பொது செய்தி

இந்தியா

முழு ஊரடங்கு வேண்டாம்: 'பிக்கி' அமைப்பு கோரிக்கை

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021 | கருத்துகள் (5)
Share
Advertisement
புதுடில்லி: 'முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம்' என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, 'பிக்கி' அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, டில்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள், பகுதி ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்நிலையில், 'பிக்கி' அமைப்பின் தலைவர் உதய் சங்கர், தமிழகம்,

புதுடில்லி: 'முழு ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம்' என, இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான, 'பிக்கி' அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளது.



latest tamil news



கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதை அடுத்து, டில்லி, பஞ்சாப், மஹாராஷ்டிரா, உ.பி., உள்ளிட்ட மாநிலங்கள், பகுதி ஊரடங்கை அறிவித்துள்ளன. இந்நிலையில், 'பிக்கி' அமைப்பின் தலைவர் உதய் சங்கர், தமிழகம், மஹாராஷ்டிரா, ஹரியானா உள்ளிட்ட அனைத்து மாநில அரசுகளுக்கும் கடிதம் எழுதியுள்ளார். அதன் விபரம்:கடந்த ஆண்டு, கொரோனாவை கட்டுப்படுத்த, முழு ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டது.

இது, நாட்டின் பொருளாதாரத்தில் மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. இந்த பாதிப்பில் இருந்து, தற்போது நாடு மீண்டு வருகிறது. பொருளாதார வளர்ச்சி சூடு பிடிக்கத் துவங்கியுள்ளது. இந்நிலையில், கொரோனா இரண்டாவது அலை வேகமாக பரவி வருவதால், பல மாநிலங்கள், பகுதி நேர ஊரடங்கை அமல்படுத்தியுள்ளன. இது, நாட்டின் பொருளாதாரத்தை மீண்டும் பாதாளத்திற்கு தள்ளி விடும்.


latest tamil news



எனவே, முழுமையாகவோ அல்லது பகுதியாகவோ ஊரடங்கை அமல்படுத்த வேண்டாம்.அதற்கு பதிலாக, கொரோனா பரிசோதனைகளை அதிகரிக்க வேண்டும். முக கவசம் அணிவது, சமூக இடைவெளியை பின்பற்றுவது உள்ளிட்டவற்றை தீவிரமாக நடைமுறைப்படுத்த வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (5)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
18-ஏப்-202112:32:38 IST Report Abuse
அமாவாசை..உள்ளதை சொல்றேங்க, மனசாட்சி அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு சக மக்களை காப்பது கடமையடா... அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா வாழ்ந்தவர் கோடி மறைந்தவர் கோடி மக்களின் மனதில் நிற்பவர் யார்.. மாபெரும் முக கவசம்... சாணிடைஸர்..... சமூக இடைவெளி கடைப்பிப்பவரே மக்களின் மனதில் நிற்கின்றார்... அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா ஆறிலும் சாவு நூறிலும் சாவு சக மக்களை காப்பது கடமையடா... சக மக்களை காப்பது கடமையடா... அச்சம் என்பது மடமையடா அஞ்சாமை திராவிடர் உடமையடா
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
18-ஏப்-202108:42:24 IST Report Abuse
g.s,rajan முழு ஊரடங்கு போட்டால் எல்லாருக்குமே அரசாங்கம் கண்டிப்பாக உதவி செய்யணும் ,பண உதவி பொருள் உதவி நிச்சயம் செய்யணும் ,தனியார் நிறுவனங்களில் ,தொழிற்சாலைகளில் வேலைக்குப் போகிறவர்கள் எப்படிப் போவார்கள் ??ஒரு மாவட்டத்தில் இருந்து மற்றொரு மாவட்டம் வேலைக்குச் செல்பவர்கள் எப்படிப் போவார்கள் ,ஷிப்ட் முறையில் இருபத்திநான்கு மணி நேரமும் செயல்படும் நிறுவனங்கள் எப்படி செயல்படும் ???அனைவருக்கும் சம்பளத்துடன் விடுமுறை அளிக்குமா ??எல்லாருக்கும் அதே மாவட்டத்தில் வேலை வாய்ப்பு கிடைக்குமா ??மொத்தத்தில் ஒரு இடத்தில இருந்து மற்றொரு இடம் போக வேண்டாம் வியாதி பரவுது என்று அரசு மக்களைத் தடுத்தால் பொருளாதார ரீதியாக என்ன உதவி செய்யப் போகுது ??மற்ற வளர்ந்த உலக நாடுகளில் மந்த நாட்டு மக்களை அரசாங்கம் காப்பாற்றி வருகிறது ஆனால் இந்தியாவில் அப்படி இல்லை எவனோ எக்கேடுகெட்டுப் போகட்டும் என்று அரசாங்கம் தண்ணி தெளித்து விடும் மக்கள் என்ன ,செத்தால் என்ன???அரசாங்கத்துக்கு எந்த விதைப்பு பொறுப்பும் இல்லை கவலையும் இல்லை ,மக்களை அம்போவென்று விட்ட விடும் என்பதுதான் நிதர்சனமான உண்மை . ஜி.எஸ்.ராஜன் சென்னை .
Rate this:
Cancel
VENKATASUBRAMANIAN - bangalore,இந்தியா
18-ஏப்-202108:39:07 IST Report Abuse
VENKATASUBRAMANIAN மக்கள் திருந்த வேண்டும். படித்தவர்களே கடை பிடிப்பதில்லை.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X