பொது செய்தி

தமிழ்நாடு

பல மாவட்டங்களில் வெப்பநிலை 20ம் தேதி 3 டிகிரி செல்சியஸ் கூடும்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: 'தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வரும், 20ம் தேதி வெப்பநிலை, இயல்பை விட அதிகமாகும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மஹாராஷ்டிரா முதல், உள் தமிழகம் வரை, 1.5 கி.மீ., உயரம் அளவுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளா மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல்
districts, temperature, rise, மாவட்டங்கள், வெப்பநிலை, கூடும்

சென்னை: 'தமிழகத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், வரும், 20ம் தேதி வெப்பநிலை, இயல்பை விட அதிகமாகும்' என, சென்னை வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.

சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் புவியரசன் வெளியிட்ட செய்திக்குறிப்பு:மஹாராஷ்டிரா முதல், உள் தமிழகம் வரை, 1.5 கி.மீ., உயரம் அளவுக்கு வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. கேரளா மற்றும் அதையொட்டிய தென் கிழக்கு அரபிக்கடல் பகுதியில், 2.1 கி.மீ., உயரம் வரை மேலடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக, மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில், இன்று முதல், 21ம் தேதி வரை, ஓரிரு இடங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யலாம். புதுச்சேரி மற்றும் காரைக்காலில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும். சென்னையில் அதிகபட்சம், 36 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை பதிவாகும்.


latest tamil news


அதே நேரத்தில், மாநிலத்தின் பெரும்பாலான மாவட்டங்களில், 20ம் தேதியில் இருந்து, இரண்டு நாட்களுக்கு வெப்பநிலை உயர வாய்ப்புள்ளது.சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலுார் மற்றும் சுற்று வட்டார மாவட்டங்கள்; தர்மபுரி மற்றும் அதன் சுற்றுப்புற மாவட்டங்கள்; திருவண்ணாமலை முதல் டெல்டா மாவட்டங்கள் வரை மற்றும் புதுச்சேரியிலும், இயல்பை விட, 3 டிகிரி செல்ஷியஸ் வெப்பநிலை உயரும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

நேற்று காலை நிலவரப்படி, 24 மணி நேரத்தில், விருதுநகர், ஸ்ரீவில்லிபுத்துாரில், 6 செ.மீ., மழை பெய்தது. ஒகேனக்கல், பென்னாகரம், 5; திருத்துறைப்பூண்டி, சாத்துார், அம்பாசமுத்திரம், பெருந்துறை, 4; இரணியல், திருச்சுழி, 3; அருப்புக்கோட்டை, பேரூர், இடைப்பாடி, ஈரோடு, திருப்புவனம், சித்தார், வத்திராயிருப்பு, ராதாபுரம், 2 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
M Ramachandran - Chennai,இந்தியா
19-ஏப்-202103:40:30 IST Report Abuse
M  Ramachandran நல்லவர்கள் இருக்குமிடத்தில் மழை பொழிகிறது. அதனால் தான் சுடாலின் அங்கு சென்று மழை வராமல் தடுக்க அங்கு மக்களை காக்க சென்றுள்ளார். இவர் அயல் நாட்டுக்கு சென்றால் தமிழகம் சுபிச்சமாக இருக்கும். அவர் ராசி அப்படி.
Rate this:
Cancel
தல புராணம் - மதுரை,இந்தியா
18-ஏப்-202123:49:53 IST Report Abuse
தல புராணம் இப்பவே மண்டை காஞ்சி அலையிறானுங்க.. இன்னும் 3 டிகிரின்னா ?? காட்டை மொட்டையடிச்சி அங்கே வனச்சரகங்களில் யானை உள்ளிட்ட மிருகங்கள் குடிக்க தண்ணியில்லாமெ சுருண்டு விழுது சாகுதாம்.. இதையெல்லாம் அந்த சவுடேகர் பயல் டுவீட் பண்ணல்லை.. சங்கி சொம்புங்க வெளக்கு பிடிக்க வரலை.. போதாக்குறைக்கு இவனுங்க எட்டு அழிச்சாலை, சாகுற மாலைன்னு திட்டம் போட்டு தமிழ்நாட்டை பாலைவனம் ஆக்குறாய்ங்க..டவுசர் பாய்ஸ் டான்ஸ் ஆடுறாங்க, ஆடீம்கா அடிமைங்க ஆட்டம் போடுறாங்க..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X