பொது செய்தி

தமிழ்நாடு

ஒரே நாளில் பிறந்த நாள் : முன்னாள் பிரதமர் இந்திராவிடம் கடிதம் பெற்ற விவேக்

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (6)
Share
Advertisement
குன்னூர்: மறைந்த நடிகர் விவேக் குன்னூரில் 2ம் வகுப்பு படிக்கும் போதே இந்திராவிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இதனை 6 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு வந்த விவேக் மலைரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார். நடிகர் விவேக் உயிரிழப்பு அனவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை ஆர்வலரான நடிகர் விவேக், நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் ஆரம்ப

குன்னூர்: மறைந்த நடிகர் விவேக் குன்னூரில் 2ம் வகுப்பு படிக்கும் போதே இந்திராவிடம் இருந்து கடிதம் வந்துள்ளது. இதனை 6 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு வந்த விவேக் மலைரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்.latest tamil newsநடிகர் விவேக் உயிரிழப்பு அனவரையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. இயற்கை ஆர்வலரான நடிகர் விவேக், நீலகிரி மாவட்டம் குன்னூரில் ஓட்டுப்பட்டறையில் உள்ள சாந்தி விஜய் ஆரம்ப பள்ளியில் 1 முதல் 3ம் வகுப்பு வரை பயின்றுள்ளார். அப்போது, இவரின் பிறந்தநாளான நவ.19ம் தேதியில் முன்னாள் பிரதமர் இந்திரா பிறந்த தேதியும் ஒன்றாக இருந்ததை தந்தையிடம் கூறி அவருக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

இந்நிலையில், இவர் நண்பர்களுடன் கோலி விளையாடி கொண்டிருந்த போது, குதிரையில் வந்த ஜவான்கள் விவேகானந்தன் எங்கே என கேட்டுள்ளனர். இதனை கேட்ட விவேக் அப்போது அருகில் உள்ள பேரிக்காய் தோட்டத்தில் சென்று ஒளிந்துள்ளார். இவரது தாயார் அழைத்து பிரதமரிடம் கடிதம் வந்ததை தெரிவித்த பிறகு மகிழ்ச்சியடைந்தார். இந்த சம்பவத்தை ஒரு தனியார் சேனலுக்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.

இதன்பிறகு கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு குன்னூர் பள்ளிக்கு வந்த நடிகர் விவேக், பள்ளி குழந்தைகள், ஆசிரியர்களிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்துள்ளார்


latest tamil news


இது தொடர்பாக பள்ளி தலைமையாசிரியர் உமாமகேஷ்வரி கூறுகையில், "கடந்த 6 ஆண்டுகளுக்கு முன்பு பள்ளிக்கு வந்த நடிகர் தங்களிடம் மலரும் நினைவுகளை பகிர்ந்தார். குழந்தைகள் பெற்றோரிடம் கீழ்படிந்து நடக்கவும் , வீடுகள் தோறும் மரக்கன்றுகள் நடவும் அறிவுரை வழங்கினார்." என்றார்.

Advertisement
வாசகர் கருத்து (6)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
VeeJay - Austin,யூ.எஸ்.ஏ
22-ஏப்-202120:14:04 IST Report Abuse
VeeJay அரசு அணைத்து பள்ளிக்கூடைகளையும் பராமரிக்க வேண்டும்.. உள்ளூர் அரசியல் வாதிகள் கனடிப்பக இங்குதான் படித்திருப்பார்கள். அரசு கொடுக்கும் பணத்தை திருடாமல் பள்ளிக்கு செலவு செய்யவும்.
Rate this:
Cancel
sekar -  ( Posted via: Dinamalar Android App )
18-ஏப்-202118:16:42 IST Report Abuse
sekar I am just a middle class private employee but gave 1 lack to renovate my school. But vivek school?!!!... feeling sad to see that building.....
Rate this:
Cancel
Anand - munich,ஜெர்மனி
18-ஏப்-202101:52:36 IST Report Abuse
Anand ஆன்டவன் பெட்டியில் வைத்த தெய்வீக ஜாதகம் இவருடையதோ? தெய்வ குணத்துடன் வாழ்ந்த மனிதப்பறவி
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X