பொது செய்தி

இந்தியா

ஓட்டல் நிறுவனங்கள் மீள இன்னும் 3 ஆண்டுகள் ஆகலாம்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில், 65 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என, ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.தர நிர்ணய நிறுவனமான, 'இக்ரா' இது குறித்து மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பயணங்கள், தங்குவது ஆகியவை சுருங்கிய காரணத்தால், நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழைப்பை

புதுடில்லி : நாட்டின் மிகப் பெரிய ஓட்டல் நிறுவனங்கள், கடந்த நிதியாண்டில், 65 சதவீதம் அளவுக்கு வருவாய் இழப்பை காணக்கூடும் என, ஆய்வு அறிக்கை ஒன்று தெரிவித்து உள்ளது.



latest tamil news



தர நிர்ணய நிறுவனமான, 'இக்ரா' இது குறித்து மேலும் தெரிவித்து உள்ளதாவது:கடந்த ஆண்டு கொரோனா பரவலால் பயணங்கள், தங்குவது ஆகியவை சுருங்கிய காரணத்தால், நிறுவனங்கள் கடுமையான வருவாய் இழைப்பை சந்திக்கக்கூடும். செலவினங்களை கடுமையாக குறைக்க நிறுவனங்கள் பல நடவடிக்கைகளை மேற்கொண்ட போதிலும், கடந்த நான்கு ஆண்டுகளின் ஒட்டுமொத்த லாபத்தை துடைத்துவிடும் அளவுக்கு, நிகர இழப்புகளை சந்திக்க நேரிடும். நடப்பு நிதியாண்டின் இரண்டாவது பாதியில், நிலைமையில் முன்னேற்றம் ஏற்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


latest tamil news



இருப்பினும், கொரோ னா பரவல் உலகம் முழுக்க மீண்டும் அதிகரித்துவிட்ட சூழ்நிலையில், அவை வளர்ச்சிக்கு தடையாக அமைந்து விடும் நிலை உள்ளது. தடுப்பூசி போடப்பட்டு வருவது சிறிது நம்பிக்கை தருவதாக இருக்கிறது. இருப்பினும், கொரோனாவுக்கு முந்தைய நிலையை இத்துறை நிறுவனங்கள் எட்டுவதற்கு இன்னும், இரண்டு அல்லது மூன்று ஆண்டுகள் வரை ஆகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
bal - chennai,இந்தியா
18-ஏப்-202120:43:35 IST Report Abuse
bal நல்ல இருக்கும்போது ஏகப்பட்ட கொள்ளை அடிச்சானுக...அதெல்லாம் எங்கே போச்சு.
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
18-ஏப்-202120:34:07 IST Report Abuse
Lion Drsekar ஆனால் அரசாங்கத்துக்கு மட்டும் அனைத்து வரிகளும் கட்டவேண்டிய நிலைக்கு கொத்தடிமைகள் , வியாபாரம் என்று வந்த பிறகு வருமானமே இல்லாத காலங்களில் வரி வசூலிப்பது கிரிமினல் குற்றம் நானும் சட்டம் படித்தேன் , ஆனால் இங்கு அதற்க்கு வேலை இல்லை என்று கொளுத்திவிட்டேன், யாருமே மக்களுக்காக இல்லாதது வருத்தம் அளிக்கிறது, தினமலர் இதற்க்கு முக்கியத்துவம் கொடுத்து தேர்வு கொடுத்தால் மட்டுமே முதல் போட்டவர்களுக்கு மறுவாழ்வு, மக்கள் பிரநிதிகள் மன்னிக்கவும் தங்கள் குடும்ப வாரிசுகளுக்கு சொத்து சேர்ப்பதில் முழு கவனம் செலுத்துவதற்காக மக்களுக்கு சேவை செய்ய வருகிறார்கள், வந்தே மாதரம்
Rate this:
Cancel
Devanand Louis - Bangalore,இந்தியா
18-ஏப்-202107:12:02 IST Report Abuse
Devanand Louis மதுரை திருமங்கலம் அரசு பொது மருத்துவமனையில் கொரோனா தடுப்பு ஊசி கடந்த நான்கு நாட்களாக போடவில்லை ,பொதுமக்களனைவரும் தொலைதூரத்திலிருந்து வந்தும் எவ்வித அறிவிப்பையில்லாமல் கொரோனா தடுப்புஊசியை போடாமல் செல்கிறார்கள் ,அவதிப்படுகிறார்கள் .தகுந்த நடவடிக்கை தேவை .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X