சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மூளையை பலப்படுத்தும் 'நியூராலிங்க்' சில்லு!

Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
மனித மூளையின் செயல்திறனை பல மடங்கு அதிகரிக்க, மின்னணு சில்லுகளை பயன்படுத்தலாம். இப்படிச் சொல்வது, உலகப் பிரபலமான மூளைக்காரரான எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்றவற்றை நிறுவிய கையோடு, 'நியூராலிங்க்'என்ற நிறுவனத்திலும் பெரும் முதலீடு செய்துள்ளார்.நியூராலிங், இதுவரை வெகுசில சில்லுகளை தாயாரித்து சோதித்து வந்துள்ளது. அண்மையில், ஒரு குரங்கின் மூளைக்குள்
 மூளையை பலப்படுத்தும் 'நியூராலிங்க்' சில்லு!

மனித மூளையின் செயல்திறனை பல மடங்கு அதிகரிக்க, மின்னணு சில்லுகளை பயன்படுத்தலாம். இப்படிச் சொல்வது, உலகப் பிரபலமான மூளைக்காரரான எலான் மஸ்க். இவர் ஸ்பேஸ் எக்ஸ், டெஸ்லா போன்றவற்றை நிறுவிய கையோடு, 'நியூராலிங்க்'என்ற நிறுவனத்திலும் பெரும் முதலீடு செய்துள்ளார்.

நியூராலிங், இதுவரை வெகுசில சில்லுகளை தாயாரித்து சோதித்து வந்துள்ளது. அண்மையில், ஒரு குரங்கின் மூளைக்குள் ருசில்லினை பதித்து சோதனைகளை செய்தனர், நியூராலிங்க் விஞ்ஞானிகள். கபாலத்திற்குள் இருக்கும் சில்லு, குரங்கின் மூளைக்கும், வெளி உலகத்திற்குமான இடைமுகக் கருவியாக செயல்பட வடிவமைக்கப்பட்டது. இதன் உதவியுடன், 'பிங் பாங்' என்ற விளையாட்டை டிவி திரையில் விளையாடிப் பார்த்தது.

இதில் கவனிக்கவேண்டியது, ஒரு கணினியுடன் ஒரு குரங்கு பிங் பாங் ஆடியது என்பதுதான். குரங்கு தனது மூளைக்குள் பிங் பாங் மட்டையை அசைப்பது போல நினைக்க, நியூராலிங் சில்லு அதை புரிந்துகொண்டு, திரையில் உள்ள பிங் பாங் மட்டையை ஆட்டுவித்தது.

இந்த சில்லு நடைமுறைக்கு வந்தால், முதலில், பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட நோயாளிகளால் சில செயல்களை பிறரது உதவியின்றி செய்ய முடியும். தவிர, சாதாரண மனிதர்களுக்கு அசாதாரண மூளைத் திறன்களையும் இந்த சில்லுகள் தரக்கூடும்.

Advertisement


வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தல புராணம் - மதுரை,இந்தியா
20-ஏப்-202100:30:43 IST Report Abuse
தல புராணம் விபரீத பரிசோதனை. இயற்கை பல மில்லியன் ஆண்டுகள் வேலை செய்து உருவான பரிமாண வளர்ச்சியின் அடையாளம் மூளை. விபத்தில், நோயில் மூளையின் செயல்பாடு அல்லது அங்கங்களின் செயல்பாடு குறைபட்டவர்களுக்கு மட்டுமே இதை தற்காலிகமாக பொருத்தி உதவலாம் என்ற கோட்பாடுடன் செயல்பட்டால் நலம்.
Rate this:
HSR - MUMBAI,இந்தியா
20-ஏப்-202123:46:38 IST Report Abuse
HSRடேய் நீ முதல்ல திமுகவிற்கு சொம்பு தூக்குவதை நிறுத்து. உன் மூளையும் வேலை செய்யும்.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X