மரம் நடுங்கள்: விவேக்கிற்கு அஞ்சலி செலுத்துங்கள்

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று (ஏப்.,17) காலை காலமானார்.விவேக், தான் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில், நகைச்சுவையோடு சமூக சீர்திருத்தக் கருத்துகளை கூறி தனது ரசிகர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தார். மூட நம்பிக்கை, ஜாதி மத வேறுபாடு, லஞ்ச லாவண்யம், மக்கள்
விவேக்,RIPVivekSir, மரம் நடுங்கள், மரம், அஞ்சலி

சென்னை: பிரபல நகைச்சுவை நடிகர் விவேக், மாரடைப்பு காரணமாக நேற்று சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர், இன்று (ஏப்.,17) காலை காலமானார்.

விவேக், தான் ஏற்று நடித்த நகைச்சுவை கதாபாத்திரங்களில், நகைச்சுவையோடு சமூக சீர்திருத்தக் கருத்துகளை கூறி தனது ரசிகர்களை சிந்திக்கவும் சிரிக்கவும் வைத்தார். மூட நம்பிக்கை, ஜாதி மத வேறுபாடு, லஞ்ச லாவண்யம், மக்கள் தொகை பெருக்கத்தினால் ஏற்படும் அவலம், தண்ணீர் பிரச்னை ஆகியவற்றை, தனது வசனங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தினார்.

மரம் நடுவதில் ஆர்வம் கொண்ட விவேக், செழிப்பான நாட்டை உருவாக்க நாடு முழுவதும் மரக்கன்று நட வேண்டும் என வலியுறுத்தினார். அந்த வகையில், நேரம் கிடைக்கும் போதெல்லாம் மரக்கன்றுகளை நட்டு வந்தார். தனது ரசிகர்களையும், மாணவர்களையும் மரக்கன்று நடும்படி வலியுறுத்தி வந்தார். இதற்காக, அவரை முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் பாராட்டினார்.


latest tamil newsஅப்துல் கலாம் மீது அதீத அன்பு கொண்ட விவேக், அவரை முன்மாதிரியாக கொண்டு தனது வாழ்க்கையில் பல விஷயங்களை மாற்றி கொண்டவர். கலாமின் ‛பசுமை இந்தியா' திட்டத்தை வெற்றி பாதைக்கு கொண்டு சென்றதில் விவேக்கிற்கு முக்கிய பங்கு உண்டு. சுற்றுச்சூழலிலும் விவேக் அதீத ஆர்வம் கொண்டவர். அவர் காலமானது, திரையுலகம், ரசிகர்களுக்கு பெரிய இழப்பு, அவருக்கு அஞ்சலி செலுத்த நீங்கள் நினைத்தால், உங்கள் வீட்டிலோ, சாலை ஓரங்களிலோ, மைதானங்களிலோ, பள்ளிகளிலோ மரக்கன்றுகளை நட்டு, அவற்றை புகைப்படம் எடுத்து உங்கள் பெயர், ஊர், ஆகிய விவரங்களுடன் எங்களுக்கு அனுப்புங்கள். தினமலர் இணையதளத்தில் வெளியிடப்படும்.
புகைப்படங்களை அனுப்ப :https://www.dinamalar.com/vivek/

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Velumani K. Sundaram - Victoria,செசேல்ஸ்
18-ஏப்-202112:11:24 IST Report Abuse
Velumani K. Sundaram சின்னக்கலைவாணரின் சிரிப்புக்கு சிந்தனைக்கும் மரியாதையை செய்யும் நிமித்தம், ஒவ்வொருவரும் ஒரு மரம் அன்னாரின் முதலாமாண்டு நினைவாஞ்சலிக்குள் நடுவோம்
Rate this:
Cancel
Velmurugan - Brisbane,ஆஸ்திரேலியா
18-ஏப்-202110:38:32 IST Report Abuse
Velmurugan சரிங்க அண்ணாச்சி. நாங்க மரம் நடுறோம்.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
18-ஏப்-202107:48:57 IST Report Abuse
kosu moolai கலிங்கப்பட்டியார், மீசை மாமா கோபால், குருமா என நேற்று அஞ்சலி செய்ய வந்த குரூப்பில் "மூத்த பத்திரிகையாளர்" ராம் மிஸ்ஸிங் ஆனது மனதுக்கு நெருடலாய் இருக்குது.
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
18-ஏப்-202112:10:26 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுகமாண்டர் வேண்டாம் என்று சொல்லியிருப்பார்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X