பொது செய்தி

தமிழ்நாடு

காவல்துறை மரியாதைக்கு நடிகர் விவேக் மனைவி நன்றி

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (23)
Share
Advertisement
சென்னை: எனது கணவர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதாக விவேக் மனைவி தெரிவித்துள்ளார்.மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், நேற்று(ஏப்.,17) காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அவரின் சமூக
Vivek, ActorVivek, விவேக், குடும்பம், மனைவி,

சென்னை: எனது கணவர் விவேக்கிற்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு நன்றி தெரிவிப்பதாக விவேக் மனைவி தெரிவித்துள்ளார்.

மாரடைப்பு காரணமாக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நடிகர் விவேக், நேற்று(ஏப்.,17) காலை காலமானார். அவரது மறைவு ரசிகர்களுக்கு அதிர்ச்சியை அளித்தது. துணை ஜனாதிபதி, பிரதமர், மத்திய அமைச்சர் உள்ளிட்டோர் இரங்கல் தெரிவித்தனர். அவரின் சமூக சேவையை போற்றும் வகையில் அரசின் காவல்துறை மரியாதையுடன் உடல் தகனம் செய்யப்பட்டது.


latest tamil news


இந்நிலையில் இன்று பத்திரிகையாளர்களை சந்தித்த விவேக் மனைவி அருள்செல்வி கூறியதாவது: என் கணவரை நான் இழந்து நிற்கும் நேரத்தில், என் குடும்பத்திற்கு பக்கபலமாகவும், மிகப்பெரிய துணையாகவும் நின்ற மத்திய, மாநில அரசுகளுக்கு எங்கள் குடும்பம் சார்பாக நன்றி தெரிவித்து கொள்கிறேன். என் கணவருக்கு காவல்துறை மரியாதை கொடுத்ததற்கு மிக்க நன்றி. அதனை என்றைக்கும் நன்றியுடன் நினைத்து பார்ப்போம். இது என் கணவருக்கு கிடைத்த மிகப்பெரிய கவுரவம்.

காவல்துறை நண்பர்களுக்கு மிக்க நன்றி. கடைசி வரை எங்களுடன் நின்றீர்கள். அதற்கு நன்றி தெரிவித்து கொள்கிறேன். ஊடகத்துறைக்கும் நன்றி தெரிவித்து கொள்கிறேன். உலகெங்கும் உள்ள மற்றும் நேற்று வெகுதூரம் என் கணவருடன் கடைசி வரை வந்த அவருடைய ரசிகர்களுக்கு நன்றி. இவ்வாறு அவர் கூறினார்.

Advertisement
வாசகர் கருத்து (23)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Thesa pakthi ulla nanban - chennai,இந்தியா
21-ஏப்-202115:00:44 IST Report Abuse
Thesa pakthi ulla nanban சிஸ்டர் தைரியமாக இருக்கவும்
Rate this:
Cancel
Sundar - Madurai,இந்தியா
19-ஏப்-202110:52:21 IST Report Abuse
Sundar The Honour by the Government itself is the recognition of his service to the people.
Rate this:
Cancel
thamodaran chinnasamy - chennai,இந்தியா
19-ஏப்-202107:52:22 IST Report Abuse
thamodaran chinnasamy விவேக்கின் பெருந்தன்மையை மேன்மை படுத்திவிட்டீர்கள் , வாழும் அவர் புகழ் .
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X