சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

சிற்றூருக்கான நீர் வடிகட்டி

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, 2025 வாக்கில், உலக மக்கள் தொகையில் பாதிப்பேர், நீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிக்க நேரிடும்.இந்த நிலையில் தான், கிடைக்கும் நீரை சுத்திகரிக்கும் சிறிய ஆலைகள் அவசியமாகின்றன. அத்தகைய ஆலைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதவையாக இருந்தால் இன்னும் நல்லது.ஒரு பிரஞ்சு நிறுவனம் இந்த இரண்டு அம்சங்களையும் கொண்ட ஒரு தீர்வை
 சிற்றூருக்கான நீர் வடிகட்டி

உலக சுகாதார நிறுவனத்தின் கணக்குப்படி, 2025 வாக்கில், உலக மக்கள் தொகையில் பாதிப்பேர், நீர் தட்டுப்பாடு உள்ள இடங்களில் வசிக்க நேரிடும்.இந்த நிலையில் தான், கிடைக்கும் நீரை சுத்திகரிக்கும் சிறிய ஆலைகள் அவசியமாகின்றன. அத்தகைய ஆலைகள் சுற்றுச்சூழல் பாதிப்பு இல்லாதவையாக இருந்தால் இன்னும் நல்லது.

ஒரு பிரஞ்சு நிறுவனம் இந்த இரண்டு அம்சங்களையும் கொண்ட ஒரு தீர்வை உருவாக்கியிருக்கிறது. இன்னோவாயா (InovaYa) என்ற அந்த அமைப்பு, 20 ஆயிரம் பேர் வசிக்கும் சிற்றூர்களின் நீர்தேவையை நிறைவேற்றும் கொள்ளவு கொண்ட சுத்திகரிப்பு கருவியை உருவாக்கியுள்ளது.

இந்த சிறிய சுத்திகரிப்பு கருவி, நீரிலுள்ள கசடுகள், பூச்சிமருந்து படிமங்கள் மட்டுமின்றி, 99.99 சதவீத பாக்டீரியாக்கள், வைரஸ்களை சுத்தமாக வடிகட்டித் தருகிறது. 'உன்யோ' (Unyo)என்ற இந்தக் கருவி, அளவில் சிறியதாக இருப்பதோடு, 2000 வாட்ஸ் மின்சாரத்தையே எடுத்துக்கொண்டு, தூய நீரைத் தருகிறது. மேலும், 10 ஆண்டுகள் நீடிக்கக் கூடிய வடிகட்டிகளையும் கொண்டுள்ளது.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X