பொது செய்தி

தமிழ்நாடு

தமிழகத்தில் 9 ஆயிரத்தை தாண்டியது கொரோனா பாதிப்பு

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.17) 9 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 5,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.02 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கைதமிழகத்தில் இன்று (ஏப்.,17) 9,344 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால்

சென்னை: தமிழகத்தில் கொரோனா பாதிப்பு சில நாட்களாக படிப்படியாக அதிகரித்து வரும் நிலையில், இன்று (ஏப்.17) 9 ஆயிரத்தை கடந்தது. ஒரே நாளில் கொரோனா பாதித்த 5,263 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர். இதுவரை 9.02 லட்சம் பேர் டிஸ்சார்ஜ் ஆகியுள்ளனர்.



latest tamil news




தமிழக சுகாதாரத்துறை வெளியிட்ட அறிக்கை



தமிழகத்தில் இன்று (ஏப்.,17) 9,344 பேருக்கு கொரோனா உறுதியாகியுள்ளது. இதனால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 9,80,728 ஆக அதிகரித்து உள்ளது. தமிழகத்தில் உள்ள 263 ஆய்வகங்கள் (அரசு- 69 மற்றும் தனியார்-194) மூலமாக, இன்று மட்டும் 1 லட்சத்து 804 மாதிரிகள் பரிசோதனை செய்யப்பட்டு உள்ளன. இதனுடன் சேர்த்து, இதுவரை 2 கோடியே 10 லட்சத்து 77 ஆயிரத்து 500 மாதிரிகள் சோதனையிடப்பட்டன.

இன்று கொரோனா உறுதியானவர்களில், 5,679 பேர் ஆண்கள், 3,665 பேர் பெண்கள் என பாதிக்கப்பட்டு உள்ளனர். கொரோனா பாதித்த, ஆண்களின் மொத்த எண்ணிக்கை 5,92,042 ஆகவும், பெண்களின் எண்ணிக்கை 3,88,650 ஆகவும், மூன்றாம் பாலினத்தவர்களின் எண்ணிக்கை 36 ஆகவும் உள்ளது.


டிஸ்சார்ஜ்



இன்று மட்டும் 5,263 பேர் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டனர். இதனால், வீடு திரும்பியவர்களின் எண்ணிக்கை 9 லட்சத்து 2 ஆயிரத்து 022 ஆக உள்ளது. இன்று மட்டும் கொரோனா பாதித்த 39 பேர் உயிரிழந்துள்ளனர் அவர்களில் 22 பேர் தனியார் மருத்துவமனையிலும் 17 பேர் அரசு மருத்துவமனையிலும் உயிரிழந்துள்ளனர். இதனால், தமிழகத்தில் கொரோனா உயிரிழப்பு 13,071 ஆக அதிகரித்துள்ளது. தற்போது 65,635 பேர் சிகிச்சையில் உள்ளனர். இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.


மாவட்ட வாரியாக பாதிப்பு


latest tamil news



latest tamil news


Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Tamil - chennai,இந்தியா
18-ஏப்-202112:34:51 IST Report Abuse
Tamil சினிமா மார்க்கெட் பஸ்ஸ்டாண்ட் ரயில் நிலையம் டாஸ்மாக் நின்று அபராதம் வசூல் செய்யப்படவேண்டும் ஒரு குறுகிய சந்தையில் இன்று ஒரு ஆயிரம் பேர் நின்று கொண்டு இறைச்சி வாங்கி செல்லும் காட்சி கொரோன அதிகரிப்பதற்கான கரணம் தெரிய வந்தது. சண்டே ஆன்லைன் அல்லது போன் மூலம் புக்கிங் மற்றும் டெலிவரி செய்யும் கடைகளை தவிர்த்து கண்டிப்பாக மற்ற அணைத்து கடைகளை மூடச்சொல்லவும் அல்லது மாறுவதற்கு சொல்லவேண்டும்.. விடுமுறை என்பதால் மக்கள் கூட்டம் அதிகரித்த மேலும் மேலும் படப்பிவிடப் படுகிறது. மளிகைக்கடை இறைச்சிக்கடை மார்க்கெட் ரயில் பஸ்ஸ்டாண்ட் சினிமாமருத்துவமனைகள் மற்றும் டாஸ்மாக் கோரோனோ பரவும் முக்கிய இடங்கள் ஆகும். இதுபோன்ற idangalil அதிகமானகாவலர்கள் மாநகராட்சி ஊழியர்கள் மூலம் அபராதம் வசூல் செய்யப்படவேண்டும்
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
17-ஏப்-202121:52:19 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோன தடுப்புஊசி கடந்த மூன்று தினங்களாக போடவில்லை ,காரணம் சரியாக வெளியிடப்படவில்லை ,பொதுமக்கள் தொலைதூரத்திலிருந்து வருபவர்கள் வேதனைப்படுகிறார்கள் . சரியான நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel
Visu Iyer - chennai,இந்தியா
17-ஏப்-202120:22:48 IST Report Abuse
Visu Iyer படிப்படியாக உயரும் இந்த எண்ணிக்கை தேர்தல் முடிவுகளுக்கு பிறகு படிப்படியாக குறையும்..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X