பொது செய்தி

இந்தியா

தடுப்பூசி ஏற்றுமதி இந்தியாவுக்கு சாதகம்

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
நட்பு நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்குவதால், சர்வதேச அரங்கில், 'மருந்து தயாரிப்பின் மையமாக' இந்தியா விளங்குகிறது. நம் நல்லெண்ண நடவடிக்கை, உலக நாடுகளின் நட்பை பெற்றுத் தருவதுடன், அன்னிய முதலீட்டையும் குவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசியின் தேவையும் அதிகரித்துள்ளது.
தடுப்பூசி, ஏற்றுமதி, இந்தியா, சாதகம்,முதலீடுகள் வாய்ப்பு

நட்பு நாடுகளுக்கும், உலக நாடுகளுக்கும் தடுப்பூசி வழங்குவதால், சர்வதேச அரங்கில், 'மருந்து தயாரிப்பின் மையமாக' இந்தியா விளங்குகிறது. நம் நல்லெண்ண நடவடிக்கை, உலக நாடுகளின் நட்பை பெற்றுத் தருவதுடன், அன்னிய முதலீட்டையும் குவிக்கும் வாய்ப்பு ஏற்பட்டுள்ளது.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை மிகத் தீவிரமாக உள்ளது. அதற்கு எதிரான தடுப்பூசியின் தேவையும் அதிகரித்துள்ளது.

இந்நிலையில், அண்டை நாடுகளுக்கும், உலகின் மற்ற நாடுகளுக்கும், தடுப்பூசிகளை இலவசமாக வழங்குவது, ஏற்றுமதி செய்வது குறித்து, எதிர்க்கட்சித் தலைவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'பல மாநிலங்களில், தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், இந்த தாராள மனப்போக்கு தேவையா' என, அவர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 'முதலில், நம் மக்களை காப்பாற்றுங்கள்; பிறகு தானம் செய்யலாம்' என்றும் அவர்கள் விமர்சனங்களை முன்வைத்துள்ளனர். ஏற்றுமதியை நிறுத்த வேண்டும் என்றும் பலர் கூறி வருகின்றனர்.

அமெரிக்கா, பிரிட்டன், மற்ற ஐரோப்பிய நாடுகள் தடுப்பூசிகளை தயாரித்தபோதும், மற்ற நாடுகளுக்கு உதவ முன்வரவில்லை. நம்மை விட மக்கள்தொகை குறைவாக உள்ள அந்த நாடுகள், தங்கள் தேவையை மட்டுமே கவனித்து வருகின்றன.அவ்வாறு இருக்கையில், நம் நாட்டில் வீடு வீடாகச் சென்று, ஏன் தடுப்பூசி வழங்கக் கூடாது? நம் மக்களுக்கு தட்டுப்பாடு உள்ள நிலையில், ஏற்றுமதி செய்வது முக்கியமா என்ற விமர்சனங்கள், மத்திய அரசை நோக்கி ஏவப்படுகின்றன.


தட்டுப்பாடு ஏன்?


ஏற்றுமதியைத் தவிர, நம் நாட்டில் தட்டுப்பாடு ஏற்படுவதற்கு முக்கிய காரணம், தடுப்பூசி வீணடிக்கப்படுவது தான். தமிழகத்தில், 12.4 சதவீத தடுப்பூசி வீணடிக்கப்படுகிறது. ஹரியானாவில், 10 சதவீதம்; பீஹாரில், 8.1 சதவீத தடுப்பூசி வீணடிக்கப்படுகின்றன.இதை தடுக்க, தேசிய சுகாதார ஆணையத்தின் தலைமை செயலர் அதிகாரி, டாக்டர் ராம் சேவாக் சர்மா, பல ஆலோசனைகளை வழங்கியுள்ளார். சிறிய அளவிலான தடுப்பூசி முகாம்களை, பெரிய முகாம்களுடன் இணைப்பது உள்ளிட்டவை அவரது ஆலோசனை.

தடுப்பூசி வீணாவதற்கு, பல காரணங்கள் உள்ளன. திறக்கப்படாத தடுப்பூசி குப்பிகள், அதிக வெப்பநிலையில் வைக்கப்படுவது, அதிக அளவு குளிரில் உறைவது, குப்பிகள் உடைவது என, பலவகையில் வீணாகிறது. அத்துடன், திறக்கப்பட்ட குப்பிகளும் முழுமையாக பயன்படுத்தப்படாவிட்டால், மருந்துகள் வீணாகின்றன. தடுப்பூசிக்கு தட்டுப்பாடு உள்ள தாக, சில மாநிலங்கள் அரசியல் செய்வதாகவும், மத்திய அரசு தரப்பில் கூறப்படுகிறது.


சாதகம் என்ன?


இம்மாதம், 8ம் தேதி நிலவரப்படி, இந்தியா இதுவரை, 6.50 கோடி, 'டோஸ்' தடுப்பூசிகளை மற்ற நாடுகளுக்கு ஏற்றுமதி செய்துள்ளது. அவசர, ஆபத்து, இடர்ப்பாடு காலத்தில், மற்ற நாடுகளுக்கு உதவும் பொறுப்பை, இந்தியா நிறைவேற்றியுள்ளது.

இதனால், என்ன சாதகம் ஏற்படப் போகிறது என்பது குறித்து, வெளியுறவுத் துறை நிபுணர்கள் கூறியுள்ளதாவது: 'வசுதேவ குடும்பகம்' எனப்படும், அனைவரும் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா மற்ற நாடுகளை பார்க்கிறது. இதுவரை, 72 நாடுகளுக்கு தடுப்பூசிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. இது, பிரதமர் நரேந்திர மோடி அரசின், வெளியுறவுக் கொள்கையின் சொத்தாக பார்க்கப்படுகிறது.

தடுப்பூசி தேவைப்படும் நம் அண்டை நாடுகளுடன், ஆப்ரிக்கா, வட அமெரிக்கா, தென் அமெரிக்கா என, உலகம் முழுதும் நம்முடைய தடுப்பூசி சென்றுள்ளது.ஒரு பக்கம், இரு தரப்பு உறவுகளின் அடிப்படையில் சில நாடுகளுக்கு இலவசமாகவும், சில நாடுகளுக்கு கடனாகவும் வழங்கப்பட்டுள்ளது. மேலும், உலக சுகாதார அமைப்பு மற்றும் 'காவி' எனப்படும் தடுப்பூசி கூட்டணி சார்பிலும் வழங்கப்பட்டுள்ளது. இதைத் தவிர, சில நாடுகளுக்கு வர்த்தக ரீதியில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது.

இதன் வாயிலாக, உலக அரங்கில், நம் நாட்டின் மதிப்பு வெகுவாக உயர்ந்துள்ளது. அத்துடன், உலகின் மருந்து தயாரிப்பு மையமாக இந்தியா உள்ளது என்பதை உலக நாடுகளுக்கு பறைசாற்றப்பட்டுள்ளது.


வேலைவாய்ப்பு


கொரோனா வைரஸ் பரவல் எப்போது முடிவுக்கு வரும் என்பது யாருக்கும் தெரியாது. உலகெங்கும், அதற்கான தடுப்பூசி அதிக அளவில் தேவை. ஏற்கனவே நம் தடுப்பூசிகளின் தரத்தை, உலக நாடுகள் ஏற்றுக் கொண்டுள்ளன.அந்த நிலையில், உலகின் முன்னணி தடுப்பூசி நிறுவனங்கள், இந்தியாவில் தங்கள் தயாரிப்பு ஆலைகளை அமைக்க முன் வரும். அதனால், அன்னிய முதலீடு குவியும்; வேலைவாய்ப்புகள் பெருகும்.

சீனாவின் தடுப்பூசியை, பல நாடுகள் இன்னும் அங்கீகரிக்கவில்லை. அதே நேரத்தில், நம் தடுப்பூசிக்கு அதிக தேவை உள்ளது. மருந்து மட்டுமல்ல, மற்ற பொருட்களிலும் தரத்தை நிரூபித்தால், நம் பொருட்களுக்கு உலக சந்தையில் அதிக வரவேற்பு கிடைக்கும் சூழ்நிலையையும் இந்த நல்லெண்ண நடவடிக்கை ஏற்படுத்திஉள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.
- நமது சிறப்பு நிருபர் -

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Jayvee - chennai,இந்தியா
21-ஏப்-202115:12:51 IST Report Abuse
Jayvee தடுப்பூசி போட்டுக்கொள்ளுங்கள் என்று அரசுகள் கூவி கூவி அழைத்தபோது ஒருத்தனும் வரல.. ஏன் முன் களப்பணியாளர்கள் கூட அதை ஏற்கவில்லை.. இப்போது கூட்டமாக வந்து கழுத்தறுக்க வேண்டியது..
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
18-ஏப்-202108:52:26 IST Report Abuse
VENKATASUBRAMANIAN இங்குள்ள அறிவீலிகளுக்கு எதுவும் தெரியாது. கொடுத்தாலும் பேசுவார்கள். கொடுக்காவிட்டாலும் பேசுவார்கள்
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
18-ஏப்-202110:44:03 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுகாரணம் இது பெரியார் மண்...
Rate this:
Cancel
R.RAMACHANDRAN - Sundivakkam,இந்தியா
18-ஏப்-202108:39:38 IST Report Abuse
R.RAMACHANDRAN அனைவரும் ஒரு குடும்பம் என்ற கோட்பாட்டுடன் இந்தியா மற்ற நாடுகளை பார்க்கிறது என்பதெல்லாம் ஏமாற்று வேலை.இந்த நாட்டிலேயே அதன் அமல்படுத்த முடியவில்லை.இவர்கள் பெயருக்காகவும் புகழுக்காகவும் அலைகின்றனர்.அரசு அதிகார வர்க்கத்தின் கொடுங்கோன்மை காரணமாக இந்த நாட்டில் பலர் வறுமையில் வாடும் நிலையில் வெளி நாடுகளுக்கு இலவசமாக வழங்கி தங்கள் கொடையாளிகள் என பொய்யான நாடகம் நடத்துகின்றனர்.
Rate this:
Sriram Narashum L - Jamnagar,இந்தியா
18-ஏப்-202110:25:07 IST Report Abuse
Sriram Narashum Lஉன்னுடைய அறிவுக்கு இந்தியாவில் இருப்பது தான் கேவலம்...
Rate this:
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
18-ஏப்-202110:26:15 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டுதேவையான இருப்பு வைத்துக்கொண்ட பிறகுதான் ஏற்றுமதியும் செய்தார்கள் அதுவும் ஏழை நாடுகளுக்கு இலவசம் அல்லது மலிவு விலை இதிலும் குறை கூறும் நீ நார்மலா இல்ல...
Rate this:
18-ஏப்-202110:39:11 IST Report Abuse
ஆரூர் ரங்30 சதவீத மக்கள் நேரடியாக அல்லது மறைமுகமாக ஏற்றுமதி அல்லது இறக்குமதி வணிகத்தை நம்பி வாழ்கின்றனர். ஆபத்தில் உதவுவது நல்லெண்ணத்ததையும் வணிகத்தையும் வளர்க்கும்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X