தடுப்பூசி பற்றாக்குறையா, நோயாளிகள் பற்றாக்குறையா?; ப.சிதம்பரம் கிண்டல்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (89)
Share
Advertisement
புதுடில்லி: பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ள நிலையில், மத்திய அரசு பற்றாக்குறை இல்லை என மறுக்கிறது. எனவே தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை, நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பி.,யுமான ப.சிதம்பரம் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக அடித்து வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை
Chidambaram, CovidVaccine, Shortage, Patient, சிதம்பரம், காங்கிரஸ், கொரோனா, தடுப்பு மருந்து, தடுப்பூசி, பற்றாக்குறை

புதுடில்லி: பல மாநிலங்களில் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறையாக உள்ள நிலையில், மத்திய அரசு பற்றாக்குறை இல்லை என மறுக்கிறது. எனவே தடுப்பூசிக்கு பற்றாக்குறை இல்லை, நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர் என காங்கிரஸ் மூத்த தலைவரும் எம்பி.,யுமான ப.சிதம்பரம் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

இந்தியாவில் கொரோனா 2வது அலை தீவிரமாக அடித்து வருவதால் நாளுக்கு நாள் பாதிப்பு எண்ணிக்கை புதிய உச்சத்தை எட்டி வருகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக பல்வேறு கட்டுப்பாடுகளை மாநில அரசுகள் விதித்து வருகின்றன. மேலும், கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளை தீவிரப்படுத்தும் விதமாக மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளன. ஆனாலும், சில மாநிலங்களில் கொரோனா தடுப்பூசிக்கு பற்றாக்குறை நிலவுவதாகவும், உடனடியாக குறிப்பிட்ட தடுப்பூசிகளை வழங்குமாறும் அந்தந்த மாநில முதல்வர்கள் சார்பில் மத்திய அரசுக்கு கோரிக்கை விடுத்துள்ளனர். அதேநேரத்தில் தடுப்பூசிக்கு எந்தவித தட்டுப்பாடும் இல்லை என்றும், மாநிலங்களுக்கு உரிய தடுப்பூசிகள் வழங்கப்பட்டு வருவதாகவும் மத்திய அரசு தெரிவித்துள்ளது.


latest tamil news


இது தொடர்பாக காங்கிரஸ் எம்பி.,யும், மூத்த தலைவருமான ப.சிதம்பரம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டதாவது: மருத்துவமனைகளில் கொரோனா தடுப்பூசி இல்லை என்கிற அறிவிப்பு பலகைகள் தொங்க விடப்பட்டுள்ளன. ஆனால், தடுப்பூசிகள் பற்றாக்குறை இல்லை என மத்திய சுகாதாரத்துறை அமைச்சர் ஹர்ஷ்வர்தன் மறுக்கிறார். மத்திய அமைச்சரை நம்புங்கள். தடுப்பூசிகள், ஆக்ஸிஜன், படுக்கைகள், ரெம்டெசிவிர் மருந்து, மருத்துவர்கள், செவிலியர்கள் என அனைத்திற்கும் பஞ்சமில்லை; நோயாளிகள்தான் பற்றாக்குறையாக உள்ளனர். மேற்குவங்கத்தை கைப்பற்றி பா.ஜ.,வின் பேரரசுடன் இணைக்கும் அவசர யுத்தத்திற்கு மத்தியில் கொரோனாவிற்கு சிறிது நேரம் ஒதுக்கிய பிரதமர் மோடிக்கு நன்றி. இவ்வாறு அவர் கிண்டலாக பதிவிட்டுள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (89)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
r.sundaram - tirunelveli,இந்தியா
21-ஏப்-202117:45:07 IST Report Abuse
r.sundaram இந்திய ரூபாய் அச்சடிக்கும் இயந்திரம் பற்றாக்குறை பாகிஸ்தானுக்கு.
Rate this:
Cancel
19-ஏப்-202106:59:34 IST Report Abuse
R. SUBRAMANIAN எதுவாக இருந்தாலும் நாட்டில் இவர்களை போன்ற நாலாந்திர அரசியல் தலைவர்களுக்கு பற்றாக்குறை ஏற்படாது.
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஏப்-202104:48:18 IST Report Abuse
J.V. Iyer திகார் சிறைக்கு போகாமல் இங்கே என்ன செய்கிறார்?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X