பொது செய்தி

இந்தியா

மருந்து பொருட்கள் ஏற்றுமதி 18 சதவீதம் அதிகரிப்பு

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
புதுடில்லி : கடந்த நிதியாண்டில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி, 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 1.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டது.இது குறித்து, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்து உள்ளதாவது: அண்மைக் காலமாக

புதுடில்லி : கடந்த நிதியாண்டில், இந்திய மருந்து நிறுவனங்களின் ஏற்றுமதி, 18 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது. கிட்டத்தட்ட, 1.83 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கு ஏற்றுமதி ஆகியுள்ளது. இதற்கு முந்தைய நிதியாண்டில், 1.54 லட்சம் கோடி ரூபாய் அளவுக்கே ஏற்றுமதி செய்யப்பட்டது.



latest tamil news



இது குறித்து, இந்திய மருந்துகள் ஏற்றுமதி மற்றும் மேம்பாட்டு கவுன்சில் தெரிவித்து உள்ளதாவது: அண்மைக் காலமாக மருந்துகள் ஏற்றுமதி அதிகரித்து வருகிறது. குறிப்பாக, கடந்த நிதியாண்டில், மார்ச் மாதத்தில், மிக அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் மட்டும், 48.5 சதவீதம் அளவுக்கு அதிகரித்துள்ளது.உலக மருந்து சந்தைகள், 1 - 2 சதவீதம் அளவுக்கு வீழ்ச்சி கண்ட நிலையில், அவற்றுக்கு மாறாக, இந்திய மருந்துகளுக்கான தேவைகள் அதிகரித்து உள்ளது.வரும் ஆண்டுகளில் தடுப்பு ஊசி ஏற்றுமதி காரணமாக, இந்தியாவில் நல்ல வளர்ச்சி காணப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



மேலும், உற்பத்தியுடன் இணைந்த ஊக்கச்சலுகை திட்டம் காரணமாகவும் வளர்ச்சி அதிகரிக்கும் என, எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியாவிலிருந்து, வட அமெரிக்காவுக்கு அதிகளவில் ஏற்றுமதி நடைபெற்றுள்ளது. கிட்டத்தட்ட 34 சதவீதம் ஆகும்.இதையடுத்து, அமெரிக்கா, கனடா, மெக்ஸிகோ ஆகியவற்றுக்கும் அதிகளவில் ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
18-ஏப்-202123:51:07 IST Report Abuse
தல புராணம் பெருந்தொற்று தொடர்ந்தால் மருத்துவத்துறை வளரும்.. ஆனால் நாடு ??
Rate this:
Cancel
தமிழவேல் - முகப்பேர் மேற்கு ,இந்தியா
18-ஏப்-202116:37:51 IST Report Abuse
தமிழவேல் உலகில் கொரோனா ஓரளவிற்கு கட்டுப்பாட்டிற்கு வந்தபின்னால், மருந்துகளின் தேவை மேலும் அதிகரிக்கும்.. இன்று பலர் கொரோனா பயத்தால் பல்வேறு நோய்களுக்கு மருத்துவம் பார்த்துக் கொள்ளாமல், காத்துக்கொண்டு உள்ளார்கள். அதோடு, கொரோன நோயாளிகளுக்கு இடத் தேவைகளால், பல ஆபரேஷன்கள் (உலகளவில்) தள்ளிப் போடப்படுகின்றது. இதனால், வியாதி வளர்ந்தும் வருகின்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X