சம்பவம் செய்தி

தமிழ்நாடு

விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை:துபாயில் இருந்து, விமான இருக்கையில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 2.90 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.வளைகுடா நாடுகளில் இருந்து, தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அங்கிருந்து வரும் விமான பயணியர் மற்றும் விமானங்களை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். ஐக்கிய அரபு நாட்டின், துபாய்
 விமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.90 கோடி மதிப்புள்ள தங்கம் பறிமுதல்

சென்னை:துபாயில் இருந்து, விமான இருக்கையில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 2.90 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வளைகுடா நாடுகளில் இருந்து, தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அங்கிருந்து வரும் விமான பயணியர் மற்றும் விமானங்களை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானம் நேற்று முன்தினம் பிற்பகல், 12:25 மணிக்கு, சென்னை வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணியர் இறங்கியவுடன், விமானத்தை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.அப்போது, ஒரு குறிப்பிட்ட இருக்கையின் அடியில், வெள்ளை நிற, 'டேப்' சுற்றப்பட்ட, இரண்டு, 'பண்டல்'கள் இருப்பதை, சுங்கத் துறையினர் கண்டுபிடித்தனர். அதை பிரித்து பார்த்த போது, 6 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு, 2.90 கோடி ரூபாய். தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், தங்க கட்டிகளை கடத்தியவர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
W W - TRZ,இந்தியா
18-ஏப்-202119:22:22 IST Report Abuse
W W அவர்களின் பின்னணி என்ன ? எந்த அரசியல் () காட்சியை சேர்ந்தவர்கள் ? அதனை தெரிவிக்க வேண்டாம் அட அவர்களின் பெயர் தேரிவிக்க கூட வேண்டாம்.நல்லவர்கள் நாட்டை ஆண்டால்தன் இதுமாதிரி சம்பவங்கள் வெளி வருகிறது .
Rate this:
Cancel
RAMAKRISHNAN NATESAN - TROY- MICHIGAN,,யூ.எஸ்.ஏ
18-ஏப்-202114:05:58 IST Report Abuse
RAMAKRISHNAN NATESAN அடடா அமைதி மார்க்கத்தின் மேலயா சமதேகப்படுறீங்க? இருக்காது அவங்க யோக்கியர்கள்
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X