சம்பவம் செய்தி

தமிழ்நாடு

போக்குவரத்திற்கு லாயக்கற்ற சாலையால் மக்கள் அவதி

Added : ஏப் 18, 2021
Share
Advertisement
புவனகிரி : ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலை வரை செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர். புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலையை சந்திக்கும் வகையில் தார் சாலை உள்ளது. புவனகிரி சுற்றுப்பகுதியில் இருந்து வருபவர்கள் மற்றும் வயல்களுக்கு செல்பவர்கள் இந்த

புவனகிரி : ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலை வரை செல்லும் சாலை போக்குவரத்திற்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால் பொதுமக்கள் அவதிக்கு உள்ளாகியுள்ளனர்.

புவனகிரி அடுத்த ஆலம்பாடியில் இருந்து உடையூர், மருதுார் இணைப்பு சாலையை சந்திக்கும் வகையில் தார் சாலை உள்ளது. புவனகிரி சுற்றுப்பகுதியில் இருந்து வருபவர்கள் மற்றும் வயல்களுக்கு செல்பவர்கள் இந்த சாலையை பயன்படுத்தி வருகின்றனர்.மேலும், மருதுார், தலைக்குளம், உளுத்துார், அம்பாள்புரம், பிரசன்னராமாபுரம் வழியாக பின்னலுார் பகுதிக்கும் கொளக்குடி வழியாக வடலுார், உடையூர் வழியாக சேத்தியாத்தோப்பு பகுதிக்கும் சென்று வருகின்றனர்.

தற்போது இந்த சாலையில் கற்கள் பெயர்ந்து குண்டும், குழியுமாக போக்குவரத்துக்கு லாயக்கற்ற நிலையில் இருப்பதால், இரு சக்கர வாகனங்களில் செல்வோர் கடும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர். இரவு நேரத்தில் இந்த சாலையை கடந்து செல்ல அச்சமடைகின்றனர். எனவே பொதுமக்கள் மற்றும் விவசாயிகளின் நலன் கருதி சாலையை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X