பொது செய்தி

இந்தியா

கொரோனா தீவிரமாக காரணம்? 'எய்ம்ஸ்' இயக்குனர் விளக்கம்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (28)
Share
Advertisement
புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதற்கான காரணங்களை, 'எய்ம்ஸ்' இயக்குனர் ரந்தீப் குலேரியா பட்டியலிட்டுள்ளார்.நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.நடவடிக்கைஇந்நிலையில்,
AIIMS,எய்ம்ஸ்,எய்ம்ஸ் மருத்துவமனை, corona, corona virus, covid19

புதுடில்லி:கொரோனா வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதற்கான காரணங்களை, 'எய்ம்ஸ்' இயக்குனர் ரந்தீப் குலேரியா பட்டியலிட்டுள்ளார்.

நம் நாட்டில், கொரோனா வைரசால் ஏற்படும் தினசரி பாதிப்புகளின் எண்ணிக்கை, மீண்டும் அதிகரித்து வருகிறது. இதற்கிடையே, வைரஸ் பரவலை தடுக்க, மத்திய - மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன.


latest tamil news



நடவடிக்கை


இந்நிலையில், வைரஸ் பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ளதற்கான காரணங்களை, டில்லி எய்ம்ஸ் இயக்குனர், டாக்டர் ரந்தீப் குலேரியா கூறி உள்ளார்.

இது குறித்து அவர் கூறியதாவது: நம் நாட்டில், கடந்த ஜனவரி, பிப்ரவரி மாதங்களில், கொரோனா வைரசால் பாதிக்கப்பட்ட மக்களின் எண்ணிக்கை குறைந்திருந்தது. அப்போது, வைரசுக்கான தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கைகளும் துவக்கப்பட்டன. அதனால் அலட்சியத்தில், கொரோனாவுக்கான வழிமுறைகளை பின்பற்றுவதை, மக்கள் நிறுத்திவிட்டனர்.

இதையடுத்து, மரபணு மாற்றங்களுடன் வைரஸ், மேலும் வேகமாக பரவத் துவங்கியது. கொரோனா பரவல் மீண்டும் வேகமெடுத்துள்ள இந்த நேரத்தில், நம் நாட்டின் சுகாதார அமைப்பு, கடும் சிரமத்தை எதிர்கொள்கிறது. இந்த இக்கட்டான சூழலுக்கு மத்தியில், நம் நாட்டின் பல பகுதிகளில், மதம் சார்ந்த திருவிழாக்கள் நடந்து வருகின்றன. மறுபுறம், தேர்தல்கள் நடக்கின்றன.

மதத் திருவிழாக்களை, வழிமுறைகளை முறையாக பின்பற்றி, கட்டுப்பாடுகளுடன் நடத்தலாம். அப்படி செய்தால், யாருடைய மத உணர்வுகளும் புண்படாது. இந்த நேரத்தில், நாம் ஒன்றை உணரவேண்டும். அனைவருக்கும், உயிர் மிகவும் முக்கியம். தடுப்பூசிமக்கள், மற்றொன்றையும் புரிந்து கொள்ள வேண்டும். எந்தவொரு தடுப்பூசியும், 100 சதவீத செயல்திறனுடன் இருக்காது. தடுப்பூசி செலுத்தியவர்கள், வைரசால் பாதிக்கப்படலாம்; எனினும், உடலில் வைரஸ் பெருகுவதை தடுப்பு மருந்து கட்டுப்படுத்தும். இதனால், நோய் தீவிரமாகாது. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (28)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஏப்-202112:21:13 IST Report Abuse
g.s,rajan மக்கள் அணியும் முகக்கவசம் அனைத்தும் தரமானதா ???
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஏப்-202112:18:20 IST Report Abuse
g.s,rajan ,ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
T. Sivaraj - Dubai,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-202112:04:54 IST Report Abuse
T. Sivaraj இதில் கருத்து தெரிவிக்கும் எத்தனைபேர் முகக்கவசம் அணிகிறார்கள்? கொரோனா பரவ அரசியல்வாதிகள் மற்றும் அரசாங்கத்தை குறை கூறும் நாம், நம்மை காத்துக்கொள்ள கொரோனா வழிமுறைகளை பின்பற்றினோமா என்றால் கேள்விக்குறிதான். நமது மக்களுக்கு எப்பொழுதுமே ஒரு மெத்தனப்போக்கு உண்டு. வந்தபின் பார்த்துக்கொள்வோம் என்று, அதுதான் இப்பொழுது நடக்கிறது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X