பொது செய்தி

இந்தியா

பிரதமர் வேண்டுகோளை ஏற்று கும்பமேளா விழா நிறைவு!

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (18)
Share
Advertisement
புதுடில்லி : உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடிய துறவியர் உட்பட பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, கும்பமேளாவை நிறைவு செய்துள்ளதாக, துறவியர் அமைப்பு அறிவித்துள்ளது. அதனால், ஹரித்வாரிலிருந்து, பல லட்சம் பேர் வெளியேறத்துவங்கியுள்ளனர். உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத்
பிரதமர், வேண்டுகோள், கும்பமேளா, விழா, நிறைவு, ஹரித்வார்

புதுடில்லி : உத்தரகண்ட் மாநிலம், ஹரித்வாரில் நடக்கும் கும்பமேளாவில் புனித நீராடிய துறவியர் உட்பட பலர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, பிரதமர் மோடியின் வேண்டுகோளை ஏற்று, கும்பமேளாவை நிறைவு செய்துள்ளதாக, துறவியர் அமைப்பு அறிவித்துள்ளது. அதனால், ஹரித்வாரிலிருந்து, பல லட்சம் பேர் வெளியேறத்துவங்கியுள்ளனர்.

உத்தரகண்டில், முதல்வர் தீரத் சிங் ராவத் தலைமையிலான, பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்குள்ள ஹரித்வாரில், 12 ஆண்டுகளுக்கு ஒரு முறை கும்பமேளா நடப்பது வழக்கம். இந்த விழாவின்போது, ஏராளமான பக்தர்கள், கங்கை ஆற்றில் புனித நீராடுவர்.


100 நாட்கள்


வழக்கமாக கும்பமேளா, ஜன., மத்தியில் துவங்கி, ஏப்ரல் இறுதி வரை, 100 நாட்களுக்கு மேலாக நடக்கும். இந்தாண்டு கொரோனா பரவல் காரணமாக, கும்பமேளாவை, ஏப்., 1ல் துவங்கி, 30 வரை, ஒரு மாதம் மட்டும் நடத்த, துறவியர் அமைப்புகள் முடிவு செய்தன.கடந்த, 12 மற்றும் 14ம் தேதிகளில் மட்டும், 43 லட்சத்துக்கும் அதிகமானோர் புனித நீராடினர். இவர்களில் பெரும்பாலானோர், சுகாதார விதிமுறைகளை பின்பற்றாமல், சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல் நீராடினர். இதனால், கும்பமேளா நடக்கும் இடம், கொரோனா பரவும்இடமாக மாறியுள்ளது. கும்பமேளாவுக்கு வந்த, 2.35 லட்சம் பேரிடம் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில், 2,171 பேருக்கு கொரோனா உறுதியாகி உள்ளது. ஏராளமான துறவியர், கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, மருத்துவ மனையில் சேர்க்கப்பட்டு உள்ளனர்.


சர்ச்சை


இது, பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதையடுத்து, துறவியர் அமைப்புகள் சம்மதித்தால், கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்யத் தயாராக இருப்பதாக, உத்தரகண்ட் அரசு தெரிவித்தது.

இந்நிலையில், பிரதமர் நரேந்திர மோடி, நேற்று கூறியதாவது: கொரோனாவால் பாதிக்கப்பட்டு, மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், துறவி ஆஷ்தேஷ்னந்த கிரியை, தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நலம் விசாரித்தேன். கும்பமேளாவில், இன்னும் இரண்டு புனித நீராடல்கள் உள்ளன. கொரோனாவுக்கு எதிராக நடத்தி வரும் போரின் அடையாளமாக, கும்பமேளாவை மாற்ற வேண்டும். கூட்டமாக கூடுவதை, மக்கள் தவிர்க்க வேண்டும்.
இவ்வாறு பிரதமர் மோடி கூறியிருந்தார்.

இதையடுத்து, பிரதமரின் வேண்டுகோளை ஏற்று, கும்பமேளாவை நேற்றுடன் நிறைவு செய்வதாக, துறவியர் அமைப்பு தெரிவித்துள்ளது.

துறவியர் கூட்டமைப்பின் சுவாமி ஆவ்தேஷ்னந்த கிரி விடுத்த அறிக்கையில், இது குறித்து கூறப்பட்டுள்ளதாவது: பிரதமர் மோடி, என்னிடம் பேசினார். அவரது வார்த்தைகளுக்கு மதிப்பளிக்க வேண்டும். கொரோனா தடுப்பு விதிகளை அனைவரும் பின்பற்ற வேண்டும்.கொரோனாவிலிருந்து, மக்களை காப்பாற்றுவது தான், இப்போது மிகவும் முக்கியமான பணி. இதனால், கும்பமேளாவை உடனடியாக நிறைவு செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. கும்பமேளா நிறைவு நாளில் நடத்தப்படும், அனைத்து கடவுளர்களுக்கான, 'விசர்ஜனம்' நிகழ்ச்சியை நடத்தி முடித்து விட்டோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

கும்பமேளா நடக்கும் பகுதிகளில், பல லட்சம் பேர் தங்கியுள்ளனர். பிரதமர் வேண்டுகோள் விடுத்துள்ளதாலும், கும்பமேளாவை முடிப்பதாக துறவியர் அமைப்புகள் அறிவித்துள்ளதாலும், அவர்கள், ஹரித்வாரிலிருந்து வெளியேறத் துவங்கியுள்ளனர்.

Advertisement




வாசகர் கருத்து (18)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
18-ஏப்-202122:43:00 IST Report Abuse
Raj இது கும்ப விழாவா இல்லை கொரோனா விழாவா? கும்பத்திலே குமரனுக்கு கொன்டான்ட்டம் அதை கூட வந்த மக்களுக்கு கொரோனாஆட்டம்.
Rate this:
Cancel
Rajasekharan - Chennai,இந்தியா
18-ஏப்-202120:06:55 IST Report Abuse
Rajasekharan கண் கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம்
Rate this:
Cancel
sankaseshan - mumbai,இந்தியா
18-ஏப்-202118:00:07 IST Report Abuse
sankaseshan மனி தா .மனுஷத்தன்மையுடன் பேசு இன்னமும் 3 நீராடல் தினங்கள் உள்ளன இருந்தும் PM வேண்டு கோளுக்கு மதிப்பளித்து , தல்ஹஜித் ஜமாஅத் போல அழிச்சாட்டியம் பண்ணவில்லை
Rate this:
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
18-ஏப்-202118:54:45 IST Report Abuse
மனிதன்ஜமாஅத் என்ன அழிச்சாட்டியம் பண்ணுச்சு கொஞ்சம் சொல்லு கண்ணா???? கண் இருந்து குருடர்களா நீங்கள்????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X