்டும்


latest tamil newsகொரோனா நெருக்கடியை கணித்தல், மதிப்பீடு மற்றும் நிர்வகிப்பதில் மத்திய அரசு மெத்தனம் காட்டி வருகிறது. கொரோனா வைரசை கட்டுப்படுத்துவது தொடர்பாக எதிர்க்கட்சிகளின் ஆக்கப்பூர்வமான ஆலோசனைகளை கேட்காமல், மத்திய அமைச்சர்கள் எதிர்க்கட்சி தலைவர்களை விமர்சனம் செய்கின்றனர்.
தகுதியான மக்கள் அனைவரின் வங்கிக்கணக்கிலும் தலா ரூ.6 ஆயிரம் செலுத்த வேண்டும். கொரோனாவை தடுக்கவும் மற்றம் சிகிச்சை அளிக்கவும் தேவையான மருத்துவ சாதனங்கள், உபகரணங்கள் மற்றும் மருந்துகளுக்கு ஜிஎஸ்டியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement
வாசகர் கருத்து (26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R. Vidya Sagar - Chennai,இந்தியா
17-ஏப்-202122:05:50 IST Report Abuse
R. Vidya Sagar சும்மா பேசுவதற்கு பதிலாக பின்னால் ஷெல்ப்பில் ஷோவுக்கு வைத்திருக்கும் புத்தகத்தை எடுத்து படித்தாலாவது புத்தி வளரும்.
Rate this:
Cancel
கல்யாணராமன் சு. - பெங்களூரு,இந்தியா
17-ஏப்-202120:11:38 IST Report Abuse
கல்யாணராமன் சு. \\கொரோனாவை எதிர்த்து போராடுவதை தேசிய சவாலாகவும், அதனை அரசியலுக்கு அப்பாற்பட்டு அணுக வேண்டும் என்பதில் காங்கிரஸ் நம்பிக்கை கொண்டு உள்ளது. ..........\\ ........ நல்ல நோக்கம் ........ ஆனா இவங்க கட்சிக்காரங்க (ஏன் இவரே கூட) அப்படிப்பட்ட நோக்கத்தில் செயல்படறமாதிரி தெரியலியே ........ சிதம்பரம், ராகுல் காந்தி, பிரியங்கா, அழகிரி இன்னும் நிறைய அல்லக்கைகள் ஏதோ தங்களுக்குத்தான் எல்லாம் தெரியுங்கிற மாதிரியாவும், மத்தவங்க எல்லா அறிவிலிகள் என்கிற மாதிரியாகத்தானே பேசிக்கொண்டிருக்கிறார்கள் ?? உங்களுக்கு உண்மையிலேயே அந்த நோக்கம் இருக்குமானால், பத்திரிக்கைகளில் அறிக்கை விடுவதற்கு பதில், அரசுகிட்ட பேசலாமே ????
Rate this:
Cancel
Sriram V - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
17-ஏப்-202120:07:59 IST Report Abuse
Sriram V Talk with sense, understand present constraints and suggest accordingly
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X