பொது செய்தி

இந்தியா

ஆக்சிஜன், தடுப்பூசி தேவை 11 மாநிலங்கள் கோரிக்கை.

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (8)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும், 11 மாநில சுகாதாரத்துறைச் செயலர்கள், 'ஆக்சிஜன் சிலிண்டர்கள்' மற்றும் தடுப்பூசிகள் அதிகம் வழங்கும்படி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.தமிழகம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளா உட்பட, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன்

புதுடில்லி: கொரோனா பாதிப்பு அதிகரிக்கும், 11 மாநில சுகாதாரத்துறைச் செயலர்கள், 'ஆக்சிஜன் சிலிண்டர்கள்' மற்றும் தடுப்பூசிகள் அதிகம் வழங்கும்படி, மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்.



latest tamil news



தமிழகம், மஹாராஷ்டிரா, சத்தீஸ்கர், ராஜஸ்தான், குஜராத், மத்திய பிரதேசம், கேரளா உட்பட, 11 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில், இரண்டாம் அலையாக கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்துள்ளது.இதையடுத்து, வைரஸ் பரவல் தடுப்பு மற்றும் கட்டுப்பாடு, மருத்துவ நடவடிக்கைகள் குறித்து, இம்மாநில சுகாதாரத்துறைச் செயலர்களுடன், மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ் வர்தன் நேற்று ஆலோசனை நடத்தினார்.
இதுகுறித்து, மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கொரோனா பரவல் அதிகரித்துள்ள, 11 மாநிலங்களும், ஆக்சிஜன் சிலிண்டர் மற்றும் 'ரெம்டிசிவிர்' மருந்துகள் வினியோகத்தை அதிகரிக்க வேண்டும் என, கோரிக்கை விடுத்தனர்.அத்துடன், 'வென்டிலேட்டர்' வசதிகளை மேம்படுத்துவதுடன், கூடுதல் தடுப்பூசி மருந்துகளை வழங்கும்படி கேட்டுஉள்ளனர்.கொரோனா சிகிச்சை மருந்துகளை, கள்ளச்சந்தையில் பதுக்கி வைத்து, அதிக விலைக்கு விற்பனை செய்வதை தடுக்கும்படி கூறிஉள்ளனர்.மாநில பேரிடர் மீட்பு நிதியில், நடப்பு ஆண்டிற்கான தொகையில், 50 சதவீதத்தை கொரோனா மீட்பு பணிகளுக்கு பயன்படுத்த, மத்திய உள்துறை அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது.அதேபோல், தேசிய சுகாதார திட்டத்தின் கீழ் ஏப்., 1 வரை நிலுவையில் உள்ள தொகையை, கொரோனா தடுப்பிற்கு பயன்படுத்தவும் அனுமதிக்கப்பட்டு உள்ளது.இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (8)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Nallavan Nallavan - நல்லதே நினைப்போம், நல்லதே நடக்கும் ,இந்தியா
18-ஏப்-202114:11:31 IST Report Abuse
Nallavan Nallavan ஆக்சிஜன் அடைக்கப்பட்டுள்ள சிலிண்டர் வெள்ளை நிறத்தில் பெயிண்ட் செய்யப்பட்டிருக்கும் ......... வாய்ப்புக்கு நன்றி ........
Rate this:
Cancel
18-ஏப்-202106:37:05 IST Report Abuse
ஆப்பு பாத்தீங்களா... மாநில முதல்வர்களும் பங்கேற்க வில்லை. பெரியவரும் பங்கேற்கவில்லை. பற்றாக்குறைக்கு தலைமைச் செயலர்கள். கடைசியில் மக்கள் மாஸ்க் போடலை. ஒத்துழைக்கலைன்னு அறிக்கை வரும். மெடல் வாங்கி குத்திக்க பெரியவர் போவாரு.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஏப்-202116:29:40 IST Report Abuse
தமிழவேல் அதான், ""நாடு முழுவதும் ஆக்சிஜன் சிலிண்டர் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் என பிரதமர் மோடி உத்தரவிட்டு உள்ளார்"" ன்னு எல்லா பத்திரிக்கையிலும் தலைப்பு செய்தி போட்டாச்சே.....🤔...
Rate this:
Cancel
SUBBU - MADURAI,இந்தியா
18-ஏப்-202104:35:18 IST Report Abuse
SUBBU //கொரோனா பாதிப்பு அதிகரிக்கும்,11 மாநில சுகாதாரத்துறைச் செயலர்கள், 'ஆக்சிஜன் சிலிண்டர்கள்' மற்றும் தடுப்பூசிகள் அதிகம் வழங்கும்படி,மத்திய சுகாதார அமைச்சர் ஹர்ஷ் வர்தனுடன், நேற்று நடந்த ஆலோசனை கூட்டத்தில் கோரிக்கை விடுத்துள்ளனர்//கொரோனா இந்தியாவில் இரண்டாம் இன்னிங்ஸாக அடித்து கொண்டிருப்பது மிக சோகமான விஷயம். இந்திய தமிழக அரசியலில் வேண்டுமானால் இரண்டாம் வாரிசுகள் காமெடியாகவும், மூன்றாம் நான்காம் வாரிசுகள் படு காமெடியாகவும் இருக்கலாம்.ஆனால் கொரோனா அப்படி அல்ல?அது சீன அரசியல் வாரிசுகள் போல் மிகக் கடுமையானவை.இப்பொழுது ஜெர்மன், பிரேசில்,மற்றும் ஆப்பிரிக்க நாடுகள் பலவற்றில் கண்டறியப்பட்டிருக்கும் கொரோனா வைரஸ்கள் மிகபெரும் பீதியினை கிளப்புகின்றன‌. தடுப்பூசிகளின் நோய் எதிர்ப்பு சக்தியினை உடைத்து அவை மிக எளிதாக பரவுகின்றது. இப்போதெல்லாம் இந்த மூவகை வைரஸ்கள் பெயரை கேட்டாலே உலகம் அதிர தொடங்கியிருக்கின்றது.ஆக‌ மூன்றாம் உலகப் போரை கொரோனா நடத்தி கொண்டிருக்கின்றது. அந்த கண்காணா எதிரியுடன் மானிட குலம் மிக கடுமையாக போராடி கொண்டிருக்கின்றது. இது இன்னும் சில ஆண்டுகள் நீடிக்கலாம்?அதுவரை தனிமையும், தொடாமையும், கூடல் இடைவெளியும்,கிருமி நாசினியும், முகக்கவசமும் மட்டுமே நமக்கு நல்ல நோய் எதிர்ப்பு சக்தி.சத்தான உணவு மட்டுமே நமக்கு பாதுகாப்பு.
Rate this:
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஏப்-202116:31:57 IST Report Abuse
தமிழவேல் 5 மாநிலங்களில் தேர்தல் கூட்டம், 20 லட்ச கும்பமேளா கூட்டம் இதையெல்லாம் தடுத்தாங்களா ?...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X