கொரோனாவை எதிர்கொள்ள 5 யோசனைகள்: பிரதமர் மோடிக்கு மன்மோகன் சிங் கடிதம்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (46)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் 5 யோசனைகளை தெரிவித்து, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார்.அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி உள்ளதாவது: கொரோனா தொற்றால், இந்தியாவும் உலக நாடுகளும் ஓராண்டாக தத்தளித்து வருகின்றன. வெவ்வேறு நகரங்களில் இருக்கும் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள்
manmohan, manmohansingh, Narendramodi, Modi, Primeminister, Corona, Coronavirus, covid19, கொரோனா, கொரோனாவைரஸ், கோவிட்19, கடிதம், பிரதமர், முன்னாள் பிரதமர், மன்மோகன், மன்மோகன் சிங், நரேந்திர மோடி, மோடி

புதுடில்லி: கொரோனா வைரசை எதிர்கொள்ளவும், தடுப்பூசி பணிகளை விரைவுபடுத்துவது தொடர்பாகவும் 5 யோசனைகளை தெரிவித்து, பிரதமர் மோடிக்கு முன்னாள் பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதி உள்ளார்.

அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி உள்ளதாவது: கொரோனா தொற்றால், இந்தியாவும் உலக நாடுகளும் ஓராண்டாக தத்தளித்து வருகின்றன. வெவ்வேறு நகரங்களில் இருக்கும் தங்களது குழந்தைகளை பெற்றோர்கள் பார்க்க முடியவில்லை. தாத்தா, பாட்டிகளை அவர்களது பேரன், பேத்திகள் பார்க்கவில்லை. மாணவர்களை வகுப்பறைகளில் ஆசிரியர்கள் பார்க்கவில்லை. பெரும்பாலானோர் தங்களது வாழ்வாதாரத்தை இழந்துள்ளனர். லட்சக்கணக்கானோர் வறுமையில் தள்ளப்பட்டு உள்ளனர். தற்போது இரண்டாவது அலை வீச துவங்கும் சூழ்நிலையில், பெரும்பாலான மக்கள், எப்போது தங்களது வாழ்வாதாரம் இயல்பு நிலைக்கு திரும்பும் என எதிர்பார்த்து உள்ளனர். பெருந்தோற்றை, எதிர்கொள்ள நிறைய விஷயங்கள் உள்ளன. அதில், தடுப்பூசி போடுவது முக்கியமானது. இது தொடர்பாக எனது ஆலோசனை வழங்கி உள்ளேன்.


latest tamil newsஅதன்படி,

1. அடுத்த 6 மாதங்களில், தடுப்பு மருந்து உற்பத்திக்காக அனுமதி கொடுக்கப்பட்ட நிறுவனங்கள் மற்றும் விநியோகிக்க உரிமம் பெற்ற நிறுவனங்கள் குறித்து அரசு அறிவிக்க வேண்டும். குறிப்பிட்ட காலத்திற்குள் தடுப்பூசி போட இலக்கு நிர்ணயம் செய்தால், அதற்கு முன்னதாக தேவையான அளவு தடுப்பு மருந்து கொள்முதல் செய்ய உத்தரவு பிறப்பிக்க வேண்டும். அப்போது தான், குறிப்பிட்ட காலகெடுவுக்குள் மருந்துகளை வழங்க உற்பத்தியாளர்கள் ஒப்பு கொள்வார்கள்.

2. தடுப்பு மருந்துகளை அனைத்து மாநிலங்களுக்கும் விநியோகிப்பது தொடர்பாக மத்திய அரசு அறிவிக்க வேண்டும். அவசர காலத்தில் விநியோகம் செய்வதற்கு 10 சதவீத மருந்துகளை மத்திய அரசு தன் வசம் வைத்திருக்க வேண்டும். மற்றவற்றை, மாநில அரசுகள் பயன்படுத்தி கொள்ள தெளிவான வெளியிட வேண்டும்

3. முன்கள பணியாளர்களுக்கு யார் என்பதை வரையறுக்கவும். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போடுவதற்கும் மாநில அரசுகளுக்கு அனுமதி அளிக்க வேண்டும். உதாரணமாக பள்ளி ஆசிரியர்கள், பஸ் மற்றும் மூன்று சக்கர மற்றும் டாக்சி டிரைவர்கள், நகராட்சி மற்றும் பஞ்சாயத்து ஊழியர்கள் மற்றும் வழக்கறிஞர்களை மாநில அரசுகள் முன்கள பணியாளர்களாக அறிவிக்க அனுமதி வழங்கலாம். அவர்கள் 45 வயதுக்கு கீழ் இருந்தாலும் தடுப்பூசி போட அனுமதி வழங்கலாம்.

4. கடந்த பல ஆண்டுகளாக, உலகளவில் மிகப்பெரிய தடுப்பு மருந்து உற்பத்தியாளராக இந்தியா திகழ்ந்தது. இதற்கு அரசின் கொள்கையும், பாதுகாக்கப்பட்ட அறிவுசார்சொத்துரிமையுமே காரணம். தனியார் நிறுவனங்களின் பங்களிப்பும் அதிகம். சுகாதார அவசர நிலை ஏற்பட்டுள்ள நிலையில், தடுப்பு மருந்து உற்பத்தி நிறுவனங்கள், உற்பத்தியை விரைவாக அதிகரிக்கவும் தேவையான நிதி மற்றும் சலுகைகளை மத்திய அரசு விரைவாக வழங்க வேண்டும்.

மேலும், சட்டத்தில் உள்ள கட்டாய லைசென்ஸ் முறையை அமல்படுத்த வேண்டும். இதன் மூலம், ஒரு லைசென்ஸ் மூலம், தடுப்பு மருந்தை ஏராளமான நிறுவனஙகள் உற்பத்தி செய்ய முடியும்ந இது போன்ற முறை எச்ஐவி எய்ட்ஸ் நோய் பரவிய நேரத்தில் கடைபிடிக்கப்பட்டது. கொரோனா கவலைக்குரியதாக உள்ளநிலையில், கட்டாய லைசென்ஸ் முறையை இஸ்ரேல் அமல்படுத்தி உள்ளது. இந்தியாவில், அதிகம் பேர் கொரோனாவினால் பாதிக்கப்பட்டு உள்ளதால், இந்த திட்டத்தை இந்தியா விரைவாக கடைபிடிக்க வேண்டும்.

5. இந்தியாவில், உள்நாட்டு மருந்து குறைவாக உள்ளதால், ஐரோப்பிய மருத்துவ அமைப்பு அல்லது அமெரிக்க மருத்துவ அமைப்பு ஒப்புதல் வழங்கிய மருந்துகளை , நமது நாட்டில் எந்தவித தடையும் இல்லாமல் இறக்குமதி செய்ய அனுமதிக்க வேண்டும். நாம், கணிக்க முடியாத அவசர நிலையை எதிர்கொண்டு வருகிறோம். அவசர காலத்தில் இதனை செய்ய நிபுணர்கள் ஏற்று கொள்வார்கள். இந்த தளர்வானது குறிப்பிட்ட காலத்திற்கு வழங்கலாம்.


latest tamil newsகொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் தடுப்பூசிகளை அதிகரிப்பது முக்கியம். தற்போது, இந்தியாவில் குறைந்தளவு பேருக்கு தான் தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது. சரியான கொள்கை திட்டமிடலுடன், சிறப்பாகவும் விரைவாகவும் நம்மால் செயல்பட முடியும் என நம்புகிறேன். இந்த ஆலோசனைகளை மத்திய அரசு ஏற்று கொள்ளும் என்றும், அதற்கு ஏற்றவாறு செயல்படும் எனவும் நம்புகிறேன். இவ்வாறு அந்த கடிதத்தில் மன்மோகன் சிங் கூறி உள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (46)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
19-ஏப்-202110:33:56 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு நிலக்கரித்துறை இவரது பொறுப்பில் இருந்த பொழுதுதான் நிலக்கரி சுரங்க ஒதுக்கீட்டு ஊழல் நடந்தது நாட்டையே கூறு போட்டு விற்க அனைத்து அதிகாரங்களையும் பயன்படுத்திய பாவி அமைச்சரவையை ஊழலுக்காகவே அர்ப்பணித்த மோசக்காரன்
Rate this:
Cancel
வெற்றிக்கொடி கட்டு - நாத்திக, தேசவிரோத கட்சிகளை ஆதரிக்காதீர்,இந்தியா
19-ஏப்-202110:20:15 IST Report Abuse
வெற்றிக்கொடி கட்டு இவருக்கும் பொழுது போகல
Rate this:
Cancel
srinivasan - stockholm,சுவீடன்
19-ஏப்-202101:05:15 IST Report Abuse
srinivasan ' Indian vaccines' are not of good quality. Import is to allowed.....what is saying? Want to o glorify imports? Are vaccines are bulk commodity like food grains? Whole world is facing crisis. Our country is one of few in the world to have vaccines. 12 cr have been vaccinated Respective ministries instititutes are giving their best efforts. In seat giving constructive suggestoons, he is dragging everyone down
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X