தடுப்பூசி கையிருப்பு 5 லட்சம் தான்! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

Added : ஏப் 17, 2021
Share
Advertisement
சென்னை:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஐந்து லட்சம் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பல மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் தடுப்பூசிக்கு மக்கள் தவம் கிடக்கும் நிலை உருவாகலாம். நாடு முழுதும், கொரோனா தொற்றை கட்டுப் படுத்த, கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகின்றன.ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி
 தடுப்பூசி கையிருப்பு 5 லட்சம் தான்! ஏமாற்றத்துடன் திரும்பும் மக்கள்

சென்னை:தமிழகத்தில் கொரோனா தடுப்பூசி, ஐந்து லட்சம் மட்டுமே கையிருப்பில் உள்ளது. பல மாவட்டங்களில் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், ஓரிரு நாட்களில் தடுப்பூசிக்கு மக்கள் தவம் கிடக்கும் நிலை உருவாகலாம்.

நாடு முழுதும், கொரோனா தொற்றை கட்டுப் படுத்த, கோவிஷீல்டு அல்லது கோவேக்சின் தடுப்பூசிகள், 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு போடப்பட்டு வருகின்றன.ஆரம்பத்தில் கொரோனா தடுப்பூசி போட மக்கள் தயக்கம் காட்டினர். இதனால், தடுப்பூசி மையங்கள் வெறிச்சோடி காணப்பட்டன. தற்போது, கொரோனா இரண்டாம் அலை மற்றும் அரசு ஏற்படுத்திய விழிப்புணர்வால், கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ள மக்கள் ஆர்வமுடன் வருகின்றனர். இதன் காரணமாக, தமிழகத்தில், நேற்று முன்தினம் வரை, 45 லட்சம் பேர் தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்.


தட்டுப்பாடு

எனவே, சென்னை மற்றும் அதன் புறநகர் மாவட்டங்களை தவிர்த்து, மாநிலம் முழுதும், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. பல மையங்களில் தடுப்பூசி இல்லாததால், பொது மக்கள் திரும்பி செல்கின்றனர்.குறிப்பாக, பிரதமர், ஜனாதிபதி உள்ளிட்ட தலைவர்கள் போட்டுக் கொண்ட, கோவேக்சின் தடுப்பூசிக்கு மக்களிடையே அதிக வரவேற்பு உள்ளது.இந்த தடுப்பூசிக்கு, நாடு முழுதும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

அதனால், கோவேக்சின், இரண்டாவது டோஸ், தடுப்பூசி போட முடியாத நிலை ஏற்பட்டு உள்ளது.கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு காரணமாக, தமிழகத்தில் பல மருத்துவ மனைகளில் மக்கள் கூட்டம் அலைமோதுகிறது.நீண்ட வரிசையில் பொதுமக்கள் காத்து இருந்தும், தடுப்பூசி இல்லாத நிலை ஏற்பட்டுள்ளது.


கொள்முதல்

இது குறித்து, சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:கொரோனா தடுப்பூசியை பொறுத்த வரை, மாநில அரசுகள் நேரடியாக கொள்முதல் செய்ய முடியாது. மத்திய அரசு தான், அனைத்து மாநிலங்களுக்கும் பகிர்ந்து அளித்து வருகிறது. தற்போது, தமிழகத்தில் ஐந்து லட்சம் தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன. தினமும், இரண்டு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படுவதால், இவை போதுமானதாக இல்லை.

எனவே, 15 லட்சம் கோவிஷீல்டு; ஐந்து லட்சம் கோவேக்சின் தடுப்பூசிகள் தேவை என, மத்திய அரசிடம் கேட்டுள்ளோம்.நேற்று, ஒரு லட்சம் கோவேக்சின் தடுப்பூசியை மத்திய அரசு அனுப்பியது. இன்று, இரண்டு லட்சம் கோவிஷீல்டு தடுப்பூசி வந்து சேரும்.தடுப்பூசி போட்டு கொள்ள மக்கள் காட்டும் ஆர்வத்திற்கு, இந்த எண்ணிக்கை போதுமானதாக இல்லை. இதனால், மாநிலம் முழுதும், கொரோனா தடுப்பூசிக்கு தட்டுப்பாடு ஏற்படலாம்.

இவற்றை தவிர்க்க, மத்திய அரசு அவ்வப்போது, தடுப்பூசியை தமிழகத்திற்கு வழங்கும் என, எதிர்பார்க்கிறோம்.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X