பொது செய்தி

தமிழ்நாடு

10 ஆயிரத்தை நெருங்குது கொரோனா பாதிப்பு : நேற்று 39 பேர் பலி

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை :தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 9344 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்திற்கும் மேலாக கூடி வருகிறது.இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள 263 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 804 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. அதில் சென்னையில் 2884; செங்கல்பட்டில் 807; கோவையில் 652; திருவள்ளூரில் 389;
 தமிழகம், கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, பாதிப்பு, தடுப்பூசி, பலி, உயிரிழப்பு, மாவட்டங்கள், சென்னை,  சிகிச்சை,

சென்னை :தமிழகத்தில் கொரோனாவால் நேற்று ஒரே நாளில் 9344 பேர் பாதிக்கப்பட்டனர். பாதிப்பு எண்ணிக்கை தினசரி ஆயிரத்திற்கும் மேலாக கூடி வருகிறது.

இதுகுறித்து சுகாதாரத்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பு: மாநிலத்தில் உள்ள 263 கொரோனா பரிசோதனை ஆய்வகங்களில் நேற்று மட்டும் ஒரு லட்சத்து 804 மாதிரிகள் பரிசோதிக்கப் பட்டன. அதில் சென்னையில் 2884; செங்கல்பட்டில் 807; கோவையில் 652; திருவள்ளூரில் 389; திருச்சியில் 323 பேர் என மாநிலம் முழுதும் 9344 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

இதில் பெரம்பலுார் மாவட்டத்தை தவிர அனைத்து மாவட்டங்களிலும் எண்ணிக்கை பல மடங்கு அதிகரித்துள்ளது. 24 மாவட்டங்களில் 100க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.


latest tamil newsஇதுவரை 2.10 கோடி மாதிரிகள் பரிசோதனையில் ஒன்பது லட்சத்து 80 ஆயிரத்து 728 பேர் பாதிக்கப்பட்டு உள்ளனர். அவர்களில் சிகிச்சை முடித்து நேற்று 5263 பேர் உட்பட ஒன்பது லட்சத்து 2022 பேர் வீடு திரும்பியுள்ளனர்.
தற்போது சென்னையில் 23 ஆயிரத்து 625; செங்கல்பட்டில் 6263; கோவையில் 4438 என மாநிலம் முழுதும் 65 ஆயிரத்து 635 பேர் சிகிச்சை பெறுகின்றனர். கொரோனாவால் நேற்று 39 பேர் உட்பட 13 ஆயிரத்து 71 பேர் இறந்துள்ளனர்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement
வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
R.PERUMALRAJA - DUBAI,ஐக்கிய அரபு நாடுகள்
18-ஏப்-202111:27:38 IST Report Abuse
R.PERUMALRAJA தேர்தலை நடத்தி கொரோனாவை பரவ செய்துவிட்டது நாடாளும் அரசுகள் ...இப்பொழுது இதை மூடு ..அதை மூடு என்று என்று கூறி மீண்டும் மக்களின் வாழ்வாதாரத்தில் கை வைக்கிறது
Rate this:
Cancel
Prakash - Chennai,இந்தியா
18-ஏப்-202110:10:57 IST Report Abuse
Prakash 39 death in a day in 8 crore population is nothing. Publish death rate and cause of death in the state from 2015. Stop doing business on dead bodies. Mankind is being pushed to destruction by pushing unwanted medicines. How normal flu, cold, cough disappeared on the earth all of a sudden.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X