அரசியல் செய்தி

தமிழ்நாடு

கூடுதல் தடுப்பூசி வழங்க வேண்டும்; பிரதமருக்கு ஸ்டாலின் கடிதம்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (98)
Share
Advertisement
சென்னை: தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை அதிகளவில் இருக்கிறது. இதனால் தமிழக அரசு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களை உடனடியாக அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து
DMK, Stalin, CovidVaccine, PMModi, Letter, திமுக,ஸ்டாலின், பிரதமர், மோடி, கொரோனா, தடுப்பூசி

சென்னை: தமிழகத்திற்கு அதிகளவில் கொரோனா தடுப்பூசி வழங்குமாறு பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் ஸ்டாலின் கடிதம்

திமுக தலைவர் ஸ்டாலின், பிரதமர் மோடிக்கு எழுதியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது: தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி பற்றாக்குறை அதிகளவில் இருக்கிறது. இதனால் தமிழக அரசு கேட்டுள்ள 20 லட்சம் தடுப்பூசி டோஸ்களை உடனடியாக அனுப்ப வேண்டும். கொரோனா தொற்று அதிகரித்து வருவதால் கூடுதல் தடுப்பூசி மருந்து தேவை. தடுப்பு மருந்து செலுத்துவதே, கொரோனா தடுப்புக்கான மருத்துவ பாதுகாப்பாகும். தடுப்பூசி மூலமே மக்களை கொரோனாவில் இருந்து பாதுகாக்க முடியும்.


latest tamil news


தடுப்பூசி செலுத்திக் கொள்ள மருத்துவமனைக்கு செல்பவர்கள் திருப்பி அனுப்பப்படுகின்றனர். மருந்து கொள்முதலில் மாநிலங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள கட்டுப்பாடுகளை நீக்க வேண்டும். கட்டுப்பாடு, முன்னுரிமைகளால் தடுப்பூசி செலுத்துவது சாத்தியமற்றது. மாநிலங்களே தடுப்பூசிகளை கொள்முதல் செய்ய மத்திய அரசு அனுமதிக்க வேண்டும். இவ்வாறு அந்த கடிதத்தில் கூறப்பட்டுள்ளது. மேலும், இந்த கடிதத்தில் திமுக.,வின் லோக்சபா, ராஜ்யசபா எம்.பி.,களும் கையெழுத்திட்டுள்ளனர்.

Advertisement
வாசகர் கருத்து (98)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
N.K - Hamburg,ஜெர்மனி
19-ஏப்-202114:15:26 IST Report Abuse
N.K இவர்மட்டும் குடும்பத்தோட சுற்றுலா போவார் ஆனால் தொண்டர்கள் வீதியில் இறங்கி சேவை செய்யணுமா? வாக்குப்பதிவு முடிந்த பிறகும் ஏனிந்த நாடகம்?
Rate this:
Cancel
karthika - chennai,இந்தியா
19-ஏப்-202103:32:36 IST Report Abuse
karthika ippave muthal amaichar aana maathiri than bandha...thotthu pona evaalo supera irukkum.aaha nianikkave inikuthu..karma karma nu cholluvome..athu intha vishayathila nadantha nalla irukkum..
Rate this:
Cancel
Vasu - Somerset,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202101:27:31 IST Report Abuse
Vasu ஆக நான் கொடைக்கானலில் இருப்பதால் எனக்கு ஒரு நூறு ஊசி அனுப்பி வைக்குமாறு கேட்டு கொள்கிறேன்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X