குடுமிப்பிடி!கொரோனா சிகிச்சை மருந்து விவகாரத்தில்...:மஹாராஷ்டிரா அரசியலில் கடும் மோதல்

Updated : ஏப் 20, 2021 | Added : ஏப் 18, 2021 | கருத்துகள் (4)
Share
Advertisement
மும்பை:கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும், 'ரெம்டெசிவிர்' மருந்து தொடர்பான விவகாரத்தில், மஹாராஷ்டிராவில், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் குடுமிப்பிடி நடந்து வருவது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல்
குடுமிப்பிடி!கொரோனா சிகிச்சை மருந்து விவகாரத்தில்...:மஹாராஷ்டிரா அரசியலில் கடும் மோதல்

மும்பை:கொரோனா நோயாளிகளுக்கு வழங்கப்படும், 'ரெம்டெசிவிர்' மருந்து தொடர்பான விவகாரத்தில், மஹாராஷ்டிராவில், ஆளும் கூட்டணிக்கும், எதிர்க்கட்சிக்கும் இடையே அரசியல் குடுமிப்பிடி நடந்து வருவது, மக்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.

மஹாராஷ்டிராவில், முதல்வர் உத்தவ் தாக்கரே தலைமையிலான, சிவசேனா, காங்கிரஸ், தேசியவாத காங்கிரஸ் கூட்டணி அரசு அமைந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் இரண்டாவது அலை, அங்கு மிகத் தீவிரமாக உள்ளது. இந்நிலையில், வைரஸ் பரவல் தடுப்பு நடவடிக்கைகள் உள்ளிட்டவற்றில், ஆளும் கூட்டணி மற்றும் எதிர்க்கட்சியான பா.ஜ., கடந்த சில வாரங்களாக பரஸ்பரம் குற்றச்சாட்டுகளை முன்வைத்து வருகின்றன.


பா.ஜ., எதிர்ப்பு

இந்நிலையில், கொரோனா நோயாளிகளின் சிகிச்சைக்காக பயன்படுத்தப்படும், ரெம்டெசிவிர் மருந்துக்கு, நாட்டின் பல பகுதிகளில் தட்டுப்பாடு உள்ளது. 'மஹாராஷ்டிராவுக்கு ரெம்டெசிவிர் மருந்துகளை வினியோகிக்கக் கூடாது என, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுக்கு, மத்திய அரசு நெருக்கடி கொடுக்கிறது' என, மாநில அமைச்சரும், தேசியவாத காங்., மூத்த தலைவருமான நவாப் மாலிக் கூறினார்.இதற்கு, பா.ஜ., கடும் எதிர்ப்பு தெரிவித்தது.

'மத்திய அரசுக்கு எதிராக பொய்ப் பிரசாரத்தில் ஈடுபடுகின்றனர். நோய்த் தொற்றிலும் அரசியல் செய்கின்றனர்' என, பா.ஜ.,வைச் சேர்ந்த, முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்னவிஸ் கூறினார். இந்நிலையில், டாமனைச் சேர்ந்த, 'பிரக் பார்மா' என்ற மருந்து தயாரிப்பு நிறுவனத்தின் இயக்குனர் ஒருவரிடம், மும்பை போலீசார் விசாரணை நடத்தினர்.'அவரிடம், 60 ஆயிரம் குப்பி ரெம்டெசிவிர் மருந்துகள் இருந்தன. பதுக்கி வைக்கப்பட்டுள்ளதா என்பது குறித்து விசாரிக்கப்பட்டது. உரிய ஆவணங்கள் வைத்திருந்ததால், அனுப்பிவிட்டோம்' என, மும்பை போலீஸ் கூறியுள்ளது.


மிரட்டல்

இது குறித்து பட்னவிஸ் கூறியதாவது:டாமனைச் சேர்ந்த அந்த மருந்து தயாரிப்பு நிறுவனம், ஏற்றுமதி செய்வதற்காக மருந்துகள் வைத்திருந்தது. ஏற்றுமதிக்கு தற்போது தடை செய்யப் பட்டு உள்ளது. இதையடுத்து, அந்த மருந்தை மஹாராஷ்டிராவுக்கு அனுப்பும்படி கேட்டுக் கொண்டோம்.அதற்கு, மத்திய - மாநில அரசுகளின் அனுமதி தேவை என்பதால், அதற்கான முயற்சியில் இறக்கியுள்ளோம்.

இது குறித்து, மாநில அமைச்சரிடமும் தெரிவித்தோம்.ஆனால், பா.ஜ.,வுக்கு நல்ல பெயர் கிடைத்துவிடக் கூடாது என்பதற்காக, சிவசேனா அரசு அரசியல் நாடகம் ஆடுகிறது. விசாரணை, சோதனை என்ற பெயரில், மருந்து தயாரிப்பு நிறுவனங்களை மிரட்டுகின்றனர்.கொரோனா வைரஸ் பரவலை தடுக்க, முறையான நடவடிக்கைகள் எடுக்கவில்லை. நாங்கள் உதவ முயற்சித்தால், அதில் அரசியல் செய்கின்றனர்.

'எதிர்க்கட்சியின் கோரிக்கையை ஏற்று, எப்படி மருந்தை அனுப்பலாம்' என, அந்த நிறுவனத்தின் இயக்குனரை, ஒரு மாநில அமைச்சரின் உதவியாளர் மிரட்டியுள்ளார்.இவ்வாறு அவர் கூறினார். மஹாராஷ்டிரா அமைச்சரும், சிவசேனாவைச் சேர்ந்தவருமான ஆதித்ய தாக்கரே கூறுகையில், ''மாநிலத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால், ரெம்டெசிவிர் மருந்தை, சிலர் பதுக்கி வைப்பதாக புகார் வந்துள்ளது; அதை தடுக்கவே, இந்த அதிரடிச் சோதனைகளை நடத்துகிறோம்,'' என்றார்.

கொரோனா வைரஸ் பரவல் விவகாரத்தில், இவ்வாறு இரு தரப்பும் மாறி மாறி அரசியல் குற்றச்சாட்டுகளை முன் வைத்து வருகின்றன. இது, மக்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளது.


கவலை இல்லை!

நவாப் மாலிக் உள்ளிட்ட மஹாராஷ்டிரா அமைச்சர்களுக்கு, கொரோனாவால் மக்கள் படும் அவதி குறித்து கவலையில்லை. எதில் எல்லாம் அரசியல் செய்யலாம் என்பது தான் அவர்களது விருப்பம், நோக்கமாக உள்ளது.

தேவேந்திர பட்னவிஸ்

மஹா., முன்னாள் முதல்வர், பா.ஜ.,


விலை குறைப்பு

கொரோனா வைரஸ் இரண்டாவது அலை தீவிரமடைந்துள்ளதால், ரெம்டெசிவிர் மருந்துக்கு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து, மருந்து தயாரிப்பு நிறுவனங்களுடன், மத்திய அரசு சமீபத்தில் பேச்சு நடத்தியது.இதன்படி, மாதத்துக்கு, 28 லட்சம் குப்பிகளாக இருந்த தயாரிப்பு, 41 லட்சமாக உயர்ந்து உள்ளது. இதைத் தவிர, இந்த மருந்துக்கான விலையை, ஏழு மருந்து தயாரிப்பு நிறுவனங்கள் குறைத்துள்ளன. சராசரியாக, 39 சதவீதம் அளவுக்கு விலை குறைந்துள்ளது.

'சைடஸ் காடிலா' நிறுவனம், 2,800 ரூபாயில் இருந்து, 899 ரூபாயாக குறைத்துள்ளது. 'டாக்டர் ரெட்டிஸ்' நிறுவனம், 5,400 ரூபாயில் இருந்து, 2,700 ரூபாயாக குறைத்துள்ளது.கடந்த ஒரு வாரத்தில் மட்டும், மாநிலங்களுக்கு, ஏழு லட்சம் குப்பி மருந்து அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக, பா.ஜ.,வைச் சேர்ந்த, மத்திய ரசாயனத் துறை அமைச்சர் சதானந்த கவுடா, சமூக வலைதளத்தில் பதிவிட்டுள்ளார்.


மூன்று பேர் கைது

கர்நாடக மாநிலம் பெங்களூரில், ரெம்டெசிவிர் மருந்தை பதுக்கியதாக, மருந்துக் கடை நடத்தி வரும் மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். பதுக்கிய அந்த மருந்தை, கள்ளச் சந்தையில், 10 ஆயிரத்து, 500 ரூபாய்க்கு அவர்கள் விற்றது தெரியவந்தது.

Advertisement


வாசகர் கருத்து (4)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
sankaseshan - mumbai,இந்தியா
19-ஏப்-202121:14:55 IST Report Abuse
sankaseshan உதவாக்கரை களும் ஓரம்கட்டப்பட்ட கூட்டணி கட்சிகளும் வேறென்ன செய்ய தெரியும் மோடியை திட்ட தெரியும் உழைப்பவனை பார்த்து பொறாமை .
Rate this:
Cancel
Jayvee - chennai,இந்தியா
19-ஏப்-202119:54:30 IST Report Abuse
Jayvee நவாப் malik.. பச்சை பின்ன எப்படி பேசுவாரு
Rate this:
Cancel
RajanRajan - kerala,இந்தியா
19-ஏப்-202107:38:24 IST Report Abuse
RajanRajan உங்க சண்டையிலே மருந்து குப்பியை ஒடச்சுராதீங்கப்பா
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X