பொது செய்தி

இந்தியா

162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (3)
Share
Advertisement
புதுடில்லி: நாடு முழுவதும் புதிதாக 162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக, அம்மாநில முதல்வர்கள் தெரிவித்திருந்தனர். சத்தீஸ்கரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 4 கொரோனா நோயாளிகள்
Covid19, OxygenPlants, India, Centre,

புதுடில்லி: நாடு முழுவதும் புதிதாக 162 ஆக்ஸிஜன் மையங்கள் அமைக்க மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.

நாடு முழுவதும் கொரோனா 2வது அலை காரணமாக, மருத்துவமனைகளில் ஆக்சிஜன் தேவை அதிகரித்துள்ளது. டில்லி, மஹாராஷ்டிரா உள்ளிட்ட பல மாநிலங்களில் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு நிலவுவதாக, அம்மாநில முதல்வர்கள் தெரிவித்திருந்தனர். சத்தீஸ்கரில் ஆக்ஸிஜன் தட்டுப்பாட்டால் 4 கொரோனா நோயாளிகள் உயிரிழந்தது சோகத்தை ஏற்படுத்தியது. இதனையடுத்து நாடு முழுவதும் ஆக்ஸிஜன் உற்பத்தியை அதிகரிக்க வேண்டும் எனவும், ஆக்ஸிஜன் நிரப்பும் ஆலைகள் 24 மணி நேரமும் செயல்படவும் பிரமர் மோடி உத்தரவிட்டிருந்தார்.


latest tamil news


இந்நிலையில், அனைத்து மாநிலங்களிலும் 162 ஆக்ஸிஜன் உற்பத்தி மையங்களை அமைக்க மத்திய சுகாதார அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. இதில், மத்திய பிரதேசம், உத்தரபிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களில், ஏற்கனவே 33 உற்பத்தி மையங்கள் அமைக்கப்பட்டுள்ளன. இதன் மூலம் பொது சுகாதர மையங்களில் ஆக்ஸிஜன் கையிருப்பு அளவு, 154 மெட்ரிக் டன் அளவிற்கு அதிகரிக்கும் என, மத்திய சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

Advertisement




வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
nalledran - Madurai,இந்தியா
18-ஏப்-202117:34:00 IST Report Abuse
nalledran 7,000 மெட்ரிக் டன்களுக்கும் அதிகமான மருத்துவ ஆக்சிஜனை உற்பத்தி செய்யும் திறன் இந்தியாவுக்கு இருப்பதாக தொழில் வல்லுநர்கள் கூறுகின்றனர். ஐனாக்ஸ் ஏர், லிண்டே இந்தியா, கோயல் எம்ஜி கேஸ் பிரைவேட் லிமிடெட், நேஷனல் ஆக்சிஜன் லிமிடெட் ஆகிய நிறுனங்கள் ஆக்ஜிசன் தயாரிப்பில் ள்ளன. இவற்றில் மிகப்பெரியது, ஐனாக்ஸ், நாளொன்றுக்கு 2000 டன் உற்பத்தி செய்கிறது. நாட்டின் மொத்த மருத்துவ ஆக்சிஜன் தேவையில் 60 சதவீதத்தை பூர்த்தி செய்கிறது. அதே நேரத்தில், புதிய ஆக்சிஜன் உற்பத்தி ஆலைகளை உடனடியாக அமைக்கவோ அல்லது ஏற்கனவே உள்ளவற்றை விரிவுபடுத்தவோ முடியாது. 150 அல்லது 200 டன் ஆக்ஜிசன் உற்பத்தி நிறுவனங்களை அமைக்க 24 மாதங்களாகும். ஐனாக்ஸ் நிறுவனம் தமிழகத்தில் ஆக்ஜிசன் உற்பத்தி தளத்தை நிறுவ திட்டமிட்டுள்ளதாகவும், ஆனால் அது தற்போதைய நெருக்கடியை தீர்க்காது.
Rate this:
Cancel
nalledran - Madurai,இந்தியா
18-ஏப்-202117:17:42 IST Report Abuse
nalledran நாட்டிலுள்ள பொது சுகாதார நிறுவனங்களின் மருத்துவப் பயன்பாட்டிற்கான ஆக்ஜிசன் உற்பத்தி செய்யும் அமைப்புகளை உருவாக்க பி.எம். கேர்ஸ் அறக்கட்டளை ரூ.201 கோடியே 58 லட்சம் ஒதுக்கியது.. மொத்த நிதியில் ரூ.137.33 கோடி திட்டப் பணிகளுக்கும், ரூ.64.25 கோடி பராமரிப்புப்பு பணிக்கு எனவும் பிரிக்கப்பட்டது. 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 162 ஆக்ஜிசன் மையங்ககளை உருவாக்க முடியும். இதன் மூலம் 154.19 மெட்ரிக் டன் உற்பத்தி செய்யமுடியும் எனக் கூறியுள்ளது. இது அறிவிப்பு வெளியானது 2021 ஜனவரியில் தான். உண்மையை இப்படி இருக்கையில் இந்த நிதி ஒதுக்கீடு அறிவிப்பு. தற்போதைய கொரோனா நெருக்கடிக்கு தீர்வாக அமையுமா? மோடி உண்மையைக். கூறினாலும் தாங்கள் அதை மறைப்பது ஏனோ?
Rate this:
தல புராணம் - மதுரை,இந்தியா
19-ஏப்-202100:12:27 IST Report Abuse
தல புராணம்எப்பவும் போல அது உண்மை இல்லை.. மோடி வாய்லே சுட்ட வடைன்னு தெரியுது.. பிஎம் கேர்ஸ் நிதி ஒருவழிப்பாதை.. உள்ளே போனா வராது.. அதை தான் சொல்லுறாங்க.. அரசாங்க பணத்திலிருந்து திட்டம் போட்டு அதுவுலேயும் கமிஷன் மோடி கஜானாவுக்கு போகும்ன்னு தெரியுது.....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X