அரசியல் செய்தி

தமிழ்நாடு

வருங்காலம் பெரும் சவாலாகும்: விஜயபாஸ்கர் கவலை

Updated : ஏப் 19, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (13)
Share
Advertisement
புதுக்கோட்டை: ''பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருந்தால் வரும் காலம் பெரும் சவாலாக அமையும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு
வருங்காலம், சவால், விஜயபாஸ்கர் கவலை

புதுக்கோட்டை: ''பொதுமக்கள் அஜாக்கிரதையாக இருந்தால் வரும் காலம் பெரும் சவாலாக அமையும்'' என சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்தார்.

புதுக்கோட்டையில் நேற்று அவர் கூறியதாவது:தமிழ் சினிமாவில் சின்னக்கலைவாணர் என்று அழைக்கப்படும் நடிகர் விவேக்கின் மறைவிற்கு இரங்கல் தெரிவித்து கொள்கிறேன்.
தமிழகத்தில் கொரோனா தாக்கம் அதிகரித்து வருகிறது. 45 வயதுக்கு மேற்பட்டவர்கள் கட்டாயமாக தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும். தடுப்பூசி போட்டுக்கொண்டால் இறப்பில் இருந்து தற்காத்துக் கொள்ளலாம்.

தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளதால் கொரோனா தடுப்பு பணிகளை செய்ய இயலவில்லை இருப்பினும் மத்திய சுகாதாரத்துறை அமைச்சரிடம் தமிழகத்தின் நிலையை எடுத்துக் கூறி கூடுதலாக 'ரெண்டிவிசர்' மருந்து தேவை என்று கோரிக்கை வைத்துள்ளேன்.
தமிழகத்தில் கொரோனா முதல் அலையின் போதே சுகாதாரத்துறையில் வலுவான கட்டமைப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதனால் எந்த சூழ்நிலையையும் சமாளிக்கும் நிலையில் தமிழக சுகாதாரத்துறை அதிகாரிகள் மற்றும் மருத்துவர்கள் தயாராகிவிட்டனர்.
பொதுமக்கள் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருந்தால் வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்.இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement




வாசகர் கருத்து (13)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
S.Aruna - Trichy,இந்தியா
24-ஏப்-202119:21:53 IST Report Abuse
S.Aruna வருங்காலம் தங்களின் நிகழ்கால செயல்பாடுகளால் கட்டமைக்கப்படுகிறது.
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-ஏப்-202107:53:34 IST Report Abuse
RajanRajan கவலைகள் கிடக்கட்டும் மறந்துவிடு காரியம் நடக்கட்டும் துணிந்து விடு எடுப்பவர் யாரோ கொடுப்பவர் யாரோ ....இந்த ஊழல் சாம்ராஜ்யத்தில். மக்கள் மீது ரொம்ப அக்கறை தாம்பா. அங்கே ஒரு கூட்டம் குரானா ஊழலுக்கு ஆயத்தமாகி கொண்டிருக்கிறது. மக்களுக்கு இது தான் சவால் குட்கா சாமியோவ்.
Rate this:
Cancel
மனிதன் - riyadh,சவுதி அரேபியா
18-ஏப்-202117:24:59 IST Report Abuse
மனிதன் பொதுமக்கள் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருந்தால் வரும் காலங்களில் மிகப்பெரிய சவாலை சந்திக்க வேண்டி இருக்கும்// இத்தனை நாள் காசு கொடுத்து கூட்டத்த கூட்டி, திருவாரூர் தேரு மாதிரி கூட்டம் கூட்டமா ஊர்வலம் போயி, மக்கள்ட்ட ஒட்டு பிச்சை எடுத்துட்டு, வந்த வழியே போலாம்னு இருந்த கொரோனாவை, வம்படியா கூட்டிவந்து பரவவிட்டுட்டு, இப்ப அதே மக்கள் அலட்சியமாகவும் அஜாக்கிரதையாகவும் இருக்காங்களோ??? நீங்கெல்லாம்...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X