பொது செய்தி

இந்தியா

இந்திய வேளாண் சட்டங்கள்; கனடா மாகாண முதல்வர் ஆதரவு

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (15)
Share
Advertisement
ஒட்டாவா: கனடா நாட்டின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ, இந்தியா நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் 140 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் சிலர் போராடி வருகின்றனர். மேலும், சில வெளிநாட்டு பிரபலங்களும் இந்திய
Canada, FarmLaws, India, இந்தியா, வேளாண் சட்டங்கள், கனடா

ஒட்டாவா: கனடா நாட்டின் சஸ்காட்செவன் மாகாண முதல்வர் ஸ்காட் மோ, இந்தியா நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவளித்துள்ளார்.

மத்திய அரசு நிறைவேற்றிய மூன்று வேளாண் சட்டங்களுக்கு எதிராக டில்லி எல்லையில் 140 நாட்களுக்கு மேலாக விவசாயிகள் போராடி வருகின்றனர். அவர்களுக்கு ஆதரவாக வெளிநாடுகளிலும் சிலர் போராடி வருகின்றனர். மேலும், சில வெளிநாட்டு பிரபலங்களும் இந்திய வேளாண் சட்டங்களுக்கு எதிராக கருத்து தெரிவித்திருந்தனர். இந்நிலையில், கனடா மாகாணமான சஸ்காட்செவனின் முதல்வர் ஸ்காட் மோ, இந்தியாவின் மூன்று வேளாண் சட்டங்களுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.


latest tamil news


இந்தோ-கனடா சேம்பர் ஆப் காமர்ஸ் (ஐ.சி.சி.சி) சார்பில் நடைபெற்ற வெபினாரில் அவர் பங்கேற்று பேசியதாவது: 2012 ஆம் ஆண்டில் கனடிய கோதுமை வாரியம் ஒழிக்கப்பட்ட போது, இந்தியாவில் தற்போது நிலவுவது போன்ற எதிர்ப்பு அப்போது கனடாவிலும் நிலவியது. இந்தியாவில் வேளாண் உற்பத்தி சந்தைப்படுத்தல் குழு முறையை போலவே, அப்போது மேற்கு கனடாவில் சஸ்காட்செவன் உட்பட பல மாகாணங்களில் இதுபோன்ற குழுக்கள் பொருட்களின் மீது ஏகபோக உரிமையைக் கொண்டிருந்தது.

ஆரம்ப நிச்சயமற்ற தன்மை கொண்ட சீர்திருத்தம், பின்னர் இந்த மாகாணங்களில், குறிப்பாக சஸ்காட்செவனில் விவசாயத் துறையின் புரட்சிகர மாற்றத்திற்கு வழிவகுத்தது. இது உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில் தொடர்ச்சியான மற்றும் அதிவேக உயர்வுக்கு வழிவகுத்தது. இதனால் தற்போது சஸ்காட்செவனின் தானிய ஏற்றுமதி கிட்டத்தட்ட 17 பில்லியனைத் தொட்டு அதிவேகமாக உயர்ந்து வருகிறது. வளர்ச்சி மாற்றத்துடன் மட்டுமே வருகிறது. மாற்றம் எப்போதும் எளிதானது அல்ல. வளர்ச்சி, சிறந்த வாய்ப்பை கொண்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.

Advertisement




வாசகர் கருத்து (15)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
jambukalyan - Chennai,இந்தியா
19-ஏப்-202107:16:44 IST Report Abuse
jambukalyan ஒரு நாட்டுக்கு நன்றாக இருக்கும் சட்டம், அடுத்த நாட்டிற்கு நன்றாக இருக்காது - கொண்டு வந்துள்ள மூன்று சட்டங்களில் என்ன குற்றம் குறை என்று யாருமே சொல்லவில்லை - இவரெல்லாம் அவர் நாட்டின் நலனை மட்டில் பார்த்துக் கொண்டு மற்ற நாட்டின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடாமல் இருக்கலாமே
Rate this:
Cancel
J.V. Iyer - Singapore,சிங்கப்பூர்
19-ஏப்-202104:34:37 IST Report Abuse
J.V. Iyer அப்பாடா மக்களுக்கு இப்போது விழிப்புணர்வு வந்தாச்சு.
Rate this:
Cancel
Viswam - Mumbai,இந்தியா
18-ஏப்-202123:04:43 IST Report Abuse
Viswam அயல்நாட்டுக்காரனுங்க தொல்லை தாங்கமுடியலை. முத்தலாக், என்ஆர்சி , சிஏஏ நம்ம நாட்டுலே சட்டம் போட்டா மலேசியாவிலேந்து துருக்கி வரை கூவறானுங்க. காசுமீரை இணைச்சா அதையும் தாண்டி இங்கிலாந்து முதல் கனடா வரை நாண்டுக்கறானுங்க. விவசாய சட்டம் போட்டால் வெளிநாட்டுக்காரன் கண்டவன் கருத்து சொல்லறான். எல்லாத்துக்கும் காரணம் இந்தியா எனும் பல்லாயிரக்கணக்கான வருடம் தன்னிறைவில் கோலோச்சிய பாரத தேசம் அயல்நாட்டுக்காரன் எல்லோர் கண்ணையும் உறுத்துது. முகலாய மற்றும் ஆங்கிலேய காலனி அடிமைகள், தினமும் ஒரு டாலர் அளவுகூட சம்பாதிக்க இயலாத ஜனத்தொகை எப்படி முன்னேறலாம் ? வல்லரசாக எப்படி ஆசைப்படலாம் ? அந்நிய சக்திகளின் உதவியால் நடந்து வந்த மதமாற்றத்தை எப்படி தடுக்கலாம்? எப்படி ஒரு ரைட் விங் அரசு மோடி எனும் லீடரை வைத்துக்கொண்டு தன்னிறைவு பெற முயற்சிக்கலாம் ? மிக பெரிய ராணுவத்தை உண்டாக்கலாம்? யார் சீண்டினாலும் உள்பூந்து அடிக்கும் தெகிரியம் எப்படி வந்தது ? உள்குத்தாக யாரை வைத்து இந்தியாவை போட்டுப்பார்க்கலாம்? விலைபோகும் அரசியல் கட்சிகளைவைத்தா? கம்மிகளா ? காலிஸ்தான் கூட்டங்களையா ? ரோஹிங்கியா ? பங்காளதேசி ? அல்லது செக்குலரிஸ்ம் போர்வையில் திரியும் கோஷ்டிகளையா ? ஓவெர்சீஸ் சிட்டிசன் ஆப் இந்தியாவை வைத்தா? அல்லது மொட்டை பெட்டிஷன் போட்டே எல்லாவற்றையும் தடங்கல் செய்யும் ஆசாமிகளைவைத்தா ?
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X