சிறப்பு பகுதிகள்

அறிவியல் மலர்

மது ஆலைக் கழிவிலிருந்து புரதம்

Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
தானியங்களின் ஊறலிலிருந்துதான் பீர் பானம் வடிகட்டப்படுகிறது. இந்த முறையில் ஏராளமான தானியக் கழிவுகள் உண்டாகின்றன. இவற்றை அப்படியே மாட்டுத் தீவனமாக போட்டுவிடுவதுதான் வழக்கம். ஆனால், தானியக் கழிவுகளிலிருந்து, மனிதர்களுக்கு பயன்படும் இரண்டு பொருட்களை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள்,
 மது ஆலைக் கழிவிலிருந்து புரதம்

தானியங்களின் ஊறலிலிருந்துதான் பீர் பானம் வடிகட்டப்படுகிறது. இந்த முறையில் ஏராளமான தானியக் கழிவுகள் உண்டாகின்றன. இவற்றை அப்படியே மாட்டுத் தீவனமாக போட்டுவிடுவதுதான் வழக்கம். ஆனால், தானியக் கழிவுகளிலிருந்து, மனிதர்களுக்கு பயன்படும் இரண்டு பொருட்களை தயாரிக்க முடியும் என விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர்.

அமெரிக்காவிலுள்ள வர்ஜீனியா தொழில்நுட்ப பல்கலைக்கழக விஞ்ஞானிகள், 'பீர்' தயாரித்து மிஞ்சும் பார்லி தானிய கழிவுகளை ஆராய்ந்தனர். பார்லியில் ஏராளமான புரதங்கள் உண்டு.

ஆனால், அவற்றிலுள்ள அதிகமான நார்ச் சத்துக்கள், இந்த புரதங்களை நாம் முழுமையாக சாப்பிட முடியாதபடி தடுக்கின்றன. எனவே, மது ஆலைகளிலிருந்து கிடைக்கும் ஈரமான தானிய கழிவுகளை, உலர்த்தாமல் அப்படியே அரைத்தனர் விஞ்ஞானிகள். அரவையின்போது தானியங்களை மென்மையாக்க, ஆல்கலீஸ் என்ற கிரியாஊக்கியையும் சேர்த்தனர்.

இதனால், தானியத்திலுள்ள நார்ச்சத்துக்களையும், புரதங்களையும் எளிதில் பிரித்தெடுக்க முடிந்தது.திரவ வடிவில் கிடைக்கும் 83 சதவீத புரதங்களை மனித சத்துணவு பொருட்களாக மாற்ற முடியும். நார்ச் சத்துக்களை மேலும் வேதி வினைகளுக்குள்ளாக்கி பியூட்டனால் போன்ற எரிபொருட்களாகவும் மாற்ற முடியும்.

மதுபான தானியக் கழிவுகளை, அந்த ஆலையிலேயே பயனுள்ள பொருட்களாக மாற்றும் தொழில்நுட்பம் தயார்.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
ocean - Kadappa,இந்தியா
20-ஏப்-202118:07:53 IST Report Abuse
ocean புரத சத்து தேடி குரோனா மனிதரிடம் தொற்றுகிறது. அதற்கு புரத சத்து மாத்திரை இருக்குமிடம் தெரிந்தால் அங்கேயே சுற்றி வந்து அதிகமாக பரவும். .
Rate this:
Cancel
Lion Drsekar - Chennai ,இந்தியா
20-ஏப்-202115:17:46 IST Report Abuse
Lion Drsekar தறபோது தரமான மது அரசாங்கத்தால் வழங்கப்படுகிறது இப்போது புரத சத்து மாத்திரை , வந்தே மாதரம்
Rate this:
Cancel
shyamnats - tirunelveli,இந்தியா
19-ஏப்-202108:28:52 IST Report Abuse
shyamnats நமூரிலும் இதுபோல கரும்பிலிருந்து சாறு எடுத்தபின் பகாசீ எனும் பொருள் உப பொருள் அதிகமாக கிடைக் கிறது . இவ்வா ராn ஆராய்ச்சியை செய்து சமூகத்திற்கு பலன் கிடைக்க செய்யலாம்.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X