சிறப்பு பகுதிகள்

பேச்சு, பேட்டி, அறிக்கை

பேச்சு, பேட்டி, அறிக்கை

Added : ஏப் 17, 2021
Share
Advertisement
'இவர் தான் நியாயமான அரசியல் தலைவர்...' என சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: சென்னையில் நெடுஞ்சாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த, தலைவர்களின் பெயர் மாற்றப்பட்ட விவகாரத்தில், மத்தியில், மாநிலத்தில் இருக்கும் கட்சிகளுக்கு, எந்த பொறுப்பும் இல்லை. இது, சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல். விரைவில், அந்த கோளாறு சரி செய்யப்படும்.'மத வழிபாடு மீது கண்

பேச்சு, பேட்டி, அறிக்கை

'இவர் தான் நியாயமான அரசியல் தலைவர்...' என சொல்லத் தோன்றும் வகையில், த.மா.கா., தலைவர் வாசன் அறிக்கை: சென்னையில் நெடுஞ்சாலைகளுக்கு வழங்கப்பட்டிருந்த, தலைவர்களின் பெயர் மாற்றப்பட்ட விவகாரத்தில், மத்தியில், மாநிலத்தில் இருக்கும் கட்சிகளுக்கு, எந்த பொறுப்பும் இல்லை. இது, சில அதிகாரிகளின் பொறுப்பற்ற செயல். விரைவில், அந்த கோளாறு சரி செய்யப்படும்.


'மத வழிபாடு மீது கண் வைக்கும் கம்யூ.,க்களே, சில நாட்களுக்கு முன் கூட, வகைதொகையின்றி ஆயிரக்கணக்கில் கூடி தேர்தல் பிரசாரம் செய்தீர்களே; அப்போதெல்லாம் கொரோனா பரவவில்லையா...' என, கேட்கத் தோன்றும் வகையில், மார்க்சிஸ்ட் மாநில செயலர் பாலகிருஷ்ணன் பேட்டி:
கொரோனா பரவல் தடுப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு தான், மத வழிபாட்டு உரிமை இருக்க வேண்டும். மதவழிபாட்டு உரிமையில் சில கட்டுப்பாடுகளை கொண்டு வருவதை தவிர்க்க முடியாது. கட்டுப்பாடில்லாமல் வழிபாட்டிற்கு கூடினால், வழிபாட்டில் இல்லாத மக்களும் தொற்றால் பாதிக்கப்படுவர்.


'மனிதக்கழிவை மனிதர் அள்ள அனுமதித்தது, நம்மைப் போன்ற மனிதர்கள் தானே தவிர சமுதாயம் அல்ல...' என, நெத்தியடியாக கூறத் துாண்டும் வகையில், ஐதராபாத் முஸ்லிம் கட்சி ஒன்றின் தலைவரான ஒவைசி அறிக்கை:
மனிதக் கழிவை மனிதரே அள்ளும் கொடுமையை, இந்த நாட்டின் சட்டங்களால் நிறுத்த முடியவில்லை. இந்தியாவில் நிலவும் ஜாதி வேற்றுமை தான், பல தலைமுறைகளாக குறிப்பிட்ட மக்களை, இந்த ஈனத் தொழிலில் ஈடுபடச் செய்துள்ளது.


'தமிழகத்திலும், சில நாட்களுக்கு முன் தேர்தல் நடந்தது. அதுபோல, மேற்கு வங்கத்திலும் நடக்கிறது. கொரோனாவுக்காக பிரசாரத்தை கைவிட முடியுமா... கொரோனா காலத்திலும் நீங்கள் அறிக்கை விட்டபடியே தானே இருக்கிறீர்கள்...' என, காட்டமாக சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்கிரஸ் செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
உத்தர பிரதேசம், பீஹார், குஜராத், டில்லி மாநிலங்களில் கொரோனாவின் தாக்குதலை, அம்மாநில அரசுகளால் சமாளிக்க முடியவில்லை. மருத்துவமனைகளும், இடுகாடுகளும் இடமில்லாமல் திணறுகின்றன. ஆக்சிஜன் பற்றாக்குறை நிலவுகிறது. ஆனால், பிரதமரும், அமித் ஷாவும், ஒளிரும் மேற்கு வங்கத்தை உருவாக்க, மேற்கு வங்கத்தில் முகாமிட்டுள்ளனர்; உருப்படுமா நாடு?


'தேர்தலையும் திடீரென நிறுத்த முடியாது; லட்சக்கணக்கான பக்தர்கள் கூடும் கும்பமேளாவையும் தடுக்க முடியாது. இதில், மோடியையும், அமித் ஷாவையும் ஏன் இழுக்கிறீர்கள்...' என, கேட்கத் தோன்றும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர் பீட்டர் அல்போன்ஸ் அறிக்கை:
மேற்கு வங்க தேர்தல் பிரசார கூட்டங்களும், உத்தரகண்ட் மாநிலம், ஹரித்துவாரில் நடக்கும் கும்பமேளாவும், இந்தியா முழுதும் பேரழிவை உண்டாக்கும் என, ஆங்கில பத்திரிகை சுட்டிக்காட்டுகிறது. பிரதமருக்கும், உள்துறை அமைச்சருக்கும் இது தெரியாதா?


'அந்த தகன மையத்திற்கு, அதிக எண்ணிக்கையில் வரும் உடல்களை காண, ஏராளமானோர் அங்கு கூடி, தொற்று ஏற்பட்டு விடக்கூடாது என்பதற்காக அடைக்கப்பட்டிருக்கலாம்...' என, சொல்லத் தோன்றும் வகையில், தமிழக காங்., செயல் தலைவர் மோகன் குமாரமங்கலம் அறிக்கை:
உ.பி., மாநிலம் லக்னோவில், கொரோனாவால் பலியாவோர் உடல்களை தொடர்ந்து எரியூட்டி வருவதை, ஊடகங்கள் செய்தியாக வெளியிடுவதை தடுக்க, தகன மையத்தை மறைத்து தடுப்பு அமைக்கப்பட்டுள்ளது.


'ராம்தேவ், பா.ஜ., ஆதரவாளர் என்பதால், உயிருக்கு ஆபத்தான நேரத்தில், அவரிடம் போய் யாராவது சிகிச்சை பெறுவரா...' என, கேட்கத் தோன்றும் வகையில், தமிழக காங்., - எம்.பி., கார்த்தி சிதம்பரம் அறிக்கை:
பா.ஜ.,வைச் சேர்ந்த, உ.பி., முதல்வர் ஆதித்யநாத், கொரோனாவுக்கு சிகிச்சை பெற, லக்னோவில் உள்ள சஞ்சய் காந்தி மருத்துவ அறிவியல் கழக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். இதன் வாயிலாக, ராம்தேவின் மருத்துவத்தை, அவர் நம்பவில்லை என்பது தெரிகிறது.


'மதம், வழிபாடு போன்ற விவகாரங்களில் கருத்து பதிவிடும் போது, கவனமாக இருக்க வேண்டும் என்பதை, அந்த தொழிலதிபர் இப்போது உணர்ந்திருப்பாரே...' என, சொல்லத் தோன்றும் வகையில், காங்., செய்தித் தொடர்பாளர் அமெரிக்கை நாராயணன் அறிக்கை:
'முகத்தில் கட்ட வேண்டிய கவசத்தை, இடுப்பில் கட்டியுள்ளனரே' என, கும்பமேளா சாதுக்கள் பற்றி, தொழிலதிபர் ஹர்ஷ் கோயங்கா கிண்டலாக கூறியிருந்தார். இதன் வாயிலாக, கொரோனா விழிப்புணர்வின்றி, அதிக எண்ணிக்கையில் கூடியுள்ளனரே என்ற, கவலையை தெரிவித்திருந்தார். அதைப் பார்த்து சிரிக்கத் தான் வேண்டுமே தவிர, 'சீயெட் டயர்களை புறக்கணிக்க வேண்டும்' என, கூச்சலிடக் கூடாது.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X