மரண படுக்கையில் ரஷ்ய எதிர்க்கட்சித் தலைவர்!

Updated : ஏப் 18, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (11)
Share
Advertisement
மாஸ்கோ: ரஷ்ய அரசால் விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி தற்போது மரணப் படுக்கையில் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.ரஷ்யாவின் நிரந்தர அதிபர் போல புடின் உள்ளார். 1999 முதல் பிரதமராகவும், அதிபராகவும் மாறி மாறி கோலோச்சி வருகிறார். இவர் மீது எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது, பிற நாட்டு

மாஸ்கோ: ரஷ்ய அரசால் விஷம் வைத்து கொல்ல முயற்சிக்கப்பட்டதாக கூறப்படும் அந்நாட்டு எதிர்க்கட்சித் தலைவர் அலெக்சி நவல்னி தற்போது மரணப் படுக்கையில் இருப்பதாக அவரது செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார்.latest tamil newsரஷ்யாவின் நிரந்தர அதிபர் போல புடின் உள்ளார். 1999 முதல் பிரதமராகவும், அதிபராகவும் மாறி மாறி கோலோச்சி வருகிறார். இவர் மீது எதிர்க்கட்சிகளை ஒடுக்குவது, பிற நாட்டு தேர்தல்களில் தலையிடுவது போன்ற குற்றச்சாட்டுகள் உள்ளன. நீண்ட கால புடின் ஆட்சியில் அனைத்து துறைகளிலும் ஊழல் மலிந்துவிட்டதாக அலெக்சி நவல்னி என்பவர் போராடி வந்தார். இதற்கென எப்.பி.கே., என்ற ஊழலுக்கு எதிரான அமைப்பை தொடங்கினார். புடினுக்கு இவர் குடைச்சலாக மாறியதால் இவர் மீதும், இவர் அமைப்பின் மீது பல்வேறு வழக்குகள் பதியப்பட்டன.

இந்நிலையில் கடந்த ஆண்டு ஆகஸ்டில், விமான பயணத்தின் போது அலெக்சி நவல்னி நிலைகுலைந்து போனார். மருத்துவர்கள் ஆய்வில் நரம்பு மண்டலத்தை முடக்கும் நோவிசோக் என்ற விஷம் அளிக்கப்பட்டது தெரிய வந்தது. இந்த விஷத்தன்மை கொண்ட வேதிப்பொருள் ரஷ்ய ராணுவத்தால் முன்னர் கையாளப்பட்டது. எனவே அரசு அவரை கொல்ல முயற்சித்துள்ளது என்ற குற்றச்சாட்டு எழுந்தது. இதனை அமெரிக்க உளவுத்துறையும் உறுதிப்படுத்தியது.


நவல்னி அமைப்புக்கு தடை!இந்த விஷத்தாக்குதலால் கோமா நிலைக்கு சென்ற நவல்னியை ஜெர்மனில் சேர்த்து சிகிச்சை அளித்தனர். உடல்நிலை தேறியவர் மீண்டும் கடந்த ஜனவரியில் மாஸ்கோ திரும்பினார். அவரை விமான நிலையத்திலேயே ரஷ்ய போலீசார் கைது செய்தனர். மோசடி வழக்கில் பரோலை மீறியதாக அவர் மீது குற்றம்சாட்டப்பட்டது. அதனை விசாரித்த மாஸ்கோ நீதிமன்றம், அவருக்கு 2.8 ஆண்டுகள் சிறை தண்டனை விதித்தது. அவரது ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை தீவிரவாத இயக்கமாக்க முத்திரைக் குத்தி தடை விதிக்கவும் முயற்சி நடக்கிறது.


latest tamil news
என்ன நடக்குமென தெரியாது!சிறையில் அடைக்கப்பட்டுள்ள நவல்னிக்கு உரிய மருத்துவ சிகிச்சைகள் தரப்படவில்லை என கூறப்படுகிறது. அதற்காக அவர் கடந்த 3 வாரங்களாக தொடர் உண்ணாவிரதம் மேற்கொண்டுள்ளார். இதனால் குடலிறக்கம், கைகளில் உணர்விழப்பு ஏற்பட்டுள்ளது. மேலும் சிறுநீரக செயலிழப்பு மற்றும் இதய பிரச்சினைகள் ஏற்படும் அபாயம் உள்ளதாக கூறுகின்றனர். திங்களன்று என்ன நடக்கும் என தெரியாது. அலெக்சி இறந்து கொண்டிருக்கிறார். அவரை விடுவிக்கக் கோரி ஒரு பிரம்மாண்ட பேரணி தயாராகி வருகிறது என அவரது செய்தித் தொடர்பாளர் யர்மிஷ் பேஸ்புக்கில் கூறியுள்ளார்.

Advertisement
வாசகர் கருத்து (11)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
மன்னிப்பு - Madurai,இந்தியா
19-ஏப்-202112:22:36 IST Report Abuse
மன்னிப்பு அப்பறம் ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாக நம் பாரத தேசத்தை ஆக்கிரமித்து ஆட்சி செய்த இரு மத ஆட்சியாளர்களின் ஆட்சி எப்படி இருந்தது என்று சில வரலாற்றுப் புத்தகங்களை படித்துப் பார்க்கவும் . வாழ்க வளமுடன்.வாழ்க வையகம்.
Rate this:
Cancel
Ramesh R - Abu Dhabi,ஐக்கிய அரபு நாடுகள்
19-ஏப்-202110:52:16 IST Report Abuse
Ramesh R புதின் சீக்கிரம் கடவுளுக்கு பதில் கொடுக்க வேண்டி வரும்
Rate this:
Cancel
pradeesh parthasarathy - Mylapore,இந்தியா
19-ஏப்-202110:34:57 IST Report Abuse
pradeesh parthasarathy ரஷ்யாவின் நிரந்தர அதிபர் போல புடின் உள்ளார். ....... இந்தியாவிலும் இப்போ இது தானே ...விவசாயிகள் , பத்திரிகைகள் மீதான அடக்குமுறையை இதற்க்கு சாட்சி ...
Rate this:
Malick Raja - jeddah,சவுதி அரேபியா
19-ஏப்-202113:25:50 IST Report Abuse
Malick Rajaஇதெல்லாம் வெறுக்கும் நிலைகள் .. மனிதர்களில் சிலர் தங்களுக்கு கிடைக்கப்பட்ட அதிகாரத்தில் நிரந்தரம் இருக்கிறது என்று எண்ணினால் அது அறிவார்ந்த நிலைக்கு ஒப்பாகாது .....
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X