பொது செய்தி

தமிழ்நாடு

இது உங்கள் இடம் : பஞ்சமி நிலத்தை மீட்போம்!

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (60)
Share
Advertisement
உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அதில், 12 ஆயிரம் கோவில்களில், ஒரு கால பூஜைக்குக் கூட பொருளாதார வசதி இல்லை; அந்த கோவில்களும் பராமரிப்பு இன்றி, சிதிலம் அடைந்து காணப்படுகின்றன. கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம்


உலக, நாடு, தமிழக நடப்புகள் பற்றி, வாசகர்கள் தினமலர் நாளிதழில் எழுதிய கடிதம் :

சொ.பீமன், விருதுநகரிலிருந்து எழுதுகிறார்: தமிழக ஹிந்து அறநிலையத் துறை கட்டுப்பாட்டில், 44 ஆயிரம் கோவில்கள் உள்ளன. அதில், 12 ஆயிரம் கோவில்களில், ஒரு கால பூஜைக்குக் கூட பொருளாதார வசதி இல்லை; அந்த கோவில்களும் பராமரிப்பு இன்றி, சிதிலம் அடைந்து காணப்படுகின்றன. கோவில்களுக்கு சொந்தமாக, 5.25 லட்சம் ஏக்கர் நிலங்களில், 50 ஆயிரம் ஏக்கர் நிலம் ஆக்கிரமிப்பாளர்களின் பிடியில் இருக்கிறது என்ற தகவல், அதிர்ச்சி அளிக்கிறது.



latest tamil news



நேர்மையான, மதசார்பற்ற அரசு, அந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி, கோவில் நிர்வாகத்திடம் நிலங்களை ஒப்படைக்க வேண்டும். தற்போது, ஹிந்து கோவில்களில் உள்ள நிலங்களைமட்டும் அரசுைடமையாக்கி, ஏழைகளுக்கு வழங்க வேண்டும் என்ற, கோரிக்கை எழுப்பப்பட்டுள்ளதாம். அது என்ன, ஹிந்து கோவில்கள் மீது மட்டும் அவ்வளவு வன்மம் அல்லது அக்கறை? அனைத்து மத வழிபாட்டுத் தல நிலங்களையும் அரசுைடமையாக்க வேண்டும். ஹிந்து கோவில்களுக்கு, 5.25 லட்சம் ஏக்கர் மட்டுமே உள்ளன. இதை விடுத்து, தமிழகத்தில் உள்ள, 12 லட்சம் ஏக்கர் பஞ்சமி நிலங்களின் மீது அக்கறை செலுத்தலாம். கடந்த, 1892ல், ஆங்கிலேய அரசால், தலித் மக்களுக்கு வழங்கப்பட்டது, பஞ்சமி நிலம். இதற்கான பயனாளி மற்றும் நில விபரங்கள் குறித்து, தற்போது ஆய்வு நடத்த வேண்டும்.


latest tamil news



அந்த நிலம், யார் ஆக்கிரமிப்பில் இருந்தாலும், கட்சிகளின், நிறுவனத்தின் பிடியில் இருந்தாலும், அதை மீட்க வேண்டும்; அவற்றை அரசுடைமையாக்கி, ஏழைகளுக்கு வழங்கலாம். இந்திய அறக்கட்டளை சட்டம், அனைத்து மதத்தினருக்கும் பொருந்தும். பெரும்பாலானவை அறக்கட்டளை நிர்வாகங்கள், சேவைகளில் ஈடுபடுவது இல்லை. எனினும் அவை, வருமான வரி ஏய்ப்புக்காக நடத்தப்படுகின்றன என்பது, அனைவருக்கும் தெரியும். அறக்கட்டளை நிர்வாகம் என்ற பெயரில், பல லட்சம் கோடி ரூபாய் கறுப்பு பணம் புதைந்திருக்கிறது. அவற்றின் மீது, மத்திய அரசு கண்காணிப்பில் ஈடுபட வேண்டும்.

Advertisement




வாசகர் கருத்து (60)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202100:54:29 IST Report Abuse
தல புராணம் கொரோனாவிலேருந்து மக்களை காப்பாத்தாத சாமி..
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202100:14:33 IST Report Abuse
தல புராணம் சர்வ வல்லமை படைச்ச சாமியாலே ஏன் யாரையும் தண்டிக்கமுடியலே ??
Rate this:
jagan - Chennai,இலங்கை
19-ஏப்-202120:18:09 IST Report Abuse
jaganபண்ணின அநியாயத்துக்கு சாமியோட தண்டன தாம்ல இது...
Rate this:
Cancel
அடங்குல - Madurai,இந்தியா
18-ஏப்-202122:24:04 IST Report Abuse
அடங்குல உபயம்.. சரக்கு மிடுக்கு
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X