போலீஸ் விசாரணையில் மரணம்: வேட்பாளர் உட்பட 4 பேர் ஆஜர்| Dinamalar

கோர்ட் செய்தி

தமிழ்நாடு

போலீஸ் விசாரணையில் மரணம்: வேட்பாளர் உட்பட 4 பேர் ஆஜர்

Added : ஏப் 18, 2021
Share
மதுரை:போலீஸ் விசாரணையில் ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரியதில் திருமங்கலம் அ.ம.மு.க., கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் உட்பட நான்கு பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு காணொலியில் ஆஜராகினர். மதுரை சோலையழகு புரம் முத்துகருப்பன், 'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார், 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து

மதுரை:போலீஸ் விசாரணையில் ஒருவர் மரணமடைந்தது தொடர்பாக சி.பி.ஐ., விசாரணை கோரியதில் திருமங்கலம் அ.ம.மு.க., கூட்டணி வேட்பாளர் ஆதிநாராயணன் உட்பட நான்கு பேர் உயர் நீதிமன்ற மதுரைக் கிளை விசாரணைக்கு காணொலியில் ஆஜராகினர்.

மதுரை சோலையழகு புரம் முத்துகருப்பன், 'என் மகன் டிரைவர் பாலமுருகன். அவரை ஒரு கடத்தல் வழக்கு தொடர்பாக அவனியாபுரம் போலீசார், 2019 ல் சட்டவிரோதமாக காவலில் வைத்து தாக்கினர். காயமடைந்த பாலமுருகன் அரசு மருத்துவமனையில் இறந்தார். 'சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட வேண்டும்' என மனு செய்தார். பின் மனுதாரர் தரப்பில் 'வாபஸ்' பெற்றதால், தனி நீதிபதி தள்ளுபடி செய்தார்.

ஆடியோ

க்ஷசம்பந்தப்பட்ட போலீசாரின் மிரட்டலால் மனுதாரர் வழக்கை வாபஸ் பெற்றார். தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என உயர் நீதிமன்றக் கிளை பதிவாளருக்கு கடிதம் வந்தது. இதன்படி பதிவாளர், 'சம்பவம் தொடர்பாக வழக்குப் பதிய வேண்டும். அதை சி.பி.ஐ., விசாரணைக்கு மாற்றிட வேண்டும்' என மனு செய்தார்.

இதை தானாக முன்வந்து நீதிபதிகள் அமர்வு விசாரித்தது. இவ்விவகாரத்தில் சிலருக்கு இடையே நடந்த உரையாடல் குறித்த ஆடியோ பதிவின் ரகசிய அறிக்கையை உயர் நீதிமன்றக் கிளை கூடுதல் பதிவாளர் ஜெனரல் தரப்பு தாக்கல் செய்தது. இதை படித்துப் பார்த்த நீதிபதிகள், 'இவ்விவகாரம் தொடர்பாக ஆதிநாராயணன் - மருது சேனை கட்சி தலைவர், திருமங்கலம் அ.ம.மு.க., கூட்டணி வேட்பாளர் மற்றும் கதிர், ரமேஷ், லோகநாதன் ஆஜராக வேண்டும்' என்றனர்.


பதில் மனு தாக்கல்



நேற்று நீதிபதிகள் டி.எஸ்.சிவஞானம், எஸ்.ஆனந்தி அமர்வு விசாரித்தது. முத்துக்கருப்பன் தரப்பு, 'போலீசார் தாக்கியதில் பாலமுருகன் இறக்கவில்லை. விபத்தில் காயமடைந்து இறந்தார்' என தெரிவித்தது. ஆதிநாராயணன் உட்பட நான்கு பேரும் நேற்று காணொலியில் ஆஜராகினர். அவர்களை எதிர்மனுதாரர்களாக இணைத்து ஜூன்., 14 ல் பதில் மனு தாக்கல் செய்ய நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Advertisement


We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X