பொது செய்தி

இந்தியா

மும்பை அணி 'திரில்' வெற்றி

Updated : ஏப் 17, 2021 | Added : ஏப் 17, 2021
Share
Advertisement
சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பைஅணி 13 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்கு ரோகித்,

சென்னை: ஐதராபாத் அணிக்கு எதிரான ஐ.பி.எல்., லீக் போட்டியில் மும்பைஅணி 13 ரன்கள் வித்தியாசத்தில் 'திரில்' வெற்றி பெற்றது.



latest tamil news



இந்தியாவில் 14வது சீசன் ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் நடப்பு சாம்பியன் மும்பை, ஐதராபாத் அணிகள் மோதின. 'டாஸ்' வென்ற மும்பை அணி கேப்டன் ரோகித் சர்மா, பேட்டிங் தேர்வு செய்தார். மும்பை அணிக்கு ரோகித், குயின்டன் டி காக் ஜோடி நல்ல துவக்கம் கொடுத்தது. புவனேஷ்வர் வீசிய போட்டியின் முதல் பந்தில் பவுண்டரி அடித்தார் குயின்டன். முஜீப் ஓவரில் தலா ஒரு பவுண்டரி, சிக்சர் என அடுத்தடுத்து விளாசினார் ரோகித்.

தொடர்ந்து மிரட்டிய ரோகித், புவனேஷ்வர் பந்தையும் சிக்சருக்கு அனுப்பினார். மும்பை அணி 6 ஓவரில் 53/0 ரன்கள் குவித்தது. முதல் விக்கெட்டுக்கு 55 ரன் சேர்த்த போது, விஜய் சங்கர் 'வேகத்தில்' விராத் சிங்கிடம் 'பிடி' கொடுத்தார் ரோகித் (32). அடுத்து வந்த சூர்யகுமார் யாதவ் 10 ரன்னில், விஜய் சங்கர் பந்தில் அவுட்டானார். இதன் பின் ஐதராபாத் பவுலர்கள் துல்லியமாக பந்து வீச, மும்பை அணி ரன் வேகம் குறைந்தது.


latest tamil news



குயின்டன் 39 பந்தில் 40 ரன்கள் எடுத்து முஜீப் சுழலில் சிக்கினார். நீண்ட நேரமாக தடுமாறிக் கொண்டிருந்த இஷான் கிஷானும் (12 ரன், 21 பந்து) அவுட்டாகினார். ஹர்திக் பாண்ட்யா 7 ரன் மட்டும் எடுத்தார். கடைசி இரு பந்தில் போலார்டு சிக்சர் அடிக்க, மும்பை அணி 20 ஓவரில் 5 விக்கெட்டுக்கு 150 ரன்கள் எடுத்தது. போலார்டு (35), குர்னால் பாண்ட்யா (3) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news



ஐதராபாத் அணிக்கு வார்னர் (33), பேர்ஸ்டோவ் (43) ஜோடி சூப்பர் துவக்கம் கொடுத்தது. மணிஷ் பாண்டே (2), விராத் சிங் (11), அபிஷேக் (2) அடுத்தடுத்து கிளம்பினர். கைவசம் 5 விக்கெட் மீதமிருந்த நிலையில், ஐதராபாத் வெற்றிக்கு 24 பந்தில் 31 ரன் தேவைப்பட்டன.மறுபக்கம் 'வேகத்தில்' மிரட்டிய பும்ரா, விஜய் சங்கரை (28) வெளியேற்றினார். பவுல்ட் வீசிய 'யார்க்கர்' பந்துகளில் முதலில் ரஷித் கான் (1) அவுட்டாக, புவனேஷ்வர் (1), கலீல் அகமது (1) போல்டாகினர். ஐதராபாத் அணி 19.4 ஓவரில் 137 ரன்னுக்கு ஆல் அவுட்டானது. பவுல்ட் 3, ராகுல் சகார் 3, பும்ரா 1 விக்கெட் சாய்த்தனர்.

Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X