பொது செய்தி

இந்தியா

10 மாநிலங்களில் கொரோனா வேகம் ஒரு நாள் பாதிப்பு 2.34 லட்சம் பேர்

Added : ஏப் 17, 2021
Share
Advertisement
புதுடில்லி:நாட்டின், 10 மாநிலங்களில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 2.34 லட்சம் பேர், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர்.24 மணி நேரத்தில்கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பரவல் படிப்படியாக உயர்வதால், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 15 லட்சம்
 10 மாநிலங்களில் கொரோனா வேகம் ஒரு நாள் பாதிப்பு 2.34 லட்சம் பேர்

புதுடில்லி:நாட்டின், 10 மாநிலங்களில், கொரோனா பரவல் தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில், கடந்த 24 மணி நேரத்தில், 2.34 லட்சம் பேர், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர்.

24 மணி நேரத்தில்கொரோனா பாதிப்பு நிலவரம் குறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் நேற்று வெளியிட்ட அறிக்கை:கொரோனா பரவல் படிப்படியாக உயர்வதால், பரிசோதனைகள் அதிகரிக்கப்பட்டு உள்ளன. இதன்படி, கடந்த 24 மணி நேரத்தில், 15 லட்சம் பேரிடம் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டன.இதன் வாயிலாக, இரண்டு லட்சத்து, 34 ஆயிரத்து, 692 பேரிடம் வைரஸ் பாதிப்பு உறுதியானது.

இதில், 79.32 சதவீதம் பேர், தமிழகம், மஹாராஷ்டிரா, உத்தர பிரதேசம், டில்லி உட்பட, 10 மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். மஹாராஷ்டிராவில் மட்டும், நேற்று ஒரே நாளில், 63 ஆயிரத்து, 729 பேர், வைரஸ் பாதிப்பிற்கு உள்ளாயினர். அடுத்ததாக உத்தர பிரதேசத்தில், 27 ஆயிரத்து, 360 பேரும்; டில்லியில், 19 ஆயிரத்து, 486 பேரும் பாதிக்கப்பட்டனர்.

நாட்டில் இதுவரை கொரோனா தொற்றுக்கு உள்ளானோர் எண்ணிக்கை, ஒரு கோடியே, 45 லட்சத்து, 26 ஆயிரத்து, 609 ஆக அதிகரித்து உள்ளது.வைரஸ் பாதிப்பில் இருந்து, ஒரு கோடியே, 26 லட்சத்து, 71 ஆயிரத்து, 220 பேர் குணமடைந்து உள்ளனர்; மீட்பு விகிதம், 87.23 சதவீதமாக உள்ளது.1,341 பேர் பலிபுதிய பாதிப்புகள் அதிகரிப்பால், கொரோனா சிகிச்சை பெறுவோர் எண்ணிக்கை, 16.80 லட்சமாக உயர்ந்துள்ளது.

இவர்களில், 65.02 சதவீதம் பேர், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், உத்தர பிரதேசம், கர்நாடகா மற்றும் கேரளா ஆகிய மாநிலங்களைச் சேர்ந்தவர்கள். கொரோனாவால் கடந்த, 24 மணி நேரத்தில், 1,341 பேர் பலியாயினர். மஹாராஷ்டிராவில் அதிகபட்சமாக, 398 பேர் இறந்துள்ளனர்.தமிழகத்தில், 33 இறப்புகள் பதிவாகிஉள்ளன.ஒட்டு மொத்த கொரோனா பலி எண்ணிக்கை, ஒரு லட்சத்து, 75 ஆயிரத்து, 649 ஆக அதிகரித்து உள்ளது

கொரோனா பரவலை தடுக்க, தடுப்பூசி போடும் பணிகள் விரைவுபடுத்தப்பட்டு உள்ளன. நேற்று காலை, 7:00 மணி வரை, 11 கோடியே, 99 லட்சத்து, 37 ஆயிரத்து, 641, 'டோஸ்' தடுப்பூசிகள் செலுத்தப்பட்டு உள்ளன.இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X