உலகில் தடுப்பு மருந்து செலுத்தும் வேகத்தில் இந்தியா முதலிடம்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (21) | |
Advertisement
புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்துகள் செலுத்தும் பணி கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் துரிதமாக நடைபெற்று வருகிறது.இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 92 நாட்களில் இந்திய அரசு 12 கோடி
12_Crore, CovidDoses, India, CovidVaccine, இந்தியா, கொரோனா, தடுப்பூசி, தடுப்பு மருந்து

புதுடில்லி: தற்போது கொரோனா வைரஸின் இரண்டாவது அலை இந்தியாவில் தீவிரமாகப் பரவி வருகிறது. இதனை அடுத்து தடுப்பு மருந்துகள் செலுத்தும் பணி கடந்த மூன்று மாதங்களாக இந்தியாவின் பல்வேறு மாநிலங்களில் மாநில சுகாதாரத் துறையின் அறிவுறுத்தலின் பேரில் துரிதமாக நடைபெற்று வருகிறது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், 92 நாட்களில் இந்திய அரசு 12 கோடி டோஸ் தடுப்பு மருந்துகளை குடிமக்களுக்கு செலுத்தி உள்ளதாகத் தகவல் வெளியிட்டுள்ளது. உலகில் வேறு எந்த நாடும் இந்த அளவுக்கு வேகமாக தடுப்பு மருந்துகளை குடிமக்களுக்கு செலுத்தவில்லை என்று பெருமிதமாக தெரிவித்துள்ளது.


latest tamil news


தடுப்பு மருந்துகளை வேகமாகச் செலுத்துவதில் இந்தியாவுக்கு அடுத்த இடத்தில் உள்ளது அமெரிக்கா. 97 நாட்களில் அமெரிக்கா இந்த இலக்கை எட்டி உள்ள நிலையில், சீனா 108 நாட்களில் இலக்கை எட்டி மூன்றாம் இடம் பெற்றுள்ளது. தடுப்பு மருந்துகள் பற்றாக்குறை ஒரு பக்கம் ஏற்பட்டபோதும் மறுபக்கம் தடுப்பு மருந்துகள் செலுத்தப்படும் வேகம் தொடர்ந்து அதிகரிக்கப்பட்டு வருகிறது. இதே வேகத்தில் சென்றால் வரும் செப்டம்பர் மாதத்திற்குள் இந்தியாவில் 80 சதவீதம் பேருக்கு வைரஸ் தடுப்பு மருந்து செலுத்தப்பட்டுவிடும் என்பது குறிப்பிடத்தக்கது.

Advertisement
வாசகர் கருத்து (21)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Appan - London,யுனைடெட் கிங்டம்
19-ஏப்-202109:27:29 IST Report Abuse
Appan மக்கள் தொகையில் எவ்வளவு சதம் போட்டு உள்ளார்கள் தான் முக்கியம்..அமெரிக்க 130 mil பேருக்கு அதாவது 40% பேருக்கு போட்டு உள்ளார்கள்..ஆனால் இந்தியாவோ 150 mil அதாவது 14 % பேருக்கு போட்டு உள்ளார்கள்..இந்த வேகத்தில் தடுப்பூசி போட்டால் எல்லோருக்கும் போட இன்னும் ரெண்டு வருஷம் ஆகும்..அதற்குள் எல்லோருக்கும் நோய் வரும்..இது தான் நிலை..
Rate this:
Venkat, UAE - Abudhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-202112:30:39 IST Report Abuse
Venkat, UAEஇந்திய அரசால் இதைவிட அதிகமான பேருக்கு தடுப்பூசி செலுத்தியிருக்க முடியும். இரண்டு மாதங்களுக்கு மேலாக கடையை திறந்து வைத்துவிட்டு ஆள்களுக்காக காத்திருந்தார்கள். ஆனால் ஒரு சில தலைவர்கள் மற்றும் அரசாங்கத்துக்கு எதிரான போலி சமூக ஆர்வலர்களின் தவறான அறிக்கைகளாலும் பொதுமக்கள் குழம்பிப்போய் தடுப்பூசி செலுத்த முன்வரவில்லை. எக்கச்சக்கமான தடுப்பூசிகள் வீணடிக்கப்பட்டன. லட்சக்கணக்கான தடுப்பூசிகளை இந்திய அரசும் மருந்து கம்பெனிகளும் உலகம் முழுவதும் ஏற்றுமதி செய்துவிட்டன. இப்போ எவன் எவனெல்லாம் மக்களை குழப்பினானோ அவனெல்லாம் தடுப்பூசியின் அவசியத்தை உணர்ந்து முதலில் போய் ஊசி போட்டுக்கிட்டான். இப்போ எல்லா மருத்துவமனைகளிலும் கூட்டம் அலை மோதுகிறது. அரசு சமாளிக்கும் என்ற நம்பிக்கை இருக்கிறது....
Rate this:
Cancel
Nithya - Chennai,இந்தியா
19-ஏப்-202106:16:30 IST Report Abuse
Nithya First in spreading the corona disease also. Why can't you take this credit also????
Rate this:
Cancel
periasamy - Doha,கத்தார்
19-ஏப்-202101:18:24 IST Report Abuse
periasamy இந்தியாவை ஆளுபவர்களே கொரோனா கட்டுப்பாடு விதிக்கின்றனர் ஆனால் அவர்களே அந்த கட்டுப் பாடுகளை மதிப்பதில்லை அப்புறம் பொது மக்களை குறை சொல்லுவதென்னே மோடியும் மிட்ஷாவும் பழனியும் பன்னீரும் கூட்டிய கூட்டங்களை பார்த்தல் தெரியும் இந்த ஆட்சியாளர்களின் லட்சணம்
Rate this:
Anbu - Kolkata,இந்தியா
19-ஏப்-202111:44:33 IST Report Abuse
Anbuவேறு எந்த அரசியல்வாதிக்கும் கூட்டம் கூடவில்லையா நண்பரே ????...
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X