பொது செய்தி

இந்தியா

முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.500 அபராதம்: ரயில்வே முடிவு

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.இது தொடர்பாக ரயி்ல்வே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம். இதனால், ரயில் பயணங்களின் போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பது கடந்த மே
முகக்கவசம், ரயில்வே, அபராதம், கொரோனா, கொரோனா வைரஸ், கோவிட்19, ரயில்

புதுடில்லி: ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் முகக்கவசம் அணியாமல் இருந்தாலும், எச்சில் துப்பினாலும் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என ரயில்வே அமைச்சகம் தெரிவித்து உள்ளது.

இது தொடர்பாக ரயி்ல்வே பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளதாவது: கொரோனா பரவலை கட்டுப்படுத்த முகக்கவசம் அணிவது கட்டாயம். இதனால், ரயில் பயணங்களின் போது முகக்கவசம் அணிவது அவசியம் என்பது கடந்த மே மாதம், ரயில்வே வெளியிட்ட வழிகாட்டு நெறிமுறைகளில் கூறப்பட்டுள்ளது.


latest tamil news



தற்போது கொரோனா பரவும் சூழ்நிலையில், ரயில் வளாகங்கள் மற்றும் ரயில் பயணங்களின் போது எச்சில் துப்பிவதும், முகக்கவசம் அணியாமல் இருப்பதும் சட்டப்படி குற்றம் ஆகும். அவ்வாறு செய்பவர்களுக்கு ரூ.500 அபராதம் விதிக்கப்படும். இவ்வாறு அந்த உத்தரவில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Palanivelu Kandasamy - Thiruvananthapuram (Trivandrum),இந்தியா
17-ஏப்-202122:32:03 IST Report Abuse
Palanivelu Kandasamy ஆனால் எல்லா இருக்கைக்கும் பயண சீட்டு கொடுத்து சமூக இடைவெளி இல்லாமல் செய்கிறார்களே. ஒருவரோடு ஒருவர் இடித்துக் கொண்டு தானே மணிக்கணக்கில் பயணம் செய்ய வேண்டியிருக்கிறது.
Rate this:
Cancel
Ramesh Sargam - Bangalore,இந்தியா
17-ஏப்-202120:26:01 IST Report Abuse
Ramesh Sargam மக்களே புரிந்துகொண்டு திருந்தவில்லையென்றால், சட்டத்தின் மூலம்தான் திருந்தவேண்டும்.
Rate this:
Cancel
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
17-ஏப்-202120:02:34 IST Report Abuse
தமிழ்வேள் அலுவல் ரீதியாக இல்லாமல் மேற்கு சென்னை அரக்கோணம் லைனில் முகக்கவசம் அணியாமல் இருந்தால் ரூ 200, தாடைக்கு போட்டிருந்தால் ரூ 100 என்று ஆர் பி எப் ஆட்கள் சில்லறை வசூல் செய்து கல்லாக்கட்டிக்கொண்டுதான் இருக்கிறார்கள் ..இன்று வரை இதுதான் நடந்துகொண்டுள்ளது ....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X