தடுப்பூசி போடும் வயது: மத்திய அரசுக்கு காங். செயற்குழு யோசனை

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (7+ 26)
Share
Advertisement
புதுடில்லி: 'தடுப்பூசி போடும் வயதை, 25 ஆக குறைக்க வேண்டும்; குடும்பத்திற்கு, 6,000 ரூபாய் தர வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த, கட்சியின் செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசுக்கு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
மத்திய அரசு, காங்கிரஸ், யோசனை, தடுப்பூசி, வயது

புதுடில்லி: 'தடுப்பூசி போடும் வயதை, 25 ஆக குறைக்க வேண்டும்; குடும்பத்திற்கு, 6,000 ரூபாய் தர வேண்டும்' என, காங்கிரஸ் தலைவர் சோனியா தலைமையில் நடந்த, கட்சியின் செயற்குழு கூட்டத்தில், மத்திய அரசுக்கு பல யோசனைகள் முன்வைக்கப்பட்டன.

கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, நாடு முழுதும் தீவிரமாக உள்ளது. வைரஸ் பரவலைத் தடுக்க, மத்திய - மாநில அரசுகள் நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.

இந்நிலையில், கொரோனா வைரஸ் பரவல் நிலவரம் குறித்து விவாதிக்க, காங்., தலைவர் சோனியா தலைமையில், கட்சியின் செயற்குழு கூட்டம் நேற்று நடந்தது.'வீடியோ கான்பரன்ஸ்' முறையில் நடந்த கூட்டத்தில், முன்னாள் தலைவர் ராகுல், முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் உள்ளிட் டோர் பங்கேற்றனர்.


தட்டுப்பாடு


இந்த கூட்டத்தில், சோனியா பேசியதாவது: கொரோனா வைரஸ் பரவல் ஏற்பட்டு, ஒரு ஆண்டுக்குப் பிறகும், இன்னும் நாம் நிலைமையை எதிர்கொள்ள தயாராகவில்லை. தற்காலிகமாக சில நடவடிக்கைகள் மட்டுமே எடுக்கப்பட்டு வருகின்றன.கொரோனா வைரஸ் பரவலைத் தடுப்பதை, நம் நாட்டுக்கான சவாலாகவே நாங்கள் பார்க்கிறோம். ஜனநாயக பாரம்பரியத்தின் அடிப்படையில், பல ஆலோசனைகளை தொடர்ந்து அரசுக்கு அளித்து வருகிறோம்.ஆனால், அதற்கு எதிராக கருத்து கூறுவது, விமர்சிப்பது போன்றவற்றில் மட்டுமே, பிரதமர் நரேந்திர மோடி அரசு ஈடுபட்டு வருகிறது.

எதிர்க்கட்சிகள் கூறும் கருத்துகள் தொடர்ந்து புறக்கணிக்கப்படுகின்றன. நீயா, நானா என, குழந்தைத் தனமான வாக்குவாதங்களை மட்டுமே, மத்திய அமைச்சர்கள் கூறி வருகின்றனர். வைரஸ் பரவல் தடுப்பில், மத்திய அரசு பாரபட்சமாக செயல்படுகிறது. காங்., அல்லது எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்களுக்கு உரிய உதவிகள் செய்யப்படவில்லை.
இந்த இக்கட்டான நேரத்தில், அரசியலுக்கு அப்பாற்பட்டு மத்திய அரசு செயல்பட வேண்டும்.

அதிக பாதிப்புள்ள நாடுகளில் ஒன்றாக இந்தியா உள்ளது. இந்நிலையில், நம் மக்களுக்கு முக்கியத்துவம் அளித்து, கொரோனா தடுப்பூசி ஏற்றுமதியை தற்காலிகமாக நிறுத்தி வைக்க வேண்டும்.காங்., ஆளும் மாநில முதல்வர்களுடன் சமீபத்தில் ஆலோசனை நடத்தினேன். அப்போது, தடுப்பூசி தட்டுப்பாடு உள்ளதாக அவர்கள் கூறினர்.ஆனால், இது குறித்து மத்திய அரசு மவுனமாக உள்ளது. சில மாநிலங்களுக்கு மட்டும் சிறப்பு கவனம் செலுத்தப்படுகிறது. இந்த சூழ்நிலையில், எங்களுடைய சில யோசனைகளை முன்வைக்கிறோம். அவற்றை மத்திய அரசு கவனிக்கும் என, எதிர்பார்க்கிறோம்.

தற்போது, 45 வயதுக்கு மேற்பட்டோருக்கு தடுப்பூசி போடப்படுகிறது. இதை, 25 வயதாக குறைக்க வேண்டும். மற்ற நோய்கள் உள்ள, 25 வயதுக்கு உட்பட்டவர்களுக்கும் தடுப்பூசி வழங்க முன்னுரிமை அளிக்க வேண்டும்.கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க பயன்படுத்தும் கருவிகள், சாதனங்கள், மருந்துகளுக்கு, ஜி.எஸ்.டி., எனப்படும் சரக்கு மற்றும் சேவை வரியில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும்.


அச்சத்தில் மக்கள்


வைரஸ் பரவலைத் தடுக்க, பல மாநிலங்களில் பகுதி நேர ஊரடங்கு, கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளன. மேலும், பயணக் கட்டுப்பாடும் உள்ளது. ஊரடங்கு காலத்தின்போது ஏற்பட்டதுபோல, பொருளாதார இழப்பு ஏற்படும் அச்சத்தில் மக்கள் உள்ளனர். அதனால், தகுதியுள்ள அனைவருக்கும், தலா, 6,000 ரூபாயை, அவர்களது வங்கிக் கணக்கில் செலுத்த வேண்டும்.இந்த நேரத்தில், கொரோனாவில் உயிர்இழந்தோரின் குடும்பத்தாருக்கு எங்கள் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்து கொள்கிறோம். வைரஸ் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள அனைத்து முன்களப் பணியாளர்களுக்கும் நன்றியை யும், பாராட்டையும் தெரிவிக்கிறோம். இவ்வாறு அவர் பேசினார்.


ராகுலுக்கு பாராட்டு


''கொரோனா வைரசுக்கு எதிராக, மத்திய அரசு சரியாக திட்டமிடவில்லை. நிலைமையை எப்படி சமாளிப்பது என்ற வியூகமும் இல்லை. தடுப்பூசியில் இருந்து ஆக்சிஜன் வரை, இது நிரூபிக்கப்பட்டுள்ளது,'' என. ராகுல் கூறினார்.

'கொரோனா வைரஸ் பரவல் குறித்து, கடந்தாண்டு, பிப்ரவரியில் இருந்து ராகுல் கூறி வந்த கணிப்புகள், கருத்துகள், ஆலோசனைகள் அனைத்தும் உண்மையில் நடந்துள்ளன. அவரது ஆலோசனைகளை மத்திய அரசு அப்படியே செயல்படுத்த வேண்டும்' என, மூத்த தலைவர்கள் திக்விஜய் சிங், பிரமோத் திவாரி உள்ளிட்டோர் கூறினர்.


'பதிலடி நிச்சயம்'


முன்னாள் மத்திய அமைச்சரும், காங்., மூத்த தலைவருமான சிதம்பரம் கூறியதாவது:நாடு முழுதும் வைரஸ் பரவல் அதிகரித்துஉள்ள நிலையில், பிரதமர் மோடி, டில்லியில் இருந்து கண்காணித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும். ஆனால், அவர் மேற்கு வங்கத்தில் பிரசாரத்தில் ஈடுபட்டுள்ளார். இது உச்சகட்ட அயோக்கியத்தனம். அவரது இந்த செய்கைக்கு, மேற்கு வங்க மக்கள் சரியான பதிலடியைக் கொடுப்பர்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (7+ 26)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
RajanRajan - kerala,இந்தியா
18-ஏப்-202112:33:21 IST Report Abuse
RajanRajan சந்தடி சாக்கிலே வாடிகன் அம்மணி மத்திய அரசுக்கு ஊசி போட்டு பார்க்க துடிக்குதோ.
Rate this:
Cancel
vbs manian - hyderabad,இந்தியா
18-ஏப்-202110:27:07 IST Report Abuse
vbs manian இவர்கள் கூற்று படி ராகுல் தீர்க்க தரிசி. இரண்டாம் அலை வரப்போவது இவருக்கு முன்பே தெரியும். அனால் உலக சுகாதார நிறுவனத்துக்கு தெரியவில்லை. உலகில் எல்லா நாடுகளிலும் இரண்டாம் அலை வந்துவிட்டது. அவர்களுக்கும் தெரியவில்லை. அவர்கள் ராகுல் காந்தியை கேட்டிருக்கலாம். இனிமேலாவது கேட்கட்டும்.உலகிலேயே காரோண விஷய நிபுணத்துவம் காங்கிரெஸ் வசம் மட்டுமே உள்ளது.சரி இரண்டாம் அலை வரும் என்று தெரிந்த இவர்கள் தடுக்க என்ன செய்தார்கள் கொள்ளையடித்த கோடிகள் உள்ளனவே. கவசம் சாநிதிஸிர் ஊசிகள் வெண்டிலேட்டர் வாங்கி கொடுத்திருக்கலாமே. செய்யும் நல்ல காரியத்தையும் குறை சொல்வது மட்டுமே இவர்கள் வேலை. இதனால் காங்கிரஸ் இன்னும் மக்களிடமிருந்து தனிமைப்பட்டு போகும். எதிர் மறை விமர்சனத்தால் காங்கிரஸ் அஸ்தமனம் ஆகும்.
Rate this:
Cancel
kosu moolai - nadunilaiyoor,இந்தியா
18-ஏப்-202107:53:56 IST Report Abuse
kosu moolai இவனுங்க பண்ணற கூத்துக்கு அளவே இல்லாமல் இருக்கு. என்ன ஜென்மங்களோ.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X