பொது செய்தி

இந்தியா

கொரோனா சிகிச்சைக்கு 4 ஆயிரம் ரயில் பெட்டிகள் தயார்

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது.நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனை தொடர்ந்து ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே மாற்றி
ரயில்வே, கொரோனா சிகிச்சை, பெட்டிகள், கொரோனா வைரஸ், கோவிட்19,

புதுடில்லி: கொரோனா நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க 4 ஆயிரம் ரயில் பெட்டிகளை தயார் நிலையில் வைத்துள்ளதாக இந்திய ரயில்வே தெரிவித்து உள்ளது.

நாடு முழுவதும் கொரோனாவின் 2வது அலை அதிவேகமாக பரவி வருகிறது. இதனால், சில மாநிலங்களில் மருத்துவமனைகளில் உள்ள படுக்கைகள் நிரம்பி வழிகின்றன. இதனை தொடர்ந்து ரயில் பெட்டிகளை கொரோனா சிகிச்சை வார்டுகளாக ரயில்வே மாற்றி வருகிறது.

இந்நிலையில், ரயில்வே வெளியிட்ட அறிக்கையில், இதுவரை 4000 பெட்டிகள் கொரோனா சிகிச்சை வார்டுகளாக மாற்றப்பட்டுள்ளன. 16 மண்டலங்களில் இந்த பெட்டிகள் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. மேலும் அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப பெட்டிகள் வழங்கப்படும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.


latest tamil news



இது தொடர்பாக ரயில்வே அமைச்சர் பியூஷ் கோயல் கூறியதாவது: கொரோனாவுக்கு எதிராக போராடுவதற்கு அனைத்து வழிகளையும் ரயில்வே கையாண்டு வருகிறது. மஹாராஷ்டிராவின் நந்துர்பாரில் ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது.

கொரோனாவிற்கு எதிரான போராட்டத்தில் எந்த வாய்ப்பையும் தவற விட மாட்டோம். 800 படுக்கைகளுடன் 50 ரயில் பெட்டிகள் கொரோனா வார்டுகளாக மாற்றப்பட்டு, டில்லியின் ஜகுர் பஸ்தி ரயில் நிலையத்திலும், 25 பெட்டிகள், ஆனந்த் விஹார் நிலையத்திலும் நிறுத்தப்பட்டு உள்ளது. மாநில அரசுகளின் கோரிக்கைக்கு ஏற்ப நாடு முழுவதும் 3 லட்சம் படுக்கைகள், கொரோனா சிகிச்சைக்காக ஏற்பாடு செய்யப்படும் என தெரிவித்து உள்ளார்.

Advertisement




வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
19-ஏப்-202111:28:28 IST Report Abuse
தமிழ்வேள் சென்னை மற்றும் தெற்கு ரயில்வேயில் கொரோனா வார்டாக மாற்றப்பட்ட ரயில்பெட்டிகள் பயன்பாடின்றி சும்மா நிறுத்தப்பட்டிருந்தன ..திருநின்றவூர் வண்டலூர் சிங்கப்பெருமாள் கோவில் நிலையங்களில் தலா 20 பெட்டிகள் கடந்த கோவிட காலம் முழுதும் நிறுத்தப்பட்டிருந்தன ..மாநில அரசுகள் இந்த வார்டு கோச்சுகளை விரும்பவில்லை என்று ஒரு செய்தியும் வந்தது ... வடஇந்திய மாநிலங்கள் பயன்படுத்திய அளவு தென்னிந்திய மாநிலங்கள் இந்த கோச்சுகளை பயன்படுத்தவில்லை ....இங்கு கல்லூரிகளை மருத்துவமனைகளாக மாற்றுவதில் காசு பார்த்ததால் , வார்டு கோச்சுகளுக்கு வரவேற்பு இல்லை போல இருக்கிறது ..
Rate this:
Cancel
Raj - Tirunelveli,யூ.எஸ்.ஏ
19-ஏப்-202107:55:13 IST Report Abuse
Raj கும்ப மேளா சாமியார்களை இந்த பெட்டிகளில் முதலில் போடுங்கள். அவர்கள் கும்ப மேளாவை கோவிட் மேளாவாக மாற்றி விட்டார்கள்.
Rate this:
தமிழ்வேள் - THIRUVALLUR,இந்தியா
19-ஏப்-202111:38:59 IST Report Abuse
தமிழ்வேள்தப்லீக்கின் கொரோனா திருவிளையாடலை வசதியாக மறந்து விட்டீர்கள் போல ......
Rate this:
Cancel
19-ஏப்-202106:01:42 IST Report Abuse
இவன் பெட்டி கணக்கு இல்லாம சொல்ல முடியாது. பெட்டி இருந்து நோயாளி இல்லனா செலவு னு சொல்றது, நோயாளி அதிகம் இருந்தா பெட்டி இல்ல னு சொல்றது.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X