பொது செய்தி

தமிழ்நாடு

கோல்கட்டாவை வீழ்த்தியது பெங்களூரு

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (2)
Share
Advertisement
சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி 38 ரன் வித்தியாசத்தில் கோல்கட்டா அணியை வீழ்த்தியது.இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (5), ரஜத் படிதர் (1) ஏமாற்றினர்.அபாரமாக ஆடிய

சென்னை: ஐ.பி.எல்., லீக் போட்டியில் அசத்திய பெங்களூரு அணி 38 ரன் வித்தியாசத்தில் கோல்கட்டா அணியை வீழ்த்தியது.



latest tamil news



இந்தியாவில், 14வது ஐ.பி.எல்., தொடர் நடக்கிறது. சென்னை, சேப்பாக்கம் மைதானத்தில் நடந்த லீக் போட்டியில் கோல்கட்டா, பெங்களூரு அணிகள் மோதின.'டாஸ்' வென்று முதலில் 'பேட்' செய்த பெங்களூரு அணிக்கு கேப்டன் விராத் கோஹ்லி (5), ரஜத் படிதர் (1) ஏமாற்றினர்.
அபாரமாக ஆடிய மேக்ஸ்வெல், 28 பந்தில் அரைசதமடித்தார். பிரசித் கிருஷ்ணா பந்தில் படிக்கல் (25) அவுட்டானார். கம்மின்ஸ் 'வேகத்தில்' மேக்ஸ்வெல் (78) வெளியேறினார். ரசல் வீசிய 18வது ஓவரில் ஒரு சிக்சர், 2 பவுண்டரி அடித்த டிவிலியர்ஸ், ஹர்பஜன் பந்தை சிக்சருக்கு அனுப்பி 27 பந்தில் அரைசதம் கடந்தார். தொடர்ந்து அசத்திய இவர், ரசல் வீசிய கடைசி ஓவரில் ஒரு சிக்சர், 3 பவுண்டரி விளாசினார்.பெங்களூரு அணி 20 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 204 ரன் குவித்தது. டிவிலியர்ஸ் (76), ஜேமிசன் (11) அவுட்டாகாமல் இருந்தனர்.


latest tamil news



கடின இலக்கை விரட்டிய கோல்கட்டா அணிக்கு நிதிஷ் ராணா (18), சுப்மன் கில் (21) சுமாரான துவக்கம் தந்தனர். ராகுல் திரிபாதி (25), கேப்டன் மார்கன் (29), சாகிப் (26), ரசல் (31) பெரிய அளவில் சோபிக்கவில்லை. கோல்கட்டா அணி 20 ஓவரில் விக்கெட்டுக்கு 166 ரன் மட்டும் எடுத்து தோல்வியடைந்தது. பெங்களூரு சார்பில் ஜேமிசன் 3 விக்கெட் கைப்பற்றினார். பெங்களூரு அணி 'ஹாட்ரிக்' வெற்றியை பதிவு செய்தது.

Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
J.Isaac - bangalore,இந்தியா
19-ஏப்-202109:48:12 IST Report Abuse
J.Isaac இதை முதலில் தடை செய்ய வேண்டும்
Rate this:
Cancel
19-ஏப்-202106:09:16 IST Report Abuse
ஆப்பு எவன் எக்கேடு கெட்டாலும் இவிங்க ஆட்டத்துக்கும், துட்டுக்கும் குறைச்சல் இல்லே..
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X