இன்றைய ‛கிரைம் ரவுண்ட் அப்'

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021
Share
Advertisement
இந்திய நிகழ்வுகள்சுவர் இடிந்து 3 பேர் பலிதானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம், பிவாண்டி நகரில் உள்ள, 'பவர் லுாம்' தொழிற்சாலையில், நேற்று முன்தினம் சுவர் இடிந்து விழுந்ததில் மன்சுக் பாய், 45, ராஞ்சோட் பிரஜாபதி, 50, உட்பட, மூன்று தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாயினர்நீரில் மூழ்கி 6 பேர் பலிநாசிக்: மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சோனி கேம், 12, தன் பிறந்த நாளைக்
today, crime, round up, இன்றைய, கிரைம், ரவுண்ட் அப்


இந்திய நிகழ்வுகள்சுவர் இடிந்து 3 பேர் பலி

தானே: மஹாராஷ்டிராவின் தானே மாவட்டம், பிவாண்டி நகரில் உள்ள, 'பவர் லுாம்' தொழிற்சாலையில், நேற்று முன்தினம் சுவர் இடிந்து விழுந்ததில் மன்சுக் பாய், 45, ராஞ்சோட் பிரஜாபதி, 50, உட்பட, மூன்று தொழிலாளர்கள் உடல் நசுங்கி பலியாயினர்

நீரில் மூழ்கி 6 பேர் பலி

நாசிக்: மஹாராஷ்டிராவின் நாசிக்கைச் சேர்ந்த சோனி கேம், 12, தன் பிறந்த நாளைக் கொண்டாட, நேற்று முன்தினம் நண்பர்களுடன், வால்தேவி அணைக்கு சென்றார். அங்கு புகைப்படம் எடுத்தபோது சோனி கேம் உட்பட, ஆறு பேர், தண்ணீருக்குள் தவறி விழுந்து பரிதாபமாக பலியாயினர்

. ஏ.டி.எம்., மோசடி

ஜபல்பூர்: மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் உள்ள 'ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா' ஏ.டி.எம்., இயந்திரங்களில், 92.39 லட்சம் ரூபாயை நவீன முறையில் எடுத்து மோசடி செய்ததாக, ஹரியானாவைச் சேர்ந்த ஜாகிர் உசேன், 30, இன்சமாம் உல் ஹக், 24, ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.


தமிழக நிகழ்வுகள்


latest tamil newsபயணியர் குறைவால் பஸ் குறைப்பு குடும்பத்துடன் கண்டக்டர் தர்ணா!
சென்னை:கொரோனா பரவலால், பயணியர் வருகை சரிந்ததால், அரசு பஸ்கள் குறைக்கப் பட்டு வருகின்றன. இதனால், வருவாய் இழந்த கண்டக்டர், பணிமனையில் குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

கொரோனா பரவல் காரணமாக, எந்த நேரத்திலும் ஊரடங்கு பிறப்பிக்கப்படலாம் என்ற அச்சத்தால், வெளியூர் பயணத்தை பொதுமக்கள் தவிர்த்து வருகின்றனர். பஸ்களில் பயணிக்கவும், பலர் தயக்கம் காட்டுகின்றனர். தென் மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு வரும் அரசு பஸ்களில், 25 சதவீத இருக்கைகளே நிரம்புகின்றன.

சென்னை உள்ளிட்ட தொழில் நகரங்களிலும்,பல நிறுவனங்கள், தங்கள் பணியாளர்களை வீட்டில் இருந்தே பணி செய்ய அனுமதி அளித்துள்ளதால், மாநகர பஸ்களிலும் கூட்டம் இல்லை. இதனால், ஓட்டுனர், நடத்துனர்களுக்கு பணி கிடைக்காமல் அல்லாடுகின்றனர்.தனக்கு கிடைக்கும், 22 ஆயிரம் ரூபாய் சம்பளத்திலும், பணி இல்லாத நாட்களுக்கு சம்பளம் பிடிக்கப்படுவதால், வீட்டு வாடகை, வங்கிக் கடன், குடும்ப செலவுகளை சமாளிக்க முடிய வில்லை' எனக்கூறி, சென்னை, வடபழநி பணிமனையின் நடத்துனர் நந்தகுமார், குடும்பத்துடன் தர்ணாவில் ஈடுபட்டார்.

இது குறித்து, ஆம் ஆத்மி தொழிற்சங்க நிர்வாகிகள் கூறியதாவது:எம்.டி.சி.,யில், ஒரு பஸ்சுக்கு, 9,000 ரூபாய்க்கு டீசல் போட்டால், 22 ஆயிரம் ரூபாய் வரை வசூல் வந்தது. தற்போது, 6,000 ரூபாய் கூட வசூலாவதில்லை. இதனால், ஏற்படும் நஷ்டத்தைக் குறைக்க, பஸ்கள் இயக்கத்தை குறைத்து விட்டனர். வேலை இல்லாத நாட்களுக்கு வருகை பதிவு வழங்க நடவடிக்கை எடுத்தால், இதுபோன்ற தர்ணாக்கள் நடக்காது.இவ்வாறு, அவர்கள் கூறினர்.


latest tamil newsவிமானத்தில் கடத்தி வரப்பட்ட ரூ.2.90 கோடிமதிப்புள்ள தங்கம் பறிமுதல்
சென்னை:துபாயில் இருந்து, விமான இருக்கையில் மறைத்து கடத்தி வரப்பட்ட, 2.90 கோடி ரூபாய் மதிப்புள்ள தங்க கட்டிகளை, சுங்கத்துறையினர் பறிமுதல் செய்தனர்.

வளைகுடா நாடுகளில் இருந்து, தங்கம் கடத்தப்படுவதாக, சுங்கத் துறையினருக்கு ரகசிய தகவல் வந்தது. இதையடுத்து, அங்கிருந்து வரும் விமான பயணியர் மற்றும் விமானங்களை, சுங்கத் துறையினர் சோதனையிட்டனர். ஐக்கிய அரபு நாட்டின், துபாய் நகரில் இருந்து, 'ஏர் இந்தியா' விமானம் நேற்று முன்தினம் பிற்பகல், 12:25 மணிக்கு, சென்னை வந்தது.

அந்த விமானத்தில் வந்த பயணியர் இறங்கியவுடன், விமானத்தை சுங்கத் துறையினர் சோதனையிட்டனர்.அப்போது, ஒரு குறிப்பிட்ட இருக்கையின் அடியில், வெள்ளை நிற, 'டேப்' சுற்றப்பட்ட, இரண்டு, 'பண்டல்'கள் இருப்பதை, சுங்கத் துறையினர் கண்டுபிடித்தனர். அதை பிரித்து பார்த்த போது, 6 கிலோ தங்க கட்டிகள் இருந்தன. இதன் மதிப்பு, 2.90 கோடி ரூபாய். தங்க கட்டிகளை பறிமுதல் செய்த சுங்கத் துறையினர், தங்க கட்டிகளை கடத்தியவர்கள் குறித்து, விசாரித்து வருகின்றனர்.

பெற்றோர் கண்டிப்பு; மகள் தற்கொலை

திருப்பூர்;மொபைல் போன் பார்த்து கொண்டிருந்த மகளை பெற்றோர் கண்டித்ததால், 14 வயது மகள் துாக்குமாட்டி இறந்தார்.திருப்பூரை அடுத்த குண்டடத்தை சேர்ந்தவர் அந்தோணி ராஜ், 40; ஓட்டல் கடை நடத்தி வருகிறார். இரு மகள், ஒரு மகன் உள்ளனர். இவரது மகள் அதுல்யா மேரி, 14; தனியார் பள்ளியில், ஒன்பதாம் வகுப்பு படித்து வந்தார்.கடந்த இரு நாட்களுக்கு முன்பு அதுல்யா மேரி மொபைல் போன் பார்த்து கொண்டிருந்தார். இதை பார்த்த அந்தோணி ராஜ், மகளை கண்டித்தார். இதனால், மனமுடைந்த அதுல்யா மேரி, நேற்று முன்தினம் ஓட்டலில் உள்ள குளியலறையில், துாக்குமாட்டி இறந்தார். இது குறித்து, குண்டடம் போலீசார் விசாரிக்கின்றனர்.

சிறுமிக்கு தொல்லை; வாலிபருக்கு போக்சோ

அண்ணாநகர் : சிறுமியை காதலிக்க வற்புறுத்தியவரை, 'போக்சோ' சட்டத்தில், போலீசார் கைது செய்தனர்.

அண்ணா நகர் மகளிர் காவல் நிலையத்தில், இம்மாதம், 6ம் தேதி, 17 வயது சிறுமி புகார் ஒன்றை அளித்தார்.அதில், 'அண்ணா வளைவு பஸ் நிறுத்தத்தில் நின்று கொண்டிருந்தேன். அப்போது, மதுரவாயலைச் சேர்ந்த, முத்து, 30, என்பவர் காதலிக்க வற்புறுத்தினார். மேலும், பொது இடத்தில் என் கையை பிடித்து இழுத்து, தொந்தரவு செய்தார். 'இதனால், நான் மிகுந்த மன உளைச்சலுக்கு ஆளாகி உள்ளேன். முத்து மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, குறிப்பிட்டு இருந்தார்.புகாரின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்த போலீசார், தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில், முத்து, சிறுமியை காதலிக்க வற்புறுத்தி, தொந்தரவு செய்தது உறுதியானது. இதையடுத்து, நேற்று அவரை, 'போக்சோ' சட்டத்தில் போலீசார் கைது செய்தனர்.

லாரி மோதி கைக்குழந்தை பலி :தாய் உட்பட, ஐந்து பேர் காயம்

திருப்பூர்:திருப்பூரில், சரக்கு வாகனத்தின் மீது, கன்டெய்னர் லாரி மோதிய விபத்தில், பிறந்து 40 நாளான குழந்தை பரிதாபமாக இறந்தது. தாய் உட்பட, ஐந்து பேர் காயமடைந்தனர்.திருப்பூர், பிச்சம்பாளையம் புதுார், ஸ்ரீ நகரை சேர்ந்தவர் விஜயகுமார், 30; பனியன் தொழிலாளி. இவரது மனைவி ராதிகா, 23. தம்பதியருக்கு விதுனவ், 3 மற்றும் விஸ்வஜித், (40 நாள் குழந்தை).கடந்த, 15ம் தேதி திண்டுக்கல்லில் இருந்து ராதிகா தனது இரு குழந்தைகள், மாமனார் நாகராஜ், 60 மற்றும் உறவினர் ஒருவர் என, நான்கு பேரும் வீட்டு பொருட்களை சரக்கு வாகனத்தில் ஏற்றி கொண்டு திருப்பூருக்கு வந்து கொண்டிருந்தனர்.இச்சூழலில், 16ம் தேதி 2:30 மணியளவில் திருப்பூரை வந்தடைந்த சரக்கு வாகனம் குமார் நகரில் இருந்து புதிய பஸ் ஸ்டாண்ட் நோக்கி செல்ல ரோட்டை கடந்தது. அப்போது, திருப்பூர் கோர்ட் வீதியில் உள்ள கொரியர் நிறுவனத்தை நோக்கி சென்ற கன்டெய்னர் லாரி, சரக்கு வாகனம் மீது மோதியது.விபத்தில், பிறந்து, 40 நாளான குழந்தை விஸ்வஜித் பரிதாபமாக இறந்தது. ராதிகா, விதுனவ், டிரைவர் மணி உட்பட 5 பேர் காயமடைந்து, திருப்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். விபத்து தொடர்பாக, லாரி டிரைவர் கார்த்திகேயன், 28 என்பவரை வடக்கு போலீசார் கைது செய்தனர்.

அரசு பஸ் நடத்துனரை தாக்கிய 6 பேருக்கு வலை

அனுப்பர்பாளையம்:அரசு பஸ் நடத்துனரை தாக்கிய ஆறு பேரை போலீசார் தேடி வருகின்றனர்.பெருந்துறையை சேர்ந்தவர் ஜெகன், 31; அரசு பஸ் நடத்துனர். நேற்று முன்தினம் இரவு திருப்பூரில் இருந்து பெருமாநல்லுாருக்கு அரசு டவுன் பஸ் ஒன்று புறப்பட்டது.பி.என்., ரோடு பூலுவப்பட்டி சந்திப்பு அருகே பஸ் சென்றபோது, பைக்கில் வந்த ஆறு பேர் பஸ்சில் உரசுவது போல் வேகமாக சென்றனர். பஸ் டிரைவர் தியாகராஜன், நடத்துனர் ஜெகன் ஆகியோர் திட்டி உள்ளார்.இதனால், ஆத்திரமடைந்த ஆறு பேரும், நடத்துனரை கடுமையாக தாக்கி தப்பினர். இது குறித்து, நடத்துனர் ஜெகன், அனுப்பர்பாளையம் போலீசில் புகார் செய்ததால், வழக்கு பதிவு செய்த போலீசார், தலைமறைவான 6 பேரை தேடி வருகின்றனர்.


உலக நிகழ்வுகள்

அமெரிக்காவில் துப்பாக்கி சூடு
வாஷிங்டன்: அமெரிக்காவின் இண்டியானா மாகாணத்தில் உள்ள, 'கொரியர்' நிறுவன கிடங்கில், சமீபத்தில் நடந்த துப்பாக்கிச் சூட்டில், எட்டு பேர் உயிரிழந்தனர். அதில், நான்கு பேர் சீக்கியர்கள்; இது, அமெரிக்காவில் வசிக்கும் சீக்கியர்களிடையே கொந்தளிப்பை ஏற்படுத்தி உள்ளது. அமெரிக்காவின் இன்டியானா போலீசில் உள்ள, கொரியர் நிறுவன அலுவலகத்தில் பணியாற்றுவோரில், 90 சதவீதம் பேர் இந்தியர்கள். அதில், பெரும்பாலானோர் சீக்கியர்கள்.இந்த கொரியர் நிறுவனத்துக்குள், 15ம் தேதி நுழைந்த ஒருவர், சரமாரியாக சுட்டார். இதில், எட்டு பேர் உயிரிழந்தனர். அதில், மூன்று பெண்கள் உட்பட, நான்கு பேர் சீக்கியர்கள். இதைத் தவிர, ஒரு சீக்கியர் உட்பட சிலர் காயமடைந்தனர்.இதற்கிடையே தாக்குதல் நடத்திய, பிராண்டன் ஸ்காட் ஹோல், 19, தற்கொலை செய்தார். அவர் இந்த நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் என்பதும், கடந்தாண்டு பணியில் இருந்து விலகியதும் தெரிய வந்துள்ளது.இந்த சம்பவம், சீக்கியர்கள் இடையே கொந்தளிப்பை ஏற்படுத்திஉள்ளது. சீக்கிய மக்கள் கூறியுள்ளதாவது:இன்டியானா போலீஸ் பகுதியில் மட்டும், 10 ஆயிரத்துக்கும் அதிகமான சீக்கியர்கள் உள்ளனர். கடந்த, 2001, செப்., 11ல், அமெரிக்காவின் மீது, பயங்கரவாதி ஒசாமா பின்லேடன் தாக்குதல் நடத்தினார். அதைத் தொடர்ந்து, சீக்கியர்கள் மீதான தாக்குதல் தொடர்ந்து நடந்து வருகிறது. கடந்த சில மாதங்களாக, ஆசியாவைச் சேர்ந்தவர்களுக்கு எதிரான வெறுப்பு குற்றங்கள் அதிகமாக நடக்கின்றன.இவ்வாறு அவர்கள் கூறினர்.

Advertisement
வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X